2 மேட்டர்கள்.. 4 புள்ளிகள்... "தலைவரே, இதுவா சமூகநீதி?".. ஸ்டாலினுக்கு சிக்கல்.. குழப்பத்தில் கோட்டை
அறிவாலயத்துக்கு அதிருப்தியாளர்கள் புகார்களை தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்
சென்னை: நாளுக்கு நாள் திமுகவில் புகைச்சல்களும், அதிருப்திகளும் அதிகமாகி கொண்டே வரும் நிலையில், ராஜ்யசபா தேர்தல் விவகாரத்திலும் பிரச்சனை வெடித்துள்ளது.. அது தொடர்பாக அறிவாலயம் வரை புகார்கள் எட்டிவிட்டதாம்..!
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் ஜூன் மாதம் நடக்கவிருக்கிறது.. இந்த 6 இடங்களில் 4 திமுகவுக்கு உறுதியான இடங்கள்.
தமிழகத்திலிருந்து தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் அ.தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்.பி.க்களுக்கும் வருகிற 29.6.2022 அன்று பதவிக்காலம் முடிகிறது.

ராஜினாமா
இதில், ராஜேஷ்குமார், அதிமுக ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த வைத்தியலிங்கம் எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றிப்பெற்றதால் கடந்த வருடம் ராஜினாமா செய்த நிலையில், அந்த இடத்துக்கு நடந்த ராஜ்யசபா இடைத்தேர்தலில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டவர். வைத்தியலிங்கம் ராஜினாமா செய்தபோது அவருக்கு ஓராண்டு பதவி காலம் இருந்தது. அதனால் அந்த இடத்துக்கும் சேர்ந்துதான் 6 இடங்கள். இந்த நிலையில்தான், இப்பதவிகளுக்கான முட்டல், மோதல்கள் வலுப்பெற்று வருகிறது.

ராஜேஷ்குமார்
அந்த வகையில், ராஜேஷ்குமார் முதல் பிரச்சனையை துவங்கி உள்ளார்.. "ஓராண்டு தான் நான் பதவியில் இருந்தேன்.. அதனால் மீண்டும் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும்" என்று உதயநிதி, அன்பில்மகேஷ் ஆகியோரிடம் காய்களை நகர்த்தி வருகிறாராம் ராஜேஷ்குமார்... ஆனால் அவருக்கு மட்டும் கொடுக்கக் கூடாது என்று வரிந்து கட்டுகிறார்கள் திமுகவினர்.. காரணம், நாடாளுமன்றத்தில் ஓராண்டில் அவர் பெரிதாக என்ன சாதித்தார் ? எதுவும் இல்லையே... ராஜ்யசபா எம்.பி. பதவியை வாங்கி வைத்துக் கொண்டு கட்சிக்கு பிரயோஜனம் தேவை என்று எதிர்க்கிறார்களாம்.

ஆர்எஸ் பாரதி
அதேபோல, பதவி காலம் முடியும் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி இருவரும் கட்சியின் மேலிடத்தில் இருப்பதால் அந்த செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் ஒருமுறை வாய்ப்புகளை தட்டி பறிக்க வேண்டும் என கோதாவில் இறங்கியுள்ளனராம். அதேபோல, ராஜ்யசபா இடங்களை கைப்பற்ற திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களின் வாரிசுகள் அல்லது உறவுகளுக்கு வாங்கித் தந்திட வேண்டும் என்றும் பகீரத முயற்சியில் இருக்கின்றனர்.

அறிவாலயம்
இப்படிப்பட்டசூழலில், கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு உண்மையான தொண்டர்கள் எழுதிய கடிதங்கள் அறிவாலயத்தில் குவிய தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, "திமுகவில் ராஜ்யசபா இடங்களுக்கு குறிப்பிட்ட ஓரிரு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படுகிறது.. வாய்ப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படுகிறது.. தலைமையிடம் நெருக்கமாக இருக்கும் சிபாரிசுகளுக்கே வாய்ப்பளிக்கப்படுகிறது.

சமூக நீதி
தொடர்ச்சியாக இப்படியே நடந்தால் திமுகவுக்காக சிங்கிள் டீ குடித்து விட்டு 40 ஆண்டுகாலமாக உழைத்துக் கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு எப்பத்தான் வாய்ப்பு கொடுப்பீர்கள் தலைவரே... குறிப்பிட்ட சமூகம் மட்டுமே திமுகவுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்கவைக்கவில்லை.. எல்லா சமூகங்களும் ஆதரித்ததால் தான் திமுக ஜெயித்தது. அந்தச் சமூகங்களுக்கெல்லாம் எப்போது வாய்ப்பு கிடைக்கும் தலைவரே? ஆளும் கட்சியாக இருக்கும் போது எல்லோரையும் அரவணைக்கும் சமூக நீதியை கடைப்பிடித்தால் தான் எதிர்க்கட்சியாக திமுக இருக்கும் போதும் கட்சிக்காக தொண்டர்கள் உழைப்பார்கள் தலைவரே என்றெல்லாம் தங்களின் மனக்குமுறல்களை எழுதி அனுப்புகிறார்களாம்"..!

சீனியர்கள்
தொண்டர்களே மனவேதனை அடைந்து கடிதங்களை எழுத ஆரம்பித்துவிட்டதால், திமுக மேலிடத்துக்ககு சிக்கலும், குழப்பமும் ஏற்பட்டு வருகிறதாம்.. இந்த விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின் எப்படி அணுக போகிறார்? யாருக்கு சீட் தரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. திமுகவில் தொடர்ந்து சீனியர்களே பொறுப்பில் உள்ள நிலையில், அதுதான் தற்போது வெடித்து கிளம்பி உள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!
-
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி? -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி












Click it and Unblock the Notifications