"வீடியோ".. ஒரே சான்ஸ்தான் இருக்கு.. ஓபிஎஸ்ஸின் "நம்பிக்கை பிடிப்பு" இதுவா.. எடப்பாடி சமாளிப்பாரா
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வலுவான ஆதாரங்களை ஓபிஎஸ் சமர்ப்பிப்பாரா?
சென்னை: எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் வலுவான நிலையில் அதிமுகவில் உள்ளதை யாராலும் மறுக்க முடியாது.. அதேசமயம், ஓபிஎஸ் சட்டரீதியாக இதை எப்படி அடுத்தடுத்து எதிர்கொள்ள போகிறார் என்ற கேள்வி அதிமுக தொண்டர்களை கவ்வி உள்ளது.
நடந்து முடிந்த அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் மனு தாக்கல் செய்தார்.. இன்றுகூட இது தொடர்பான விசாரணை நடந்தது.
ஓபிஎஸ் தரப்பில் சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் முக்கியமான பலர், விதிகளை மீறியுள்ளனர்.. தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு நடந்துள்ளது என்று அந்த வாதத்தில் கூறப்பட்டது.
இதையடுத்து அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் மனுவை, சென்னை ஹைகோர்ட் விசாரிக்கட்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள..
ஜூலை 11 பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் புதிதாக விசாரிக்கட்டும். உச்ச நீதிமன்றம் இதுவரை பிறப்பித்த உத்தரவுகள் உயர் நீதிமன்ற விசாரணையை பாதிக்க கூடாது. அதிகபட்சம் 3 வாரத்திற்குள் இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே தொடரட்டும். இதில் நாங்கள் கருத்து சொல்ல போவதில்லை, என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லிமிட் என்ன?
இந்நிலையில், ஓபிஎஸ் - எடப்பாடி தரப்பு அடுத்து என்ன செய்ய போகிறது? முக்கியமாக ஓபிஎஸ் சட்டரீதியாக அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன.. ஒற்றை தலைமை விவகாரம் வெடித்ததில் இருந்தே, நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் மட்டுமே ஓபிஎஸ் நம்பிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.. இந்த பிரச்சனை வெடித்தபோதும்சரி, வழக்குகளை இரு தரப்பில் கோர்ட்டில் தொடுத்தபோதும் சரி, உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுமா? அதற்கு உரிமை உள்ளதா? அப்படியே தலையிட்டாலும், அதன் வரையறை எவ்வளவு என்று பலவித சந்தேகங்கள் எழுந்தபடியே இருந்தன..

வீடியோ
அதனால்தான் அன்று ஓபிஎஸ், ஹைகோர்ட்டை நாடியபோதுகூட, பெரிய அளவுக்கு நீதிமன்றம் கருத்து சொல்லாது என்றே அரசியல் நோக்கர்கள் கணித்தார்கள்.. ஆனால், அத்தனை வியூகங்களும் இன்று தவிடுபொடியாகிவிட்டன.. ஓபிஎஸ் வழக்கை விசாரியுங்கள் என்று சுப்ரீம்கோர்ட்டே, ஹைகோர்ட்டிற்கு அறிவுறுத்துகிறது என்றால், உட்கட்சி விவகாரங்களில் தலையிடுகிற அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு என்பதும் இதன்மூலம் விளங்குகிறது..

கசிந்த தகவல்
அதேசமயம், உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ்ஸூக்கு சாதகமான உத்தரவு கிடைக்குமா என்ற ஆர்வமும் பெருகி உள்ளது.. ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் ஒரு தகவல் கசிந்து வந்தது.. அதாவது, எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லாது என்பதற்கு போதுமான ஆதாரங்களை ஓபிஎஸ் டீம் திரட்டி கொண்டிருப்பதாக கூறப்பட்டது.. அதாவது, அன்று நடந்த பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள்கூட பங்கேற்றார்களாம்.. அவர்கள் பங்கேற்ற வீடியோ பதிவுகள் இருந்தால், அதை ஆதாரமாக சமர்ப்பிக்க ஓபிஎஸ் டீம் மும்முரமாகி இருப்பதாக கூறப்பட்டது.

ரத்தத்தின் ரத்தங்கள்
ஒருவேளை, ஓபிஎஸ் இப்போது தொடுத்துள்ள வழக்கை ஹைகோர்ட் விசாரிக்கும்பட்சத்தில், வீடியோ உள்ளிட்ட வேறு சில முக்கிய ஆதாரங்களை சமர்ப்பிப்பதுடன், வலுவான ஆதாரங்களை தன் தரப்பில் எடுத்து வைத்தால் மட்டுமே, அது எடப்பாடிக்கு நெருக்கடியை உண்டாக்கும் என்கிறார்கள்.. அப்படி நெருக்கடியை உருவாக்கினால், அன்று நடந்த பொதுக்குழு மட்டுமல்ல, தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவி உட்பட அனைத்து தீர்மானங்களுமே செல்லாமல் போகவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

பரிதாப ரத்தத்தின் ரத்தங்கள்
அனைத்து முடிவும் நீதிமன்றத்தின் கைகளில்தான் உள்ளது என்றாலும், இன்னும் 3 வார காலம் அவகாசம் உள்ள நிலையில், இதை ஓபிஎஸ் தரப்பு எப்படி பயன்படுத்தி கொள்ள போகிறது என்பதும் மிகப்பெரிய ஆர்வமாக ரத்தத்தின் ரத்தங்களிடம் எழுந்துள்ளது... மற்றொருபுறம், தங்கள் கூட்டிய பொதுக்குழுவானது, அனைத்து சட்டவிதிகளுக்கும் உட்பட்டதுதான் என்பதையும் எடப்பாடி பழனிசாமி தரப்பும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications