இரவோடு இரவாக மாறிய கணக்கு.. நள்ளிரவில் இதென்ன குழப்பம்? கம்மியான ஓட்டுப்பதிவு ஏன்? 72% அல்லது 69.4%?
சென்னை: எதிர்பார்த்த அளவுக்கு தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்கவில்லை என்றே தெரிகிறது. இதற்கு என்ன காரணம்? எங்கே சுணக்கம் ஏற்பட்டது?
இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவை எதிர்நோக்கி, தேர்தல் ஆணையமும், தமிழக அரசும், பல்வேறு அறிவிப்புகளை முன்கூட்டியே அறிவித்திருந்தனர்.

சபாஷ்: எல்லாருமே கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும் என்ற நோக்கத்துடன், அனைத்து நிறுவனங்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுப்பு, சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள், சிறப்பு மெட்ரோ ரயில் போன்றவை அறிவிக்கப்பட்டன.
வயதானவர்கள், மாற்று திறனாளிகளுக்கு நேரடியாகவே வந்து அழைத்து செல்ல வாகன ஏற்பாடுகள் செய்து தரப்பட்டன. ஆனாலும், 100 சதவீத வாக்குகள் பதிவாகவில்லை.. என்ன காரணம்? தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான 2024 ஓட்டுப்பதிவில் மொத்தமே 69.46% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
விழிப்புணர்வு: ஆனால், கடந்த எம்பி தேர்தலில் 73 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.. இந்த முறை வாக்குப்பதிவு குறைந்ததற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன.. குறிப்பாக, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் விழிப்புணர்வுகள், கிராமங்களில் முழுமையாக சென்று சேரவில்லை, போதுமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதேபோல, லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள், லிஸ்ட்டில் விடுபட்டுள்ளது பிரதான காரணமாக சொல்கிறார்கள்.. இதனால், குடும்பத்துடன் கிளம்பி வந்து, லிஸ்ட்டில் பெயர் இல்லாததால், ஓட்டுப்போடாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்..
போக்குவரத்து வசதி: அதேபோல, வெளியூர்களில் தங்கி வேலைபார்ப்பவர்கள், சொந்த ஊர் சென்று வாக்களிக்க போதுமான போக்குவரத்து வசதி இல்லாதது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.. போக்குவரத்து வசதி கிடைத்தும்கூட நடுத்தர வர்க்கத்தினர் பணத்தட்டுப்பாடு போன்ற காரணங்களினால் சொந்த ஊர் செல்ல முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், குடும்பத்துடன் பலர் சுற்றுலாவுக்கு சென்றுவிட்டதால், நிறைய வாக்காளர்கள் வாக்குகளை செலுத்தவில்லையாம்..
வானிலை மையம்: அதேபோல, வாக்குப்பதிவு தினத்தன்று வெப்ப அலை அதிகமாகவே வீசும் என்று வானிலை மையம் எச்சரித்திருந்தது.. அதற்கேற்றவாறு நேற்றைய தினம் வெயில் வாட்டி வதைத்தது.. அதனால், வாக்குச்சாவடிக்கு செல்ல கலக்கம்கொண்டு, ஓட்டுப்போடாமல் வீட்டிலேயே பலர் அடைந்து கிடந்ததும் வாக்குப்பதிவு குறைய காரணம் என்கிறார்கள்.
அதேபோல தேர்தல் புறக்கணிப்புகளும் நடந்துள்ளன.. எத்தனையோ முறை வலியுறுத்தியும்கூட, தங்களது கோரிக்கைகளை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை என்று கூறி, நிறைய கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 3 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பை செய்திருக்கின்றன.. அதேபோல, புதுக்கோட்டையில் வேங்கைவயல், இறையூர் மக்களும் புறக்கணிப்பை செய்திருந்த நிலையில், அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று, நேற்று சாயங்காலம்தான் ஓட்டுப்போடவே சென்றார்கள்.
அதேபோல, வாக்கு சதவீதமும் மாறி மாறி அறிவிக்கப்பட்டதில், குழப்பம் ஏற்பட்டுவிட்டது.. குறிப்பாக கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட பட்டியலில், கோவை தொகுதியில், 13 லட்சத்து, 64 ஆயிரத்து, 975 வாக்காளர்களே ஓட்டளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.. அதாவது 64.81 சதவீதம் ஆகும்.. கடந்த 2019 தேர்தலை காட்டிலும் இது 0.95 சதவீதமே அதிகம்.
இணையதளம்: ஆனால், தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட்ட பட்டியலில், 71.17 சதவீதம் என இருந்ததால், குழப்பம் நிலவுகிறதாம்.. சமூக வலைதளங்களிலும் இந்த தகவல் பரவிவருவதால், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துவருகிறது.
அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக, கள்ளக்குறிச்சியில் 79.25 சதவீதமும், பெரம்பலூரில் 77.37சதவீதமும், சிதம்பரத்தில் 75.32 சதவீதமும் வாக்குகளும் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91 சதவீதமும், தென் சென்னையில் 54.27 சதவீதமும், வட சென்னையில் 60.13 சதவீதமும், ஸ்ரீ பெரும்பத்தூரில் 60.21 சதவீதமும் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
வாக்குப்பதிவு: அதேபோல, முதலில் வெளியான வாக்குப்பதிவு சதவீதத்துக்கும், பிறகு திருத்தி வெளியிடப்பட்ட வாக்குப்பதிவு சதவீதத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதாம்.. டெல்லி தலைமைத்தேர்தல் ஆணையம் சார்பில் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் மட்டும் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
மத்திய சென்னையில் 13.44 சதவீதமும், தூத்துக்குடியில் 10.97 சதவீதமும், வட சென்னையில் 9.13 சதவீதமும் குறைவாகவே அறிவிக்கப்பட்டது. தென் சென்னையிலும் முதலில் அறிவிக்கப்பட்டதைவிட, 13.55 சதவீத வாக்குகள் குறைவாக பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது..
விளக்கம்: இதற்கு நடுவில், தமிழகத்தின் வாக்குப்பதிவு 72 சதவீதமா? 69.4 சதவீதமா? என்ற குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இந்த வாக்கு சதவீதத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
"17சி படிவம், வாக்காளர்களின் கையெழுத்தை வைத்து எவ்வளவு பேர் வாக்களித்துள்ளனர் என்ற விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதன்காரணமாக சில வித்தியாசம் வந்திருக்கலாம்.. 99 புள்ளி ஒன்பது ஒன்பது சதவீதம் கூடுதல் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு..
தேர்தல் ஆணையம் சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தார்கள்.. ஆனால், கடந்த 2019ம் ஆண்டு தேர்தலை விட, இந்த முறை சென்னையில் 4 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
காரணம் என்ன: நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர்... நகர்புறங்களில் வசிக்கும் மக்களில் 10-ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர். இதன் காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் மந்தமாக இருந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications