• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த "விக்கெட்டு".. வைகோ இப்படி முடிவு எடுத்தாரா, ஸ்டாலினுக்கு தெரியுமா.. அப்ப பாஜக? ஹாட் அறிவாலயம்

Google Oneindia Tamil News

சென்னை: மதிமுகவில் நாளுக்குநாள் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அறிவாலயம் படுபிஸியாக காணப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே மதிமுகவில் அதிருப்தி நிலவி வருகிறது.. கட்சியின் தலைமை கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்படுவதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், உயர்நிலைக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம், வழக்கறிஞர் அணிச் செயலாளர் பாரத மணி ஆகிய 5 பேர் மட்டும்தான் அப்போது போர்க்கொடி தூக்கினர்.

பாடத்திட்டத்தில் இருந்து பெரியார் பாடம் நீக்கம்! மதவெறியை புகுத்தும் பாஜக! வைகோ கடும் கொந்தளிப்பு..! பாடத்திட்டத்தில் இருந்து பெரியார் பாடம் நீக்கம்! மதவெறியை புகுத்தும் பாஜக! வைகோ கடும் கொந்தளிப்பு..!

 அடுத்த அதிருப்தி

அடுத்த அதிருப்தி

இதையடுத்துதான், மேலும் அதிருப்தியாளர்கள், சீனியர்கள் என பெருகினர்.. வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட ஒரு கட்சியிலேயே வாரிசு அரசியல் எழலாமா? என்று தலைமைக்கு எதிராக கொந்தளித்தனர்.. இதுக்கு பேசாமல் திமுகவுடனேயே கட்சியை இணைத்து விடலாம் என்றும் கோரிக்கை விடுத்தனர்.. ஆனால், இதை மதிமுகவின் இன்னொரு தரப்பு கண்டுகொள்ளவே இல்லை.. இந்த கோரிக்கையும் பரிசீலிக்கவில்லை.

உள்நோக்கம்

உள்நோக்கம்

இந்த சூழலில்தான் பாஜக என்ட்ரி ஆரம்பமானது.. திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்கள் என்பதை பார்த்து, அவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்கும் வேலையை தமிழக பாஜக நன்றாக செய்யும்.. இதை சிறப்பாக செய்தவர் எல்.முருகன்தான்.. விபி துரைசாமி முதல் குஷ்பு வரை பாஜக பக்கம் திருப்பிய பெருமை இவரையே சாரும்.. ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள், விஐபிக்களை கட்சிக்குள் இணைத்த பெருமையும் முருகனையே சாரும் என்பதை மறுக்க முடியாது.

அதிமுக

அதிமுக

அந்த வகையில், திமுக, அதிமுகவையும் தாண்டி, இப்போது மதிமுக பக்கம் பாஜகவின் கவனம் திரும்பியதாக கூறப்பட்டது.. குறிப்பாக, மதிமுகவில் வாரிசு அரசியலை எதிர்க்கும், 10 மாவட்ட செயலர்கள், மூன்று உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சிகள் துவங்கியதாக சொல்லப்பட்டது.. ஆனால், அதிருப்தியாளர்கள் பாஜகவைவிட திமுகவில் இணையவே ஆர்வம் காட்டினார்களாம்..

அதிருப்தியாளர்கள்

அதிருப்தியாளர்கள்

அதனால்தான், 2 மாதங்களுக்கு முன்பேயே, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைவதற்கு அதிருப்தியாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதற்காக அண்ணா அறிவாலயத்திலேயே வட்டமடித்து வருவதாகவும் செய்திகள் பரபரத்தன.. ஆனால், இந்த விஷயத்தில் திமுக மேலிடம் உடனே ஓகே சொல்லவில்லை... கூட்டணியில் மதிமுக இருப்பதால், அதிருப்தியாளர்களை சேர்ப்பதில் தயக்கம் காட்டுவதாகவும், ஒருவேளை வைகோ விரும்பினால் இணைப்பு பற்றி யோசிக்கலாம் என்று முதல்வர் தரப்பு சொன்னதாகவும் தெரிகிறது..

அதிருப்தியாளர்கள்

அதிருப்தியாளர்கள்

இதனால், குழம்பி போன அதிருப்தியாளர்கள், ராஜ்யசபா தேர்தலுக்கு முன்பு, திமுகவில் தங்களை சேர்க்கவில்லை என்றால், பாஜகவில் இணையலாம் அல்லது அதிமுகவில் கூட இணையலாம் என்ற முடிவை அப்போது எடுத்திருந்தனர். இதற்குதான் இப்போது கிளைமாக்ஸ் நெருங்குவதாக தெரிகிறது.. மதிமுக அதிருப்தியாளர்கள் சேர்ந்து, இலங்கை தமிழர்களுக்கான நிவாரண தொகையை முதல்வரிடம் அளிக்க தேதி கேட்டிருக்கிறார்களாம்.. நிவாரண நிதி வழங்குற மாதிரி திமுகவில் ஐக்கியமாகவும் துண்டு போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..

மதிமுக

மதிமுக

ஆனால், இன்னொரு விஷயமும் கசிந்து வருகிறது.. சில மாவட்டச் செயலர்கள், மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் வேலையில் இறங்கி உள்ளார்களாம்.. அதுவும் திரைமறைவில் வேலை மும்முரமாக நடக்கிறதாம்.. வாரிசு அரசியல் என்ற காரணத்தை சொல்லிதான் வைகோ திமுகவில் இருந்து வெளியேறினாலும், இப்போது அதே பிரச்சனையில் அவரே நேரடியாக சிக்கி கொண்டுள்ளதால், மீண்டும் திமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

திமுக

திமுக

மதிமுக ஒருவேளை திமுகவில் இணைந்தால், அக்கட்சியின் அதிருப்தியாளர்கள் முதலில் மகிழ்ச்சி அடைவார்கள்.. கட்சியும் பலப்படும்.. இனிமேல் தேர்தல் சமயங்களில் சின்னம் பிரச்சனை எழ வாய்ப்பிருக்காது.. என்றும் கணித்து சொல்கிறார்கள்.. இது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆக போகிறது என்று தெரியவில்லை.. ஒருவேளை மதிமுக திமுகவில் இணைய போகிறதா? அல்லது அதிருப்தியாளர்கள் திமுகவில் இணைய போகிறார்களா? தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
Are MDMK and dissidents joining dmk and What is Leader vaiko going to do next மதிமுக அதிருப்தியாளர்கள் திமுகவில் இணைவதாக கூறப்படுகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X