சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கேவலம்".. "இதுக்கு விஷத்தை குடிச்சிட்டு சாகலாம்" சீமானிடம் சிக்கிடுச்சாமே வீடியோ.. கடுப்பில் பாஜக

பாஜகவை நாம் தமிழர் கட்சி சீமான் சரமாரியாக விமர்சித்து பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவை சரமாரியாக சீமான் விமர்சித்துள்ளதுடன், எம்பி தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றையும் சீமான் விடுத்துள்ளார்.

கடந்த 2019 எம்பி தேர்தலின்போதே, 8 சதவிகிதம் வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் எண்ணமாக இருந்தது. ஆனால்.. அவர்களால் வெறும் 4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

ஏனென்றால் கமல் தனியாக கட்சி ஆரம்பித்து அப்போதுதான் முதல் தேர்தலையும் சந்தித்தார்.. அவரும் 4 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தார்.. அதனால்தான், நாம் தமிழருக்கு வந்திருக்க வேண்டிய ஓட்டுக்கள் கமலுக்கு சென்றது..

அப்போ கிண்டல் பண்ணீங்களே.. இப்போ ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா? பாஜகவை சீண்டும் திமுக அப்போ கிண்டல் பண்ணீங்களே.. இப்போ ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா? பாஜகவை சீண்டும் திமுக

 பன்றிக்கூட்டம்

பன்றிக்கூட்டம்

அதேபோல சட்டமன்ற கமலுடன் கூட்டணி வைப்பது போல ஒரு பேச்சு எழுந்தது.. அப்படி கூட்டணி வைத்தால், அதிமுக, திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களுடன், இவர்கள் 2 பேரின் வாக்குகளும் சேர்ந்து ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் என்றும் நம்பப்பட்டது.. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.. சிங்கம் தனியாகத்தான் வேட்டையாடும், நாய், ஓநாய், பன்றிதான் கூட்டமாக வேட்டையாடும் என்று சொல்லிவிட்டு போனார் சீமான். சொன்னது போலவே தனித்தும் களமிறங்கினார்.

முன்னோடி

முன்னோடி

எப்போதுமே பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருவது என்பது நாம் தமிழர் கட்சியின் ஆகச்சிறந்த கொள்கை ஆகும்.. இதை கமலும் செய்கிறார் என்றாலும், இதற்கு சீமான் முன்னோடி ஆவார்.. கடந்த எம்பி தேர்தலின்போது 40 தொகுதிகளிலும் இதுபோலவே தனித்து போட்டியிட்டு, 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் நிறுத்தினார்.. திமுக, அதிமுக என பாரம்பரிய மிக்க கட்சிகள் இருந்தாலும், யாருமே செய்யாத சாதனையாக ஆண்-பெண் வேட்பாளர்களுக்கு சரிசமமாக வாய்ப்பு தந்தார் சீமான்.

 அதிருப்தி ஓட்டுக்கள்

அதிருப்தி ஓட்டுக்கள்

இது பல தரப்பினரால் கவனிக்கப்பட்டது... அதேபோல, ஒவ்வொரு முறையும் தனித்து போட்டியிட்டு, மலைபோன்ற கட்சிகளுடன் மோதி வரும் சீமானின் தைரியம் பேசப்பட்டு வருகிறது.. அந்த வகையில் விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. திமுக, அதிமுக கட்சிகள் கூட்டணி தொடர்பாக பேச்சை துவங்கிவிட்டதாக தெரிகிறது.. கடந்த முறை, பாஜக எதிர்ப்பு + அதிமுக அதிருப்தி ஓட்டுக்களை சீமான் பெற்றதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது.. இந்த முறை யார் ஓட்டை பிரிக்க போகிறாரோ என்ற கவலை, அதிமுக + திமுக + பாஜக கவலைகளுக்கு சேர்ந்துள்ளது.. 40 தேர்தலிலும் போட்டியிடுவோம் என்று இன்றைய தினம் அறிவித்துவிட்டார் சீமான்.

 கிரேட் அறிவிப்பு

கிரேட் அறிவிப்பு

பெண் வாக்காளர்களுக்கும் சரிசம வாய்ப்பு என்றும் சொல்லி அசரடித்து விட்டார்.. இன்றைய தினம் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது உருவ சிலைக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியபோது, வழக்கம்போல் பாஜகவை சரமாரியாக வெளுத்தார்.. அந்த பேட்டியில் சீமான் சொன்னதாவது:

 படேலை தெரியுமா?

படேலை தெரியுமா?

"வாக்குக்காக மட்டுமே அம்பேத்கரை பற்றி பாஜக பேசிட்டு இருக்காங்க.. அம்பேத்கர் இன்னைக்குத்தான் அவங்க கண்ணுக்கு தெரிகிறார்... வல்லபாய் படேலுக்கு ஏன் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிலை வைச்சாங்க? நாட்டின் பெருமை காந்தியா? அம்பேத்கரா? வல்லபாய் படேலா? இந்தியாவை தாண்டி மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் கூட வல்லபாய் படேலை தெரியாது... அப்பறம் எதுக்கு இப்படி ஒரு சிலை?

 கரும்பு தோட்டம்

கரும்பு தோட்டம்

என்எல்சியில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்காததை கண்டித்து மிக விரைவில் நாங்கள் போராட்டம் நடத்த உள்ளோம்... உழைப்பில் இருந்து நுட்பமாக தமிழர்களை வெளியேற்றி விட்டனர்... அதற்கு பதிலாக, அந்த உழைப்புக்கு வட இந்தியர்கள் வருகிறார்கள்... கிராமங்களில் வட இந்தியர்கள் நாத்து நடுகிறார்கள்... கரும்பு வெட்டுகிறார்கள்... எல்லா இடத்திலும் அவங்களே இருக்காங்க.. இப்போது அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து விட்டால் இந்த நிலத்தின் அரசியலையும், அதிகாரத்தையும் வட மாநிலத்தவர்களே தீர்மானிப்பார்கள்.

 20 + 20

20 + 20

அப்போது நாங்கள் அரசியல் அதிகாரமற்ற அடிமைகளாகிவிடுவோம்.. இலங்கையில் நடந்துச்சே, அதுதான், இனி இங்கேயும் நடக்கும்... அதுக்குள்ளே தமிழக மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்... 20 ஆண் வேட்பாளர்களும், 20 பெண் வேட்பாளர்களும் களம் இறக்கப்படுவார்கள்... குஜராத் தேர்தல் வாக்குப் பதிவின்போது, ஒரே ஆள் மொத்த வாக்கையும் பதிவு செய்கிறார்... இது குறித்த வீடியோவே இருக்கிறது.. இதையெல்லாம் வெற்றி என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?

பாய்சன்

பாய்சன்

இப்படி வெற்றி பெறுவதற்கு பதில், விஷத்தை குடிச்சிட்டு சாகலாம்.. பாஜக 8 முறை இல்லை, 80 வது முறை ஜெயித்தாலும் அது மகா கேவலம்... கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது ஆளுநர் என்பவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் தெரியாது. அப்போது ஆளுநர் சட்டசபையில் மட்டும் பேசி விட்டு போவார்... இப்போது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைப்பதில்லை... ஆன்லைன் விளையாட்டு அவசர சட்டத்திற்கு ஏன் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை? ஆளுநர் என்பவர் ஆறாவது விரல் போன்றவர்... இந்த தமிழ்நாட்டுக்கு ஆளுநரே தேவையில்லை" என்றார்.

English summary
arent ashamed to say that bjp won the gujarat elections, asks Naam Tamizhar Party Seeman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X