கோலாகல ஐஸ்வர்யா-உமாபதி ரிசப்ஷன்.. மொத்த தலைவர்களும் அங்கேதான்! நெகிழ்ந்த அர்ஜுன் - தம்பி ராமையா
சென்னை: திரை உலகில் ஆக்சன் கிங் என வலம் வரும் அர்ஜுனனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் குணச்சித்திர நடிகராக கலக்கி வரும் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் கடந்த பத்தாம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழகத்தின் மிகப் பிரபலமான அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..

தமிழ் திரை உலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்சன் கிங்காக வலம் வரும் நடிகர் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவும் - நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதியும் கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

இதை அடுத்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து தம்பி ராமையா குடும்பத்தினரும் அர்ஜுன் குடும்பத்தினரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அரசியல் பிரபலங்களுக்கும் நடிகர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் திருமண அழைப்பிதழை நேரில் சென்று வழங்கினர்.

தொடர்ந்து கடந்த ஜூன் 10ஆம் தேதி இருவருக்கும் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் இரு வீட்டாரோடு தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் நடிகர்கள் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யா உமாபதி தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஜூன் 14ஆம் தேதியான நேற்று சென்னையின் பிரபலமான லீலா பேலஸில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு பசுமை பூங்கொத்தை வழங்கினார். இதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் திருமண நிகழ்வில் தனது மனைவி சௌமியா அன்புமணியுடன் கலந்து கொண்டார்.

மணமக்களை வாழ்த்திய அவர் அதற்கு பிறகு அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த டிடிவி தினகரன், அண்ணாமலை, கலைப்புலி தானு, சுந்தர் சி, குஷ்பு, ரோஜா, ஆர்கே செல்வமணி, நாசர் அவரது மனைவி கமீலா உள்ளிட்டோருடன் பேசி மகிழ்ந்தார்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதுபோன்று பல நடிகர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் திரளாக வந்து ஐஸ்வர்யா - உமாபதி தம்பதியை வாழ்த்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை அர்ஜுன் - தம்பி ராமையா குடும்பத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தற்போது இந்த புகைப் படங்களை தலைவர்கள் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ள நிலையில், அவை அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. மேலும் பலரும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications