லோன் வேணுமா? ரூ.50000 அளிக்கும் அன்னபூர்ணா யோஜனா.. பெண்களுக்கான சூப்பர் திட்டம்.. மத்திய அரசு சபாஷ்
சென்னை: பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், வாழ்வாதாரத்துக்காகவும் மத்திய அரசு வழங்கும் சூப்பரான 2 திட்டங்கள் என்னென்ன தெரியுமா?
நம்முடைய நாட்டில் ஆண்களுக்கு சமமாக பெண்களும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும், அனைத்து துறைகளிலும் பெண்களும் முன்னேற வேண்டும் என்பதில் மத்திய அரசு பெருத்த அக்கறையை செலுத்தி வருகிறது. குறிப்பாக, சுயதொழில் செய்து பெண்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, நிறைய சலுகைகளை வழங்கி வருகிறது.

சுயதொழில்: தற்போது, சுயதொழில் செய்து சம்பாதிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்தபடியே வருவதால், இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது..
ஆனால், சுயதொழில் தொடங்குவதற்கு, மூலதனம் என்பது பெரிய தடையாக இருக்கிறது.. போதுமான நிதிவசதி இல்லாத காரணத்தினால், பல பெண்களால் சுயமாக தொழில் தொடங்க முடிவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு கை கொடுத்து உதவுவதற்காகவே கொண்டுவரப்பட்டதுதான் அன்னபூர்ணா யோஜனா திட்டம்.,
ஊக்குவிப்பு: மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், உணவு கே பிசினஸில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ. 50,000 வரை வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.
அதன்படி, சமையல் பாத்திரங்கள், சமையல் கருவிகள், உணவுப் பொருட்கள், உணவு மேஜை உள்ளிட்டவை வாங்குவதற்காக இந்த தொகையை பெண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த கடனுக்கு அப்ரூவல் வந்தபிறகு முதல் தவணையை செலுத்த தேவையில்லை. அதற்கு பிறகு, கடனை எளிய தவணை முறையீல் 36 மாதங்கள் அதாவது 3 வருடங்களுக்குள் திருப்பி செலுத்தலாம். வட்டி விகிதம் மட்டும் சந்தை நிலவரம்படி மாறக்கூடும்.
கடன்தொகை: சுருக்கமாக சொல்லப்போனால், இந்த கடன் தொகையை பெண்கள் தங்களது தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தி, தானும் முன்னேற வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாகும். சுயதொழில் தொடங்க வழியில்லாத பெண்களுக்கு மட்டுமல்ல, சுயமாக தொழில் தொடங்க ஆர்வம் இல்லாத பெண்களுக்கும், ஆக்கத்தையும், ஊக்கத்தையும் தந்து வருகிறது வருகிறது இந்த அன்னபூர்ணா திட்டம்.
இதனை பெற விரும்பும் நபர்கள் கூடுதல் தகவலுக்கு எஸ்பிஐ வங்கியின் கிளைகளை தொடர்பு கொள்ளலாம்... SBI வங்கியின் மூலமாகவே தங்களது கடன் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை போலவே, பெண்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் லக்பதி திதி யோஜனா திட்டமாகும்... இந்த திட்டத்தின்படி, பெண்களுக்கு வட்டியின்றி கடன் வழங்கப்படுகிறது.. முற்றிலும் வட்டி இல்லாத இந்தக் கடன் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கும்.
ஒரே ஒரு கண்டிஷன்: அரசாங்கம் பெண்களிடையே பொருளாதார வலுவூட்டல் மற்றும் நிதி சுதந்திரத்தை உருவாக்கி நிறுவ முயற்சிக்கும் திட்டமாக இந்த திட்டம் கருதப்படுகிறது.. இந்த திட்டத்தின் பலனை பெற வேண்டுமானால், சுய உதவிக் குழுவில் (SHG) உறுப்பினர்களாக இருகக் வேண்டும். இந்த ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே உள்ளது..
இந்த லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ், வணிகப் பயிற்சி அளிப்பது, பொருட்களை சந்தைக்கு வழங்குவது, தேவையான திறன்கள் மற்றும் பயிற்சி அளிப்பது என அனைத்தும் செயல்படுத்தப்படுகிறது.
கால்நடை: அதுமட்டுமல்ல, கோழி வளர்ப்பு, எல்இடி பல்பு உற்பத்தி, விவசாயம், காளான் வளர்ப்பு, ஸ்ட்ராபெர்ரி சாகுபடி, கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, கைவினை வேலை, ஆடு வளர்ப்பு என அனைத்திற்கும் கடனை பெறலாம். இதுகுறித்த கூடுதல் தகவலுக்கு, https://lakhpatididi.gov.in/ என்ற வெப்சைட்டை அணுகலாம்..












Click it and Unblock the Notifications