சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்டத்தில் விசாரணை நடத்தாதது ஏன்?.. ஆறுமுகசாமி விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்டத்தில் விசாரணை நடத்தப்படாதது ஏன் என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விளக்கமளித்துள்ளது.

ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் 75 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.

அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அதே ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானதாக அறிவிக்கப்பட்டார். எனினும் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்தனர்.

இன்னும் 3 வருஷம்தான்.. நாடு முழுக்க வருகிறது 5ஜி சேவை.. அஸ்வினி வைஷ்ணவ் உறுதிஇன்னும் 3 வருஷம்தான்.. நாடு முழுக்க வருகிறது 5ஜி சேவை.. அஸ்வினி வைஷ்ணவ் உறுதி

அதிமுக இரண்டாக பிரிந்த போது

அதிமுக இரண்டாக பிரிந்த போது

இந்த நிலையில்தான் அதிமுக இரண்டாக பிரிந்து தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் கிடைக்க அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர்ந்தன. அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் ஓபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கையே ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதுதான்.

ஓய்வு பெற்ற நீதியரசர்

ஓய்வு பெற்ற நீதியரசர்


அதன்படி ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் குறித்து ஓ பன்னீர் செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என 157 பேரிடம் விசாரணை நடத்தியது. இந்த ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.

600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை

600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை

இதையடுத்து இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலினிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி அறிக்கையை ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தாக்கல் செய்தார். சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை தாக்கல் செய்தார். விசாரணை கமிஷன் அமைத்த 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில் 14 முறை ஆணையத்திற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.

 ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு

இந்த நிலையில் இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா தரப்பு, அவர் தரப்பு என அனைவரையும் விசாரித்தாகிவிட்டது. அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள், அது போல் அப்பல்லோ மருத்துவமனையும் ஒத்துழைப்பு கொடுத்தது.

காலதாமதம்

காலதாமதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பா விசாரணையில் சசிகலாவை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற விரும்பவில்லை . ஜெயலலிதா மரணம் குறித்து எய்ம்ஸ் குழு 6 முறை அறிக்கை அளித்துள்ளது. இந்த விசாரணையை காலதாமதம் செய்யவில்லை என்றார். ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் விசாரணை நடத்தினீர்களா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ஆறுமுகசாமி பதில் அளிக்கையில், ஜெயலலிதா வீட்டிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரை எந்த குளறுபடியும் இல்லை. அதனால்தான் போயஸ் தோட்டத்தில் விசாரணை நடத்தவில்லை என தெரிவித்தார்.

English summary
Arumugasamy Commission explains about why it didnt inquire in Poes Garden as Jayalalitha was taken to hospital from Poes garden.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X