சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அமித்ஷா".. அங்கே பாஜக.. இங்கே திமுக.. ம்ஹூம், சிக்கி திணறும் "தலைவர்".. அடித்து ஆடும் எடப்பாடி..!

எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ் பாஜக ஆதரவால் சமாளிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஒருபக்கம் பாஜகவும், இன்னொரு பக்கம் திமுகவும் ஓபிஎஸ்ஸுக்கு முட்டுக்கொடுத்து தாங்கி பிடித்து வருகிறது.. இருந்தபோதிலும் ஓபிஎஸ்ஸுக்கு இதனால் நன்மை இல்லை, காரணம், அதிமுக இப்போதும் எடப்பாடியிடம்தான் இருக்கிறது என்று தன் கருத்தை நம்மிடம் பதிவு செய்துள்ளார் பத்திரிகையாளர் மணி.

தமிழ் ஒன் இந்தியாவுக்கு பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான மணி ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அவரிடம் அதிமுகவில் நிலவும் பூசல்கள், அதை எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் கையாளும் முறை, அதிமுக விவகாரத்தில் பாஜகவின் தலையீடு, பாஜகவின் எதிர்பார்ப்புகள் குறித்தெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மணி விரிவான விளக்கம் தந்தார்.. அப்போ, ஓபிஎஸ்ஸுக்கு பாஜகவின் ஆதரவு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை எதிர்க்க அது ஒன்று மட்டுமே போதுமா? என்ற கேள்வியை ஒன் இந்தியா சார்பில் முன்வைத்தோம்.. அதற்கு மணி சொன்ன பதில் இதுதான்:

எல்லை மீறாதீங்க! பாஜக எம்பிக்களின் ஆடை, ஷூ, மோதிரம் பற்றி நாங்க பேசினால்.. அவ்ளோதான் -மஹுவா மொய்த்ரா எல்லை மீறாதீங்க! பாஜக எம்பிக்களின் ஆடை, ஷூ, மோதிரம் பற்றி நாங்க பேசினால்.. அவ்ளோதான் -மஹுவா மொய்த்ரா

 டாக்குமெண்ட்கள்

டாக்குமெண்ட்கள்

பாஜகவின் ஆசியை மட்டுமே வைத்துகொண்டு, எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ்ஸால் சமாளிக்க முடியாது.. வேண்டுமானால், சின்ன சின்ன விஷயங்களை கையில் எடுக்கலாம்.. அன்று, அதிமுக கட்சி ஆபீசில் வன்முறை நடந்தபோது, போலீஸ் வேடிக்கை பார்த்ததே அது போல.. மத்திய மாநில அரசின் உதவியில்லாமல், இப்படி பகிரங்கமாக, கட்டுக்கட்டாக டாக்குமெண்ட்களை எடுத்து செல்ல முடியாது.. சொந்த கட்சி அலுவலகத்தில் இருந்தே கொள்ளையடித்து சென்றார் ஓபிஎஸ்..

 90 + 110

90 + 110

இதையெல்லாம் போலீஸ் வேடிக்கை பார்த்தது.. சிபிசிஐடி உத்தரவு பிறப்பித்தும்கூட, மாநில அரசு ஒரு காலமாக அதுகுறித்த நடவடிக்கையை எடுக்கவில்லை.. கடைசியில் சி.வி சண்முகம் இது தொடர்பாக மனு தாக்கல் செய்தபிறகுதான், அந்த விசாரணைக்கு மாநில அரசு செல்கிறது.. அதனால், பாஜக பின்னிருந்து ஓபிஎஸ்ஸை சப்போர்ட் செய்வது அனைவருக்குமே தெரியும்.. ஆனாலும், அதிமுக நிர்வாகிகளை பொறுத்தவரை 90 சதவீதத்துக்கு மேல் எடப்பாடி பக்கம்தான் இருக்கிறார்கள்.. அதனால், மோடி ஆதரவை மட்டும் வைத்து கொண்டு, ஓபிஎஸ்ஸால் அதிமுகவை கைப்பற்ற முடியாது..

 கறார் சப்போர்ட்

கறார் சப்போர்ட்

சுயபலத்தில் நிற்பவர் மட்டுமே ஜெயிக்க முடியும்.. இன்னொருவர் பலத்தில் நிற்பவர் என்றைக்குமே ஜெயிக்க முடியாது.. ஒருபக்கம் பாஜகவும், இன்னொரு பக்கம் திமுகவும் ஓபிஎஸ்ஸுக்கு முட்டுக்கொடுத்து தாங்கி பிடிக்கிறது.. ஆனால் கட்சி இப்போதும் எடப்பாடியிடம்தான் இருக்கிறது.. டிடிவி தினகரனுக்காவது சொந்தமாக கட்சி இருக்கிறது.. சசிகலாவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.. அவராகவே பொதுச்செயலாளர் என்று பெயர் போட்டுக் கொள்கிறார்.. செல்லும் இடங்களிலும் கூட்டம் சேருவதில்லை.. அன்றிருந்த அமமுகவின் செல்வாக்கும் இன்று இல்லை.

 முடிசூடா ராணி + கறார்

முடிசூடா ராணி + கறார்

களத்தில் இப்போது எந்த ஆதரவும் இல்லை.. ஆரம்பத்தில் அன்றைக்கு அவருக்காக சேர்ந்த கூட்டம்கூட, அமமுகவுடைய கூட்டம்தான்.. யாரும் சசிகலா கூட்டத்துக்கு போகக்கூடாது என்று வெளிப்படையாகவே டிடிவி தினகரன் சொல்லிவிட்டதால், அந்த ஆதரவும் சசிகலாவுக்கு இல்லாமல் போய்விட்டது. எனக்கு இதெல்லாம் பார்க்கும்போது பரிதாபம்தான் வருகிறது.. அன்று முடிசூடா ராணியாக இருந்தார் சசிகலா.. அன்று தொழிலாளர்கள், மந்திரிகள், கட்சி நிர்வாகிகள் என அத்தனை பேரும் சசிகலா காலில் விழுந்து கிடந்தார்கள்..

 90+ சீட்கள்

90+ சீட்கள்

அன்று ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபிறகு, அவர்மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை, சசிகலாவிடம்தான் தந்தார் ராணுவ அதிகாரி.. பொதுவாக, குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுகளிடம்தான் போர்த்தப்பட்ட துணியை தருவார்கள்.. ஆனால், சசிகலாவிடம் ராணுவ அதிகாரி தேசிய கொடியை எடுத்து தந்தார்.. இது மிகப்பெரிய உயரிய மரியாதை.. அந்த அளவுக்கு செல்வாக்கு அவருக்கு இருந்தது.. ஆனால், அதை கெடுத்துக் கொண்டதே சசிகலாதான்.. மோடியின் கணக்கு புரியாமல், அரசியல் புரியாமல், முதலமைச்சராக வர ஆசைப்பட்டு, ஜெயிலுக்கு போனாங்க.. இன்றைக்கு செல்வாக்கு இல்லாமல் இருக்கிறார்.

 லீலா பேலஸில்

லீலா பேலஸில்

அவரை ஓபிஎஸ் துணைக்கு அழைத்தாலும் லாபம் இல்லை.. அமமுகவுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது.. 2021 தேர்தலில் 23 தொகுதிகளில் அமமுக வாக்குகளால்தான் அதிமுக தோற்றது. அமித்ஷா அன்று சென்னை வந்தபோது, லீலா பேலசில் பலமுறை சொன்னார்.. தினகரனை கூட்டணியில் வைத்து கொள்ளுங்கள், நான் 20 சீட்டுக்கு அவரை சம்மதிக்க வைக்கிறேன் என்றார்.. இதற்கு ஓபிஎஸ்ஸும் ஓகே சொன்னார்.. ஆனால், எடப்பாடி மட்டும் பிடிவாதம் பிடித்தார்.. டிடிவியுடன் அன்று கூட்டணி வைத்திருந்தால் 90 சீட்டுக்கு மேல் அதிமுக போயிருக்கும்.. ஜெயலலிதா சொல்வது போல், இன்று மைனாரிட்டி திமுக அரசாக இது இருந்திருக்கும்..

 மேஜிக் நம்பர்

மேஜிக் நம்பர்

ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத நிலையில், பாஜக போன்ற மைனஸ் பிம்பம் உடைய கூட்டணியை வைத்து கொண்டு, 66 சீட்டுகளை அதிமுக வாங்கியது என்பது பெரிய விஷயம்.. அன்று 2006-ல் ஜெயலலிதா தோற்றபோது, 61 சீட்தான் அவரால் வாங்க முடிந்தது.. ஆனால், அதிமுக கூட்டணி 75 சீட்களை வாங்கியிருக்கிறார்கள்.. அமுமுக கூட்டணிக்குள் இருந்திருந்தால் 90 சீட்டுகளை தாண்டி போயிருப்பார்கள்.. 118 என்ற மேஜிக் நம்பரும் திமுகவுக்கு கிடைத்திருக்காது. அதனால், அதிமுகவில் உள்ள இரு தலைவர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே.. இதை புரிந்துகொள்ளவிட்டால் திமுகவுக்குதான் கொண்டாட்டம்" என்றார்.

English summary
Are BJP and DMK parties supporting OPS? What will Edapadi Palanisamy do the next எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ் பாஜக ஆதரவால் சமாளிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X