நீங்கள் ஆர்எஸ்எஸ்ஸா? ஆர்டிஐயில் ஆளுநர் ஆர்என் ரவியிடம் 19 கேள்விகள் கேட்பு! ஆளுநர் மாளிகை பரபர பதில்
சென்னை: சனாதனம், இந்து மதம் குறித்து ஆளுநர் ஆர்என் ரவி தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்என் ரவியிடம் ‛‛நீங்கள் ஆர்எஸ்எஸ் உறுப்பினரா?'' என்பன உள்பட 19 கேள்விகளை சென்னை வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டதற்கு ஆளுநர் மாளிகை விளக்க கடிதம் அனுப்பி உள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி சமீப காலமாக பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். இவரது பெரும்பாலான பேச்சுக்கள் விவாதத்துக்கு உள்ளாகி வருகின்றன.
இதற்கு சனாதன தர்மத்தின் சிறப்புகள் பற்றியும், இந்து தர்மம் பற்றியும் ஆளுநர் பேசி வருவது தான் முக்கிய காரணமாகும்.

ஆளுநர் ஆர் ரவி பேச்சு-19 கேள்விகள்
ஆளுநர் ஆர்என் ரவி தொடர்ச்சியாக சனாதன தர்மம், திருக்குறள் பற்றி பேசி வருகிறார். சனாதன தர்மத்தை பெருமையாகவும், திருக்குறள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும் ஆர்என் ரவி கூறி வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ் துரைசாமி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 19 கேள்விகள் கேட்டு ஆளுநர் மாளிகைக்கு மனு அனுப்பினார்.

சனாதன தர்ம கொள்கைகள் என்ன?
அதில், சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன?, சனாதன தர்மத்தை உருவாக்கியவர் யார்?, சனாதன கொள்கைளுக்கு உரைகள் உள்ளதா?, தமிழ் இலக்கியம் அல்லது திராவிட கலாச்சாரத்தில் சனாதன தர்மம் குறித்து எழுதப்பட்டுள்ளதா அல்லது பேசப்பட்டுள்ளதா?, சனாதன தர்மத்தை கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்களா? என கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.

இந்து வார்த்தையை உருவாக்கியது யார்?
மேலும், உலகில் பிற நாடுகளில் சனாதன தர்மம் பின்பற்றப்படுகிறதா? பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ளதா?, ஆங்கிலேயர்கள் இந்து சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு திராவிடர்களுக்கு இந்து தர்மம் பற்றி தெரியாது என்பது உண்மையா?, இந்து என்கிற வார்த்தையை உருவாக்கியது யார்?, அதன் அர்த்தம் என்ன?, சனாதன தர்மத்தில் கூறப்படும் கடவுள்கள் உயிருடன் இருக்கிறார்களா?, எங்கு வசிக்கிறார்கள்? எனவும் கேள்விகள் கேட்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ் உறுப்பினரா நீங்கள்?
மேலும், ஆர்எஸ்எஸ் உறுப்பினரா நீங்கள்?, தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்பீர்களா?, இந்து மதத்தில் சதுர் வர்ண தர்மத்தை உருவாக்கியது யார்? நீங்கள் அதை பின்பற்றுகிறீர்களா?, தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி நிகழ்ச்சிகளில் பேச அரசியலமைப்புச் சட்டத்தில் விதி உங்களுக்கு அதிகாரம் வழங்கி உள்ளதா?, அதிகாரம் இல்லாவிட்டால் அது அரசியலமைப்பு மீறல் இல்லையா? என்பன உள்ளிட்ட 19 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.

ஆளுநர் மாளிகை விளக்கம்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ள இந்த கேள்விகளுக்கு 2 மாதத்துக்கு பிறகு கடந்த 12ம் தேதி ஆளுநர் மாளிகை சார்பில் வழக்கறிஞர் துரைசாமிக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகையின் மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ள ராமபிரபா விளக்க கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‛‛ஆளுநரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான பதில் எந்த வடிவிலும் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இன் கீழ் வராது. இதுதொடர்பான விபரங்கள் ஆளுநர் செயலகத்தில் இல்லை'' என கூறப்பட்டுள்ளது.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications