ஐஏஎஸ் அதிகாரி மாற்றம்.. தொழில் துறை செயலராக அருண் ராய்.. ‘ட்ரில்லியன் டாலர் எகானமி’ கனவை நோக்கி!
சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக அருண் ராய் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற கனவோடு தொழில் துறை முதலீடுகளை ஈர்க்க பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அருண் ராய் இதன் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளராக இருந்த கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், மத்திய அரசின் பணிக்கு சென்ற நிலையில், அருண் ராய் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு அரசின் புதிய தொழில்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1989 ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிருஷ்ணன், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இவர் வகித்த தொழில்துறை செயலர் பதவி காலியாக இருந்த நிலையில் அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.
அருண் ராய் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளராக இருந்து வந்த நிலையில், அவர் தொழில் துறை, முதலீடு, வணிகத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். நேற்று இரவு தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், இன்று ஒரு ஐஏஎஸ் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு அண்மைக் காலமாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு - ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்பது முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவாக இருந்து வருகிறது. இதற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும். இதற்கு தொழில்துறை, சிறப்பாக பணியாற்ற வேண்டும். தொழில் துறை அமைச்சராக டிஆர்பி ராஜா சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட நிலையில் இப்போது துறை செயலரும் மாற்றப்பட்டுள்ளார்.
அருண் ராய் ஐ.ஏ.எஸ், முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2018-ன் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications