ஒருவர் டைப் அடிக்க.. இன்னொருவர் கேள்வி கேட்க! தமிழில் பேசுங்க.. செந்தில் பாலாஜி சொன்ன வார்த்தை! ஷாக்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணையின் போது அதிகாரிகளிடம் சொன்ன விஷயங்கள் சில விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில்தான் தற்போது அமலாக்கத்துறை மூலம் செந்தில் பாலாஜி கஸ்டடி எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இதுவரை 2 நாட்கள் விசாரணை முடிந்துள்ளது.
விசாரணை: பொதுவாக அமலாக்கத்துறை விசாரணைகள் எஸ் ஆர் நோ மாதிரி கேள்விகளாக இருக்கும். அதில் வரும் பதில்களை வைத்து கிளை கேள்விகளை கேட்பார்கள். இதற்கு விளக்கமாக பதில் அளிக்க வேண்டும்.
செந்தில் பாலாஜியிடம் அப்படி எஸ் ஆர் நோ கேள்விகள் நேற்று 50 கேட்டுள்ளனர். இதற்கு அவர் சொன்ன பதிலை வைத்து கிளை கேள்விகள் 40 கேட்டுள்ளனர். இதற்கு செந்தில் பாலாஜி விரிவாக பதில் அளித்து இருக்கிறார். சில விஷயங்கள் குறித்து அவர் நீண்ட நேரம் விளக்கங்களை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதை எல்லாம் அமலாக்கத்துறை ரெக்கார்ட் செய்துள்ளது.
ஏற்கனவே ரெக்கார்ட் செய்யப்பட்ட கேள்விகள் பலவற்றை செந்தில் பாலாஜியிடம் கேட்டுள்ளனர். இதை ஒரு பக்கம் ரெக்கார்ட் செய்ய இன்னொரு பக்கம் அதை அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் டைப் செய்துள்ளார்.
தமிழ் கேள்வி: இதில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி பதில் சொல்லி இருக்கிறார். ஆனால் சில தொழில்நுட்ப ரீதியான ஆங்கில கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி பதில் அளிக்க விரும்பவில்லை. தொழில்நுட்ப ரீதியாக ஆங்கில கேள்விகள் குழப்பமாக இருக்கும் என்பதால் செந்தில் பாலாஜி அதற்கு பதில் சொல்லவில்லையாம்.
இதையடுத்து ஆங்கிலத்திற்கு பதிலாக தமிழில் கேள்வி கேளுங்கள், பதில் சொல்கிறேன் என்று செந்தில் பாலாஜி சொல்லி இருக்கிறார். இதையடுத்து அங்கே தமிழ் தெரிந்த அதிகாரிகள் இவரிடம் தமிழில் கேள்வி கேட்டுள்ளனர். அதன்பின் செந்தில் பாலாஜி தமிழில் பதில் சொல்லி உள்ளார்.
செந்தில் பாலாஜி கொடுத்த வாக்குமூலங்கள் அமலாக்கத்துறை மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியை மேலும் கஸ்டடியில் எடுக்கவும், அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அமலாக்கத்துறை விரும்பும் என்கிறார்கள். அதிகாரபூர்வமாக இதில் கேள்விகளை அமலாக்கத்துறை கேட்கும் என்கிறார்கள்.
அதிகாரபூர்வமற்ற முறையில் நிகழ்கால தமிழ்நாடு அரசுக்கு எதிராக சில கேள்விகள் கேட்கப்படலாம் இதனால் அவரை அடைத்து வைக்கவும், விசாரணை செய்யவும் அறைகளை அமலாக்கத்துறை தயார் செய்து உள்ளது.












Click it and Unblock the Notifications