டாஸ்மாக் அதிரடி..ஏற்கனவே பாட்டில் விலை "சர்னு" ஏறிடுச்சு..இப்ப இது வேறயா..அந்த 10 ரூபாய் "இடிக்குதே"
சென்னை: டாஸ்மாக் மதுபானங்களின் விலைகள் சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில், புது பகீர் ஒன்று கிளம்பி உள்ளது.. என்ன சொல்கிறார்கள் குடிமகன்கள்?
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, மதுவிலக்கு என்பது கனவாகவே போய் கொண்டிருக்கும் நிலையில், மற்றொருபுறம், டாஸ்மாக்குகள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு கொட்டி கொண்டிருக்கிறது.. மொத்த நிதி ஆதாரத்தில் 3ல் ஒரு பங்கு வருமானம், டாஸ்மாக், மதுக்கடைகள் மூலம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

வருவாய்: இப்போதைக்கு மொத்தம் 4829 மதுக்கடைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.. இதன்மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன.
இதனிடையே, அரசின் நிதிச்சுமையை குறைப்பதற்காகவும், வருவாயை பெருக்குவதற்காகவும், டாஸ்மாக் மதுபானங்கள் விலைகளும் கடந்த 1ம்தேதி முதல் உயர்த்தப்பட்டிருக்கின்றன.. இந்த விலை நிர்ணயம் அமலுக்கு வந்தால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 2,400 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அந்தவகையில், 10 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை அளவுக்கு ஏற்ப மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
10 ரூபாய்: எனினும், ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் 10 ரூபாய் வரையில் கூடுதலாக விற்பனையாளர்கள் வசூல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறதாம்.. இதனை தடுப்பதற்காகத்தான், டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மதுக்கடைகள் முன்பு "விலை பட்டியல்" நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் பெரும்பாலான கடைகளில் அதனை அமல்படுத்தாமல் இருக்கிறார்களாம்.. விற்பனையாளர்களும் ஆங்காங்கே 10 ரூபாயை கூடுதலாக ஒவ்வொரு பாட்டிலுக்கும் வசூலித்து கொண்டேயிருக்கிறார்களாம்.
பாட்டில் விலை: குவார்ட்டர் பாட்டிலை மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்வதாக குடிமகன்கள் கொந்தளிக்கிறார்கள். அரைபாட்டில் மதுபானத்தை கேட்டால், 2 குவார்ட்டர் பாட்டிலை தருகிறார்களாம். காரணம், 2 குவார்ட்டர் பாட்டிலை கொடுத்தால், ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் வசூலிக்கலாம்.. ஆனால் அரை பாட்டிலுக்கு ரூ.10 மட்டுமே வசூலிக்க முடியும். அதனால்தான், குவார்ட்டர் பாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு, மறைமுகமாக விற்பனையாளர்கள் வருவாயை பார்ப்பதாக சொல்கிறார்கள்.
இதனால், குவார்ட்டர் மது பாட்டில்கள் 70 சதவீதம் அளவுக்கு விற்பனையாகுவதாகவும் அரை பாட்டில் மதுபானங்கள் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடவடிக்கை: ஆனால், இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் சொல்லும்போது, "மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என்பதற்காகத்தான், கடைகளின் முன்பு விலை பட்டியலை வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. கூடுதலாக விற்கப்படுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.. எனவே, குடிமகன்கள் விலை பட்டியலில் உள்ள பணத்தை மட்டுமே கொடுத்தால் போதும்" என்றனர்...
-
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications