சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிப்.27 இல் புதிய கட்சியை தொடங்குகிறார் அர்ஜுனமூர்த்தி வரும் தேர்தலிலும் போட்டி ரஜினி ஆதரவு தருவாரா?

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினியால் அறிமுகம் செய்யப்பட்ட அர்ஜுனமூர்த்தி வரும் 27-ஆம் தேதி புதிய கட்சி தொடங்குவதாக தகவல்கள வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்தின் தொடங்கப்படாத கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டவர் அர்ஜுனமூர்த்தி. இவர் ரஜினிக்காக பாஜகவில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் உடல்நிலை பாதிப்பால் ரஜினி கட்சி தொடங்க இயலாது என அறிவித்துவிட்டார். இதையடுத்து அர்ஜுனமூர்த்தி தனி கட்சி தொடங்க முடிவு செய்தார். இதற்கு ரஜின ரசிகர்கள் ஆதருவ தருமாறு கேட்டுக் கொண்டார்.

டெல்லியில் ஆலோசனை

டெல்லியில் ஆலோசனை

இதற்கு ரசிகர்கள் பலர் எதிர்த்தனர். இந்த நிலையில் டெல்லி சென்று தனது வழக்கறிஞர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஒரு வழியாக கட்சி பதிவை முடித்துவிட்டு இந்த தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் ஆதரவு

ரஜினிகாந்த் ஆதரவு

அவர் பிப்ரவரி 27ஆம் தேதி கோட்டூர்புரம் பகுதியில் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது. கட்சி தொடங்கினால் வரும் தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டி, யார் ஆதரவுடன் கட்சியை நடத்துவார், ரஜினிகாந்த் ஆதரவு தருவாரா என்பது குறித்து விரைவில் அர்ஜுன மூர்த்தி தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகயுள்ளன.

வருத்தத்தில் ரசிகர்கள்

வருத்தத்தில் ரசிகர்கள்

ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்ற வருத்தத்தில் உள்ள ரசிகர்களை ஒன்றிணைக்க இந்தப் புதிய கட்சி தொடக்கமா என அர்ஜுனமூர்த்தியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ரஜினி ரசிகர்கள் தனது கட்சியில் இணைந்தே ஆக வேண்டும் என நிர்பந்தம் செய்ய மாட்டேன். அவர்களாகவே வந்தால் மகிழ்ச்சி.

முக்கிய நபர்கள்

முக்கிய நபர்கள்

ரஜினிகாந்த் போன்ற முக்கிய நபர்கள் கட்சி தொடங்கும்போது பல்வேறு திட்டங்கள் வைத்திருந்தேன். ஆனால் அவை செயல்படுத்த முடியாத நிலையில் நானே புதிய கட்சியை தொடங்கி மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என்றார் அர்ஜுனமூர்த்தி.

English summary
Arjunamoorthy, who was appointed as Chief organiser for Rajinikanth's unstarted party, will start political party by Feb 27?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X