சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

50 பேராமே.. வேலையை ஆரம்பித்த திமுக.. எடப்பாடிக்கு தூக்கமே போச்சு.. விழிக்கும் தொண்டர்கள்

அதிமுகவில் 50 எம்எல்ஏ-க்கள் திமுகவுடன் தொடர்பில் உள்ளது உண்மையா

Google Oneindia Tamil News

சென்னை: 10 திமுக எம்எல்ஏக்கள் தங்களிடம் தொடர்பில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமியும், 50 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக ஆர்எஸ் பாரதியும் பேசிய பேச்சுக்கள் பெருத்த விவாதத்தை கிளப்பி விட்டு வருகிறது.

அதிமுகவில் அதிகார சண்டை நடந்து கொண்டிருக்கிறது.. 2 ஆக கட்சி பிரிந்துள்ளது.. இது தொடர்பான சட்டரீதியான விஷயங்கள் நடந்துவந்தாலும், தொண்டர்கள் யார் பக்கம் போவது என்று தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு களேபரங்கள் இருந்தாலும், திமுகவை விமர்சிப்பதை மட்டும் எடப்பாடி பழனிசாமி கைவிடவில்லை. டைம் கிடைக்கும்போதெல்லாம், திமுக அரசை நறுக் நறுக்கென கேள்வி கேட்டு வருகிறார்..

அதிமுகவுடன் டச்சில் 10 திமுக எம்எல்ஏக்கள்- சும்மா அடித்துவிட்ட எடப்பாடி.. அலறும் தேசிய அரசியல்!அதிமுகவுடன் டச்சில் 10 திமுக எம்எல்ஏக்கள்- சும்மா அடித்துவிட்ட எடப்பாடி.. அலறும் தேசிய அரசியல்!

 அமாவாசை

அமாவாசை

நேற்றுமுன்தினம்கூட, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.. அப்போது வழக்கம்போல் குற்றச்சாட்டுகளை சொல்லி வந்தார்.. "முதல்வர் ஸ்டாலின் 38 அறிவிப்புகள் கொண்டுவந்து 38 குழு அமைத்து விட்டார்... பேசாமல் இந்த அரசாங்கத்துக்கு குழு அரசாங்கம் என்றே பெயர் பெயர் வைத்துவிடலாம்..
இப்பவே ஆட்சிப் பொறுப்பேற்று 15 மாதங்கள் ஓடிவிட்டன... இந்த 5 வருடத்தில் 60 அமாவாசை, 15 அமாவாசை போய்விட்டது... இன்னும் 45 அமாவாசை மிச்சம் இருக்கிறது. குழு அமைப்பதற்கே 15 மாதங்களாகிவிட்டது" என்று கிண்டலடித்திருந்தார்.

 ஆர்எஸ் பாரதி

ஆர்எஸ் பாரதி

திருவள்ளூரில் நேற்றுகூட, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்றார்.. எடப்பாடி கூறிய இந்த கருத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி நேற்றைய தினமே பதிலளித்திருந்தார்.. "அதிமுக-வில் உள்ள அனைவரும் திமுக-வில் இணைந்து பயணிக்க வேண்டும்.. அதிமுகவில் உள்ள 50 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 30 மாவட்டச் செயலாளர்கள், 2 எம்பி-க்கள் திமுக-வுடன் தொடர்பில் இருக்கிறார்கள்..

லிஸ்ட்

லிஸ்ட்

எடப்பாடி பழனிசாமி 10 பேர் கொண்ட அந்த பட்டியலை வெளியிட்டால், தானும் பட்டியலை வெளியிடுவேன்.. அதிமுகவில் இருந்து பல பேர் திமுகவிற்கு வந்துவிட்டனர். அதனால்தான் அதிமுகவில் உள்ள அனைவரும் திமுகவில் இணைந்து பயணிக்க வேண்டும்" என்றார். ஆளுக்கு ஒரு பக்கம் இப்படி சொல்லி இருந்ததால், இருகட்சிகளுக்குள்ளும் புயல் அடிக்க ஆரம்பித்துவிட்டது.. யார் அந்த 10 எம்எல்ஏக்கள் என்று திமுக தரப்பும், யார் அந்த 50 எம்எல்ஏக்கள் என்று அதிமுக தரப்பும் மண்டை காய்ந்து வருகின்றன..

 ஃபைல்கள்

ஃபைல்கள்

இதுகுறித்த விவாதங்களும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன.. இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் சிலரிடம் நாம் பேசினோம்.. "எடப்பாடிக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளன.. இதில் பெரும்பாலான நெருக்கடி திமுக தரப்பில் இருந்துதான் எழக்கூடும்.. ஏற்கனவே, கொடநாடு விவகாரம் உள்ளது.. அடுத்து நெடுஞ்சாலை ஊழல் வழக்கு, ஸ்டாலினின் கையில் தான் உள்ளது.. அடுத்து, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை என பல பிரச்சனைகள் எடப்பாடியை சூழ்ந்துள்ளன.. இவைகளில்கொடநாடு + தூத்துக்குடி விவகாரங்களை மட்டுமே ஸ்டாலின் முன்னிலைப்படுத்தக்கூடும் என்கிறார்கள்..

 எரிச்சல்கள்

எரிச்சல்கள்

சமீபகாலமாக அவரது பேச்சும், அதை மையப்படுத்தியே வருவதாக கூறப்படுகிறது.. இதைதவிர, தன்னுடைய செல்வாக்கு நிறைந்த கொங்குவில், திமுக சமீபகாலமாக ஆதரவை பெற்று வருகிறது.. இன்னொரு பக்கம் ஓபிஎஸ்ஸுக்கு மறைமுக ஆதரவை தந்து வருவது, இப்படி பல எரிச்சல்கள் எடப்பாடிக்கு திமுக மீது உள்ளது.. அதனால்தான், திமுகவை கடுப்பையேற்ற, எடப்பாடி 10 எம்எல்ஏக்கள் என்று சொல்லி இருக்கலாம்.. அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை..

 ஆறுக்குட்டி

ஆறுக்குட்டி

சொந்த கட்சியின் ஆறுக்குட்டி, அய்யப்பனையே அவரால் இழுத்து பிடித்து வைத்துக் கொள்ள முடியவில்லையே.. இதற்கு பதிலடியாகத்தான் 50 அதிமுக எம்எல்ஏக்கள் என்று ஆர்எஸ் பாரதி தெரிவித்திருக்கலாமே தவிர, 2 பேருமே சொல்வதில் உண்மைதன்மை இருப்பது போல் தெரிவதில்லை. அதிலும் 50 எம்எல்ஏக்கள் எடப்பாடி பக்கம் இருக்கிறார்களா? என்றுகூட உறுதியாக தெரியவில்லை.." என்றனர்.

English summary
Are ADMK mlas, District Secretaries are talking with DMK and what did RS Bharathi say 50 எம்எல்ஏ-க்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக ஆர்எஸ் பாரதி கூறியது உண்மையா?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X