கார், பைக் எல்லாம் வாங்கி.. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுறீங்களா? இனிமேல் வருமான வரி நோட்டீஸ் வரலாம்
சென்னை: நீங்கள் புதிதாக ஒரு கார் வாங்குகிறீர்கள்.. அல்லது பைக் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுத்து போடுகிறீர்கள். கையிலே ஆகாசம் என்று பாடல் வைத்து போஸ்ட் போடுகிறீர்களா அப்போ உங்களுக்கு வருமான வரி நோட்டீஸ் வரலாம். அதாவது இனி உங்கள் சமூக வலைதள போஸ்ட்களை வருமான வரி கவனிக்க போகிறதாம்!
ஏப்ரல் 1, 2026 முதல், வருமான வரித் துறைக்கு கூடுதல் பவர் வழங்கப்பட உள்ளது. இனிமேல் வருமான வரி செலுத்த வேண்டியவர்களின் சமூக ஊடகக் கணக்குகள், தனிப்பட்ட மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், ஆன்லைன் முதலீட்டுக் கணக்குகள், வர்த்தகக் கணக்குகள் மற்றும் பலவற்றைச் சட்டப்பூர்வமாக அணுகுவதற்கு அதிகாரம் வழங்கி வருமான வரிச் சட்டம், 1961ல் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

புதிய வருமான வரி சட்டம்
புதிய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 கீழ் யாருக்கெல்லாம் வருமான வரி கிடையாது, எந்தெந்த வருமானங்களுக்கு வரி கிடையாது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. 'வருமான வரி மசோதா 2025' என அழைக்கப்படும் புதிய வருமான வரி மசோதா, ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. நேற்று இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961, மொத்தம் 298 பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த புதிய I-T மசோதாவில் இது 536 உட்பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது, தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961க்குப் பதிலாக கொண்டுவரப்படும். மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இது 'வருமான வரிச் சட்டம், 2025' என்று அழைக்கப்படும்.
'மதிப்பீட்டு ஆண்டு', 'நிதி ஆண்டு' மற்றும் 'முந்தைய ஆண்டு' ஆகிய வார்த்தைகளை 'வரி ஆண்டு' என்று மாற்றும். வரி ஆண்டு என்று ஏப்ரல் 1, 2026 முதல் 12 மாத நிதிக் காலத்தை கொண்டது ஆகும். இதன் வரைவு மசோதா தற்போது வெளியாகி உள்ளது. இந்த மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் (மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு பிரிவுகளாக மாறும்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 கீழ் பின்வரும் முறையில் வருமானங்கள் வந்தால் வரி கிடையாது
விவசாய வருமானத்திற்கு வரி கிடையாது.
கூட்டு நிறுவன லாபங்கள் மூலம் வரும் வருமானத்திற்கு வரி கிடையாது.
குடும்ப ஓய்வூதியங்கள் மூலம் வரும் வருமானத்திற்கு வரி கிடையாது.
உதவித்தொகை மூலம் வரும் வருமானத்திற்கு வரி கிடையாது.
NRE / FCNR டெபாசிட்டுகளுக்கான வட்டி மற்றும் குறுகிய கால விலக்குகள் மூலம் வரும் வருமானத்திற்கு வரி கிடையாது.
அரசின் நிதி உதவிகள் மூலம் வரும் வருமானங்களுக்கு வரி கிடையாது, பல்வேறு வகையான வருமானங்களுக்கான விலக்குகளை இந்த சட்டம் லிஸ்ட் போட்டு உள்ளது.
வருமான வரி மசோதாவில் உள்ள இந்தப் புதிய வடிவம் தனிநபர்கள் தங்களின் குறிப்பிட்ட வருமானத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறதா இல்லையா என்பதைத் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். புதிய சட்டம் இந்த செயல்முறையை எளிதாக்குகிறது.
வருமான வரி
இந்த நிலையில்தான் ஏப்ரல் 1, 2026 முதல், வருமான வரித் துறைக்கு கூடுதல் பவர் வழங்கப்பட உள்ளது. இனிமேல் வருமான வரி செலுத்த வேண்டியவர்களின் சமூக ஊடகக் கணக்குகள், தனிப்பட்ட மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், ஆன்லைன் முதலீட்டுக் கணக்குகள், வர்த்தகக் கணக்குகள் மற்றும் பலவற்றைச் சட்டப்பூர்வமாக அணுகுவதற்கு அதிகாரம் வழங்கி வருமான வரிச் சட்டம், 1961ல் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
தற்போதுள்ள I-T சட்டம், 1961 இன் பிரிவு 132ன் கீழ் வருமான வரி ஏய்ப்பு செய்ய வேண்டுமென்றே வெளிப்படுத்தாத வருமானம், சொத்து அல்லது ஆவணங்கள் ஏதேனும் இருந்தால், அதற்கான ஆதாரம் இருந்தால் சொத்துக்கள் மற்றும் கணக்குப் புத்தகங்களை சோதனை நடத்தவும், பறிமுதல் செய்ய முடியும். அதேபோல் இனி சமூக ஊடகக் கணக்குகள், தனிப்பட்ட மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், ஆன்லைன் முதலீட்டுக் கணக்குகளை ஆய்வு செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications