நீண்டநாள் கனவு நிறைவேறுது.. பத்திரப்பதிவு செய்வோருக்கு செம்ம ஹேப்பி நியூஸ்.. பதிவுத்துறை அதிரடி
சென்னை: உரிய காரணமின்றி, பத்திரங்களை நிலுவையில் வைக்கக்கூடாது என்று சார் - பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 10 முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். நிலுவையில் வைக்கப்படும் பத்திரங்கள் விஷயத்தில், 15 நாட்களுக்குள் முடிவு எட்டப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
பத்திரங்களை பதிவு செய்யும் போது சில பத்திரங்களை சார் - பதிவாளர் நிலுவையில் வைக்கும் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடக்கிறது. சர்ச்சையான பத்திரங்கள், பட்டாவின் உண்மை தன்மை குறித்த சந்தேகம், இணைய வழியில் பட்டா குறித்த தகவல்களை அறிய முடியாத நிலை போன்ற பல்வேறு காரணங்களால் பத்திரங்கள் நிலுவையில் வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் உரிய காரணமின்றி, பத்திரங்களை நிலுவையில் வைக்கக்கூடாது என்று சார் - பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரத்தை பார்ப்போம்..
"பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் பத்திரத்தை, சார் - பதிவாளர் நிலுவையில் வைக்கும் போது, 'ஸ்டார் 2.0 'மென்பொருளில், 'டிராப் டவுன் பாக்ஸ்' என்ற பிரிவில், உரிய காரணத்தை பதிவிட வேண்டும்.
ஆவணதாரர் கோரிக்கை அடிப்படையில், ஒரு பத்திரம் நிலுவையில் வைக்கப்படும் நிகழ்வில், அதற்கான எழுத்துப்பூர்வ கடிதம் பெறப்பட்டு இருக்க வேண்டும்.
நிலுவையில் வைக்கப்படும் பத்திரங்கள் விஷயத்தில், 15 நாட்களுக்குள் முடிவு எட்டப்பட வேண்டும். பட்டாவின் உண்மை தன்மை சரிபார்ப்பு தேவைப்படும் நிகழ்வில், இணையதளம் வாயிலாக விபரங்களை சரிபார்த்து, பத்திரத்தை திருப்பித்தர வேண்டும்.
இணைய வழியில் பட்டா தகவல்களை சரிபார்க்க முடியாத நிலையில், சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு கடிதம் எழுதி உண்மை தன்மையை சரி பார்க்க வேண்டும்; இது தொடர்பான கடிதப் போக்குவரத்து பிரதிகளை, ஆவணதாரருக்கும் அனுப்ப வேண்டும்.
முடக்கம் செய்ய வேண்டிய நிலையில் உள்ள பத்திரங்களில், மதிப்பு நிர்ணயம், கட்டட களப்பணி போன்ற பணிகளை, 15 நாட்களுக்குள் முடித்து மேலதிகாரிக்கு அனுப்ப வேண்டும். முடக்கம் செய்ய வேண்டிய பத்திரம் தொடர்பான குறிப்புகள் வந்ததில் இருந்து, 15 நாட்களுக்குள், காரணம் காட்டக் கோரும் அறிவிப்பை, ஆவணதாரருக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்
கடிதம் அனுப்பி, 15 நாட்களில் ஆவணதாரரிடம் இருந்து உரிய பதில் வராத நிலையில், அந்த ஆவணம் முடக்கப்பட்டதற்கான அறிவிப்பை பிறப்பிக்கலாம். இதில் உரிய நடைமுறைகளை பின்பற்றி, மூன்று மாதங்களுக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டும்
மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்களில், பொறுப்பு நிலையில் உள்ள சார் -பதிவாளர், உதவியாளர்கள், முடக்க ஆவணம் குறித்த விபரங்களை காலம் தாழ்த்தாமல், உடனுக்குடன் மேலதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றாத சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications