சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டாப் 2".. சிதறுதா திமுக ஓட்டு.. சீமானுக்கு லட்டு போல கிடைச்ச சான்சஸ்.. 2 பிரம்மாஸ்திரம்.. பாஜக "ஆ"

நாம் தமிழர் கட்சியின் வியூகம் இடைத்தேர்தலில் என்னவாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: நடக்க போகும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி, எப்படிப்பட்ட வியூகத்தை அமைத்து செயல்பட போகிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.. அத்துடன் 5 முனைப்போட்டி எழ வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், தேர்தல் களம் எப்படி இருக்க போகிறதோ என்ற ஆர்வமும் அனலடிக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த 2021 தேர்தலில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் 10 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றன
இதுவரை தனித்து தேர்தல்களை சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் காங்கிரசின் தோல்விக்கு காரணமாக இருந்துள்ளதை மறுக்க முடியாது,.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவன், மகன் சஞ்சய் சம்பத்- யார் காங். வேட்பாளர்? ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவன், மகன் சஞ்சய் சம்பத்- யார் காங். வேட்பாளர்?

ஆக்‌ஷன்

ஆக்‌ஷன்

கடந்த முறை, இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை பிடித்திருந்தது நாம் தமிழர் கட்சி.. பாஜகவை போலவே, காங்கிரஸையும் பொதுவான அரசியல் எதிரியாக கருதி வருகிறது நாம் தமிழர் கட்சி.. "பாஜக - காங்கிரஸ் இவங்க 2 பேரும் ஒன்றுதான்" என்று சீமான் அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பார்.. "இரண்டு கட்சிகள் இடையே கொள்கை ஒன்றுதான்.. ஆனால் கட்சிகள் மட்டுமே வேறு.. பணமதிப்பிழப்பீடு தவிர்த்து சிஏஏ, என்ஆர்சி, என்ஐஏ, ஜிஎஸ்டி, நீட் தேர்வு இவைகளை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் அவற்றை செயல்படுத்தியது பாஜக. 2 பேருமே பேராபத்தை நோக்கி நாட்டை நடத்துபவர்கள்" என்று மேடைக்கு மேடை சீமான் முழங்குவார்.

 அதிரடி சீமான்

அதிரடி சீமான்

அதனால்தான், மற்ற தொகுதிகளைவிட, காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் கூடுதலாக கவனம் செலுத்தி, பிரச்சாரங்களிலும் ஈடுபடும் நாம் தமிழர் கட்சி. அந்தவகையில், ஒவ்வொரு தேர்தலிலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸின் வாக்குகளையும் பிரிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது நாம் தமிழர் கட்சி.. இந்த விஷயத்தைதான் பாஜக கையில் எடுக்கிறது.. 4 நாட்களுக்கு முன்புவரை இடைத்தேர்தலில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்தது தமிழக பாஜக.. ஆனால், டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பிறகுதான், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் முனைப்பு காட்ட துவங்கி உள்ளார் மாநில தலைவர் அண்ணாமலை..

 தகிக்கும் களம்

தகிக்கும் களம்

இதற்கு காரணம், எப்படியாவது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியதாக தெரிகிறது.. இங்கு போட்டியிடுவதால், திமுகவின் அதிருப்தி வாக்குகளை மொத்தமாக அள்ளுவதுடன், 3வது இடத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளவும் முடியும் என்பதால், இடைத்தேர்தலை விட்டுவிடக்கூடாது என்று டெல்லி மேலிடம் சொன்னதாம்.. அதுமட்டுமல்ல, காங்கிரஸ் இங்கு நேரடியாகவே போட்டியிடுவதால், காங்கிரஸ் Vs பாஜக என்று களம் அமைவதும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டதால்.. இதற்கு பிறகுதான் தேர்தல் பணிக்கான நிர்வாகிகள் குழு தமிழக பாஜக தரப்பில் நியமிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்..

 நேருக்கு நேர்

நேருக்கு நேர்

ஒருவேளை பாஜக போட்டியிடாத சூழலில், நாம் தமிழர் கட்சி 2வது அல்லது 3வது இடத்தை கூட தக்கவைக்கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.. தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், நேரடியாகவே, காங்கிரஸுடன் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது, நாம் தமிழர் கட்சிக்கான களம் எளிதாகி உள்ளது. திமுகவே இறங்கி போட்டியிட்டாலும், நாம் தமிழர் இங்கு ஒரு கை பார்த்துவிடும் என்கிறார்கள்.. வருகிற 28ம் தேதிக்குள் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.. அதேபோல, வரும் 27ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தி நல்ல செய்தி வெளியிடப்படும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

பஞ்சமுனை

பஞ்சமுனை

ஏற்கனவே காங்கிரஸ், இன்னொரு பக்கம் பக்கம் எடப்பாடி, மறுபக்கம் ஓபிஎஸ், இதற்கு நடுவில் அமமுக, தேமுதிக, மநீம என ஏகப்பட்ட கட்சிகள், இடைத்தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றன.. இதில் எத்தனை கட்சிகள் உறுதியாக போட்டியிட போகின்றன என்பது தெரியவில்லை.. ஆனால் எப்படியும் 5 முனை போட்டி எழும் என்பதால், காங்கிரசுக்கு செல்லும் வாக்குகள் எக்கச்சக்கமாக பிரிய வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். இனி அந்தந்த கட்சி தலைவர்கள் பிரச்சார வியூகத்தையும் தயார் செய்து வருகிறார்கள்.. நானும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்வேன் என்று சீமான் 2 நாட்களுக்கு முன்பே சொல்லிவிட்டதால், திமுக கூட்டணியை சரமாரியாக விமர்சிப்பார் என்றே தெரிகிறது.

தகிக்கும் டிடிவி

தகிக்கும் டிடிவி

தினகரனை பொறுத்தவரை, தங்களுக்கு திமுகதான் பிரதான எதிரி, அதற்காக யாருடனும் கூட்டணி வைக்க தயார் என்று சொல்லி வருகிறார்.. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடியும் திமுகவையே சாடி வருகிறார்.. சீமானும் திமுகவையே விமர்சித்து வருகிறார்.. இப்படி திமுக மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் கட்சிகள் எல்லாருமே, இந்த இடைத்தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுகிறார்கள் என்பதுதான் ட்விஸ்ட்டே.. அதைவிட முக்கியமாக, திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை யார்தான் அள்ள போகிறார்கள் என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.. எனவே, நடக்க போவது, ஒரே ஒரு இடைத்தேர்தல் என்றாலும்கூட, இங்கு வெற்றி பெறுவது அந்த அளவுக்கு சுலபம் இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

English summary
Are these the reasons that favor Seeman in the by-elections and What is TTV Dinakaran going to do
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X