"டேஞ்சரஸ்" எடப்பாடி?.. சடசடவென விக்கெட்டை வீழ்த்தி.. "சவுத் ஆபரேஷன்" ஆரம்பம்.. உற்றுநோக்கும் தாமரை
எடப்பாடி பழனிசாமி மாற்று கட்சியில் உள்ளவர்களை இழுக்க புதிய அசைன்மென்ட் தந்துள்ளாராம்|
சென்னை: அடுத்தடுத்த வியூகங்களை முன்னெடுத்து, எதிர்தரப்பு கட்சிகளை கலங்கடித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. அத்துடன், மாற்று கட்சியில் அதிருப்தியாளர்களை இழுக்கும் வேலையும் மும்முரமாகி உள்ளதாம்.. என்ன நடக்கிறது அதிமுகவில்?
சமீபத்தில் பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு தந்திருந்த நிலையில், அந்த நொடி முதலே எடப்பாடி பழனிசாமி கூடாரத்துக்குள் புது தெம்பு பாய்ச்சப்பட்டுவிட்டது.
மற்றொருபக்கம் இடைத்தேர்தலில் 40 ஆயிரம் ஓட்டுக்களை வாங்கி டெபாசிட்டை தக்க வைத்தது, எடப்பாடி டீமுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்து வருவதாக தெரிகிறது. இதையடுத்து, அதிமுகவில் பெரும்பலம் கூடியுள்ள நிலையில், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தயாராகிவருகிறார் எடப்பாடி.. மறுபக்கம், மாற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை இழுக்க தயாராகி வருவதாகவும் தெரிகிறது.

தாவும் புள்ளிகள்
குறிப்பாக, அமமுக கூடாரத்தில் கை வைத்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளை தங்கள் அணிக்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் இழுத்து வருகின்றனர்... அதற்கேற்றவாறு, எடப்பாடிக்கு சாதகமாக சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வந்த நிலையில், அமமுகவில் இருந்தும் சிலர், எடப்பாடி பக்கம் தாவ ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.. அந்தவகையில், அமமுக தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏவுமான கேகே உமாதேவன் மற்றும் அமமுக செய்தி தொடர்பாளரும், மாநில இளைஞரணி செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே அன்பரசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த வாரம் அதிமுகவில் இணைந்தனர்...

காய் நகர்த்தல்
இந்தநிலையில் அமமுக அமைப்பு செயலாளரும், மாஜி எம்எல்ஏவுமான கேகே சிவசாமி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். டிடிவி தினகரன் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக எடப்பாடி அணியில் இணைவது டிடிவியை மட்டுமில்லாமல் ஓபிஎஸ்யையும் சேர்த்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.. எடப்பாடியின் இந்த காய்நகர்த்தலுக்கு இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. கொங்குவில் தன்னுடைய பலத்தை வலுவாக தக்க வைத்துள்ள எடப்பாடியால், தென்மண்டலங்களில் இதுவரை தன் செல்வாக்கை நிரூபிக்க முடியவில்லை..

சேலஞ்ச்
முக்கியமாக முக்குலத்தோர் வாக்குவங்கியை எடப்பாடியால் பெற முடியாத சூழலில், ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு போன்றோரையும் நம்பி உள்ளதால், ஒட்டுமொத்த சமுதாய வாக்குகளையும் எடப்பாடியால் பெற்றுவிட முடியுமா? என்பது மிகப்பெரிய சவாலாக எழுந்துள்ளது. அதனால், டெல்டாவில் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்க வேண்டும் என்பதால், வைத்திலிங்கத்தின் ஆதரவும் எடப்பாடிக்கு தேவையானதாக இருக்கிறதாம்.

10,85,985 வாக்குகள்
இந்த முயற்சி ஒருபக்கம் இருந்தாலும், தினகரனின் ஆதரவாளர்களும் இதில் இணையும்போது, தென்மண்டலத்தில், தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க முடியும் என்று நம்புகிறாராம்.. அதுமட்டுமல்ல, கடந்த சட்டமன்றத் தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது.. அந்தவகையில் முக்குலத்தோர் ஆதரவை எடப்பாடியால் முழுமையாக பெற முடியுமா? அல்லது ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் இணையும்போது, தனக்கு மேலும் சறுக்கலை தந்துவிடுமே என்றும் யோசிக்கிறாராம். அதனாலேயே இந்த "ஆபரேஷன்" ஆரம்பமாகி உள்ளது என்கிறார்கள் எடப்பாடி தரப்பில்.

முறியடிப்பு
இதற்கு நடுவில், சுற்றுப்பயண திட்டம் ஒன்றையும் எடப்பாடி கையில் எடுத்துள்ளாராம்.. தென்மண்டலத்தை பிரதானமாக குறி வைத்தே இந்த பயணம் மேற்கொள்ள உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளும் தயாராகி வருகிறதாம்.. இப்படி அதிமுகவில் நடப்பதையெல்லாம் பார்த்து தினகரன் தரப்பே சற்று அதிர்ந்து போயுள்ளதாம்.. தொடர்ச்சியாக அமமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி குறி வைத்துள்ளதால், இதை முறியடிக்கும் வகையில், அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையிலும் உள்ளாராம்.. நேற்றைய தினம் மதுரையில் ஓபிஎஸ் ஒரு பேட்டி தந்திருந்தார்..

ஹை சான்ஸ்
அப்போது, சசிகலா சந்திக்க வாய்ப்பு உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, சசிகலாவை உறுதியாக கூடிய விரைவில் சந்திப்பேன் என்றார்.. டிடிவி தினகரனுடன் சேர்ந்து செயல்படுவீர்களா? என்ற அடுத்த கேள்விக்கு, "வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்" என்றும் கூறியுள்ளார். ஆக, தினகரன், சசிகலாவை, ஓபிஎஸ் விரைவில் சந்திக்க உள்ளதாக நம்பப்படும் நிலையில், எடப்பாடியின் அரசியலுக்கு எதிரான முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.. அத்துடன் கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களையும் கூல் செய்யும் நடவடிக்கையில் இறங்கி வருகிறதாம் அமமுக மேலிடம்..!!
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications