ஓவர் நைட்டில் என்ன ஆச்சு.. நேற்று மிரட்டல்.. இன்று புகழ்ச்சி.. செம கவனிப்பு போலயே.. வைரல் வீடியோ
Recommended Video
சென்னை: "எங்க ஆனந்த் அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." என்று கானா பாட்டிலேயே போலீசாருக்கு மிரட்டல் விடுத்த ரவுடிகள் கைதானார்கள். ஆனால், யார், என்ன செஞ்சாங்களோ தெரியல.. இப்போது போலீசாரை புகழ்ந்து அதே நபர்கள் பேந்த பேந்த விழித்து கொண்டு பாட்டு பாடி டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
போன வருஷம் ஜூலை 2-ந்தேதி ராத்திரி சென்னை ராயப்பேட்டை தர்கா அருகே ஒரு கும்பல் குடிபோதையில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தது. இந்த கும்பலுக்கு தலைவன் ஆனந்தன் என்பவன்.
அந்த சமயத்தில் ரோந்துக்கு வந்த தலைமைக் காவலர் ராஜவேல், அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். ஆனால் அந்த கும்பலோ, போதைவெறியில் ராஜவேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ராஜவேலு படுகாயமடைந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனந்த் அண்ணன்
இதையடுத்து அந்த ரவுடிகள் ஜிந்தா, வேல்முருகன், அஜித்குமார், சீனு, மகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஆனந்தன் எஸ்.ஆகிவிட்டார். ஜூலை 4-ந்தேதி ஆனந்தனை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால், போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால், ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

சுடுகாடு
இந்நிலையில், கடந்த 4-ந்தேதி ஆனந்தனின் முதலாமாண்டு நினைவுநாளை சக நண்பர்கள், ஆதரவாளர்கள் அனுசரித்தனர். இதற்காக ஆனந்தனை புதைத்த சுடுகாட்டின் பின்னணியில் ஒரு கானா பாட்டையும் பாடினார்கள். அதில், " வந்திட்டோம்டா.. வந்திட்டோம்டா... எங்க ஆனந்த் அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." என்ற வரிகள், மற்றும் ஆனந்தன் அண்ணனை புகழ்ந்தும் வரிகள் இருந்தன.

7 பேர் கைது
கானா பாட்டிலேயே போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இவர்கள், இந்த வீடியோவை இணையத்திலும் போட்டுவிட்டனர். வீடியோ வைரல் ஆனதையடுத்து, ராயப்பேட்டை போலீசாருக்கும் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, பாட்டாலேயே கொலை மிரட்டல் விடுத்த, சுரேஷ்குமார், விஜய், கார்த்திக், பிரசாத், கானா பாடகர் மணிகண்டன், சமீர் பாட்ஷா ஆகிய 7 பேரை ராயப்பேட்டை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

நம்ம காவல்துறை
என்ன ஆச்சோ தெரியவில்லை. போலீசாரை புகழ்ந்து ஒரு வீடியோ போட்டுள்ளனர். அதில், "இரவும் பகலும் தூங்காமல் வேலை செய்பவர். தன் குடும்பத்தையே மறந்து நம்மை காப்பாற்றுபவர். நம் நண்பர்களும் யாருங்க.. காவல்துறை தானுங்க.. காவல்துறை இல்லையென்றால் சுடுகாடாய் ஆகும் ஊருங்க.. அதை எடுத்து சொன்னால் கேளுங்க" என்று மிரள மிரள விழித்துக் கொண்டே பாடி வைத்திருக்கிறார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications