Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாங்கிய பட்டங்கள் போலியா? சிக்கலில் தவெக வேட்பாளர் சத்தியகுமார்? சர்ச்சையில் பொற்கொடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் முதல் தவெக வேட்பாளர் சத்தியகுமார் வரை சிலர் தங்களின் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள பட்டப்படிப்பு தொடர்பாகப் பல சந்தேகங்கள் சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அளித்துள்ள பிரமாணப் பத்திரங்கள் சமூக ஊடகங்களில் விவாதத்திற்குச் சரியான தீனியாக அமைந்துள்ளன. கட்சிப் பாகுபாடு இல்லாமல் பலரும் இந்தப் புகாரில் சிக்கியுள்ளனர்.

Are the Degrees Fake Is TVK Sathyakumar in Trouble Is Porkodi Embroiled in Controversy

ஒரு காட்சி ஊடக விவாதத்தில் காளியம்மாள், பேசுகையில் 'படத்தில் நடித்த விஜய்யே 800 கோடிக்குச் சொத்துக் கணக்குக் காட்டி இருக்கிறார். அவரை வைத்து படம் எடுத்த முதலாளி சொந்த கார் இல்லை என்று சொல்லி இருக்கிறார்" என்று திமுக மீது மறைமுகமாக விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அந்த காணொளி இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மற்றொரு பக்கம் விஜய் பெரம்பூர் தொகுதியில் 28.03.2026 அன்று தாக்கல் செய்த பத்திரத்தில் 52 வயது எனக் குறிப்பிட்டிருந்தார். ஏப்ரல் 1 ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதி வேட்புமனுவில் 51 என மாற்றிப் பதிவு செய்திருந்தார். அது சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், அதைத் திருத்தி தாக்கல் செய்யும் முடிவை விஜய் எடுத்தார்.

வயது விவரம், சொத்து மதிப்பைத் தாண்டி சில நட்சத்திர வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ள கல்வித் தகுதி சார்ந்த தகவல்கள் சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்தத் தேர்தலில் வேட்பாளர்களை அறிவிப்பதில் பெரிய குழப்பம் உண்டானது விசிகவில்தான். அக்கட்சி ஆளுர் ஷாநவாஸுக்கு சீட்டு வழங்காதது பெரிய சர்ச்சையாக வெடித்தது. அவரைப் புறக்கணித்த போது பலர் நியாயம் கேட்டனர். குறிப்பாக திமுக ஆதரவாளர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர்.

பட்டியலின ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து திருமாவளவனின் முடிவை நிலைப்படுத்திய பதிவுகளையும் அதற்கு இணையாகக் காண முடிந்தது.
விசிக அறிவித்த வேட்பாளர்களில் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரது அக்கா மகள் மாலதிக்கு கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார் திருமாவளவன். முன்கூட்டியே அதைப் பலரும் கணிக்கவே முடியவில்லை. அவரது கட்சியினரே அதைக் கணிக்கவில்லை. அதுவல்ல இப்போது சிக்கல்.

மாலதி தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர் கூறியுள்ள வழக்கறிஞர் பட்டம் பெற்றது தொடர்பான விவரங்களை விவாதத்தில் எடுத்துக் கொண்டு ஒரு பதிவை வெளிநாட்டு வாழ் இந்தியரான சேஷாத்ரி தனசேகரன் என்பவர், "திருமாவின் அக்கா மகள் மாலதி ஆந்திரா பல்கலைக் கழகம் சித்தூர் ஆ.கே.எம் கல்லூரியில்தான் எல்.எல்.பி மற்றும் எல்.எல்.எம் முடித்துள்ளார். அதில் சிறப்பம்சம் என்னவென்றால், அதே சமயத்தில் பிஹெச்டியும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார்" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அது சர்ச்சையானது. பின் அவரே ஒரு விளக்கம் வெளியிட்டிருந்தார். யுஜிசி முறைப்படி இந்தியாவில் 2022க்கு முன்னர் 2 டிகிரி ஒரே நேரத்தில் படித்தால் அதில் ஒன்று மட்டுமே செல்லும். மற்றொன்று செல்லாது. 2022 புதிய கல்விக்கொள்கை வந்த பின்னர் அவற்றை ஏற்றுக்கொள்ளலாம் என்று ஆணை பிறப்பித்தார்கள். ஆனாலும், அதில் சில வரைமுறைகள் உள்ளன.

தொலைதூர கல்வி அல்லது ஆன்லைன் படிப்புகள் ஒன்றும் முழுநேரப் படிப்பு ஒன்றும் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அப்படிப் பார்த்தால், மாலதி முழுநேர படிப்பாக பிஹெச்டி 2018 இல் முடித்திருக்கிறார். 2016இல் எல்.எல்.எம் முடித்து இருக்கிறார். இதை எல்லாம் அலங்காரத்திற்குப் போட்டுக்கொள்ளலாமே தவிர, வேலைக்கோ அல்லது வேறு விஷங்களுக்கோ பயன்படுத்த முடியாது" என எழுதியிருக்கிறார்.

அதேபோல் தவெக திருத்தணி வேட்பாளர் வழக்கறிஞர் சத்யகுமார் வேட்பு மனு குறித்து சில சந்தேகங்களை இவரது பதிவில் காணமுடிகிறது. திருப்பதியில் உள்ள வெங்கடேஷ்வராவில் தான் இவரும் எல்.எல்.பி பட்டம் பெற்றுள்ளார். பி.காம் முடித்துவிட்டு, 6 வருடங்கள் கழித்து டிகிரி வாங்கிய இவர், பின்னர் 8 வருடங்கள் கழித்து எம்.எல் போட்டு முடித்துள்ளார். இதில் எம்.ஏ பொருளாதாரம் வேறு தொலைதூரக் கல்வியில் பயின்றுகொண்டே ஒரே வருடத்தில் பிஹெச்டி வேறு முடித்துள்ளார். ஒரே ஆண்டியில் முதுகலைப் பட்டம் இல்லாமல் எப்படி பிஹெச்டி முடித்தார்?" என்றும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவரது வேட்பு மனுவில் பட்டப்படிப்பு தொடர்பாக வழங்கியுள்ள விவரங்களைச் சுட்டிக்காட்டியுள்ள சேஷாத்ரி, "இவரும் ஆந்திரா எஸ்.வி யுனிவர்சிட்டியில் டிகிரி வாங்கியிருக்கிறார். இவர்களுக்கும் சட்டப்படிப்பிற்கும் சம்பந்தமே இல்லை. பெயருக்கு டிகிரி வாங்கியுள்ளார். இது போன்ற போலி படிப்பைத் தவிர்க்கவேதான் சென்னை உயர்நீதிமன்றம் ஆந்திரா சட்டப்படிப்புகளைச் செல்லாது என அறிவிக்க முயன்றது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு எதிராக இவர் எழுதிய பதிவை அவரது ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து படித்து முன்னுக்கு வருபவர்களைக் கண்டால், உயர்சாதி மனோபாவம் கொண்டவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்படிதான் இவரது பதிவும் உள்ளது எனச் சிலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

பொதுவாக ஆந்திராவில் பெறப்படும் வழக்கறிஞர் பட்டம் பல காலமாகவே மதிப்புக் குறைந்ததாகவே கருதப்பட்டு வருகிறது. அங்கே முறையான தேர்வுகளை எழுதாமலே பட்டத்தை எளிதாகப் பெற முடியும் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருவது பலரும் அறிந்ததுதான்.

- கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+