Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நழுவுதே மீனு".. ஒரே நபருக்கு தூண்டிலை வீசும் பாஜக + காங்.. காரணம் திமுக.. "சைக்கிள்" டெல்லி போகுதா?

ஜிகே வாசனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அழைப்பு விடுத்தது ஏன் என்ற தகவல் கசிந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இவ்வளவு காலம் இல்லாமல், இந்த முறை வாசனுக்கு, நிறைய அழுத்தங்கள் மேலிட பாஜகவில் இருந்து தரப்பட்டு வருகிறது.. கூடிய சீக்கிரம் பாஜகவுக்குள் வந்துவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.. இதற்கு நடுவில், வாசனுக்கு தமிழக காங்கிரசும் அழைப்பு விடுத்துள்ளது.. ஒரே நேரத்தில் 2 தேசிய கட்சிகளும் வாசனை மாறி மாறி அழைக்க காரணம் என்ன?

தமாகா தலைவர் ஜிகே வாசனை பொறுத்தவரை, மிகவும் மென்மையானவர்.. நல்ல மனிதர்.. பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்... யாரையும் அநாகரீகமாக பேசாதவர்.. மூப்பனாரின் வளர்ப்பு அப்படி..!

தேர்தல் காலங்களில், எப்போதுமே கூட்டணி கட்சி தலைவர்களிடம் இவர் டிமாண்ட் செய்ததே கிடையாது.. கூட்டணி தலைமைக்கு எந்தவிதமான நெருக்கடியும் தர மாட்டார்.. அதனாலேயே தனிப்பட்ட மரியாதை எல்லா கட்சியினரிடமும் இவருக்கு இன்றுவரை நீடித்து வருகிறது.

 மூப்பனார் குணம்

மூப்பனார் குணம்

திமுகவாக இருந்தாலும் காங்கிரஸாகவே இருந்தாலும் சரி, வாசனுக்கென்று ஒரு சாப்ட் கார்னர் தமிழக அரசியல் களத்தில் இருக்கவே செய்கிறது. அதனால்தான் தமாகா தொடங்கியபோதுகூட, முக்கிய நிர்வாகிகள் வாசனை மலைபோல நம்பி வந்தனர்.. ஒருமுறை, பிரதமரை வழியனுப்ப ஜிகே வாசன் சென்னை ஏர்போர்ட் வந்தபோது மோடியால் பெரிதும் கவனிக்கப்பட்டார்.. அங்கிருந்த எல்லாரையும் விட்டு விட்டு, வாசனிடம் மட்டும் தனிப்பட்ட பாசத்தைக் காட்டினார் மோடி... பாஜகவினரே இதை அப்போது எதிர்பார்க்கவில்லை.. அப்போதுமுதல் இன்றுவரை பாஜகவின் மேலிட அன்புக்கு பாத்திரமாகவே வாசன் திகழ்ந்து வருகிறார்.

 மோடி தந்திரம்

மோடி தந்திரம்

அதனால்தான், கடந்த சில வருடங்களாகவே, "உங்களை மத்திய அமைச்சராக்குகிறோம். பாஜகவில் இணைந்துவிடுங்கள்" என்று பாஜக மேலிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டும், வாசன் அதற்கு செவிசாய்க்கவில்லை.. சில மாதத்துக்கு முன்பு இதே கோரிக்கையை பாஜக முன்வைத்தபோதுகூட, தன்னுடைய கட்சியினரிடம் கலந்து பேசிவிட்டு சொல்கிறேன் என்று வாசன் சொன்னாரே தவிர, இப்போதுவரை பாஜகவுக்கு பச்சைக்கொடி காட்டவில்லை. ஆனாலும், 4 நாட்களுக்கு முன்பு டெல்லி தலைவர்களை சந்தித்து பேசியபோது, "கட்சியை கலைத்துவிட்டு கூண்டோடு பாஜகவுக்கு வந்துவிடுங்கள்.. கட்சிக்குள் வந்துவிட்டால் மக்களவைத் தேர்தல் முடிந்ததும் உங்களை மத்திய அமைச்சராக்குவது எங்கள் பொறுப்பு.. டிசம்பர் மாதத்துக்குள் நீங்கள் பாஜகவுக்குள் வந்துவிடவேண்டும் " என்றார்களாம்.

 ரீ-என்ட்ரி

ரீ-என்ட்ரி

இப்படிப்பட்ட சூழலில்தான், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி என்ட்ரி தந்துள்ளார்.. மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அழகிரி, காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஜி.கே. மூப்பனார் போன்ற பல தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய வரலாறு உண்டு. தமாகா இப்போது கொள்கை அடிப்படையில் இல்லாமல் தனி நபருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்படுகிறது. ஜிகே வாசன் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினால் அவருக்குக் கீழ்பணியாற்றத் தயாராக இருக்கிறோம்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.. அழகிரி ஏன் திடீரென வாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்? என்ற குழப்பம் கட்சிக்குள் தற்போது தலைதூக்கி உள்ளதாம்..

 குழம்பும் வாசன்

குழம்பும் வாசன்

பிரதமர் மற்றும் அமித்ஷாவை வாசன் சந்தித்து பேசியிருந்தார் இல்லையா? காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், சோனியா காந்தியிடம் இதுகுறித்த விஷயத்தை கொண்டு சென்றாராம்.. வாசனை எதற்காக அழகிரி அழைக்கிறார்? என்று சிதம்பரத்திடம் சோனியாவும் கேட்டுள்ளார். அதற்கு சிதம்பரம், "மோடி - வாசன் சந்திப்பின்போது, தமிழக தலைவர் பதவி, திமுக-காங்கிரஸ் கூட்டணி என்று மேலும் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவி அல்லது பாஜக தலைவர் பதவி இதில் ஏதாவது ஒன்றை வாசனுக்கு தருவதாக சொல்லி, பாஜகவில் இணைய வலியுறுத்தி வருகிறார்கள்.

 க்ளீன்போல்டு

க்ளீன்போல்டு

காரணம், அமைச்சர் பதவி தருவதன் மூலம், வாசனிடம் காரியம் சாதித்துக் கொள்ள தமிழக காங்கிரஸ்காரர்கள் காங்கிரசை விட்டு வெளியேறி வாசனை நோக்கி செல்வார்கள் என்று பாஜக தலைமை கணக்கு போடுகிறது. பொதுவாக, எந்த கட்சியின் நிர்வாகிகளையும் சரி, தொண்டர்களையும் சரி 100 சதவீதம் திருப்திப்படுத்திட முடியாது... இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்தான். அந்த வகையில், காங்கிரசில் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அதிருப்திகள் இல்லைன்னு சொல்லிட முடியாது. வாசன் மத்திய அமைச்சராகும் பட்சத்தில் காங்கிரசில் உள்ள அதிருப்தியாளர்கள் வாசனை நோக்கி செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி சென்றால் அது திமுகவுடன் கூட்டணி சீட் ஷேரிங்கில் பார்கையின் பவரை நாம் இழக்க வேண்டியது வரும். இந்த சூழல் உருவாக வேண்டும் என்பதுதான் பாஜக தலைமையின் விருப்பம். அதற்காகத்தான் வாசனுக்கு தூண்டில் வீசுகிறார் மோடி.

ரன்அவுட்

ரன்அவுட்

ஆனால், கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் இணைந்தால், வாசன் கட்சியில் இருக்கும் காங்கிரசார் நம் பக்கம் வந்துவிடுவார்கள்.. இந்த உண்மையை தெரிந்ததால்தான், அமைச்சர் பதவியை வாசன் விரும்புகிறாரே தவிர பாஜகவில் இணைய மறுத்து வருகிறார். பாஜக தலைவரானால் அடிப்படை சிந்தாந்தம் பேசும் ஆர்எஸ்எஸ் ஆட்களோடு இணைந்து அவரால் பாஜகவை வழிநடத்த முடியாது. அந்த பயம் அவருக்கு இருப்பதால் பாஜகவில் இணைய தயக்கம் காட்டுகிறார்" என்று தனக்கு கிடைத்த தகவல்களை சோனியா, ராகுலிடம் பகிர்ந்துகொண்டாராம் ப.சிதம்பரம்... ஆக, வாசனை தங்கள் கட்சிக்குள் இவர்கள் 2 பேரும் மாறி மாறி இழுப்பதன் பின்னணியில் திமுகவை இங்கு பொருத்தி பார்க்க வேண்டி உள்ளது.

 க்ளீன் போல்டு

க்ளீன் போல்டு

வாசன் பாஜக பக்கம் சென்றுவிட்டால், திமுகவிடம் கேட்டு பெறும் சீட் எண்ணிக்கைக்கு எந்தவித இடர்பாடும் வந்துவிடக்கூடாது என்ற கலக்கம் காங்கிரசுக்கு இருப்பதாக தெரிகிறது. எனினும், வாசனை தங்கள் பக்கம் கொண்டு வந்தால், பாஜக தரப்பு பலவீனமாகும் என்று அழகிரி தரப்பும், வாசனை பாஜகவுக்குள் கொண்டுவந்தால், காங்கிரஸ் பலவீனமாகும் என்று மோடி தரப்பும் கணக்கு போட, அசராமல் தெளிவாக இருக்கிறார் வாசன்.. பாஜக ஒரு பந்தை வீசினால், அதையே திருப்பி போட்டு சிக்ஸர் அடிக்க முயற்சிக்கிறது தமிழக காங்கிரஸ்.. இந்த விளையாட்டில், பந்துகளை அடித்து வாசன் களமிறங்குவாரா? அல்லது "க்ளீன் போல்டு" ஆவாரா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+