குறிவைத்து அடித்த எடப்பாடி பழனிசாமி.. வீழ்த்தப்பட்ட ஜெயக்குமார்.. அதிமுக 2021 தேர்தல் பிளாஷ்பேக்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முட்டி மோதி வருகிறது. அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. 23 பேர் கொண்ட முன்னாள் அமைச்சர்கள் பட்டியலில் 20 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளனர். தற்போதுள்ள 16 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு அதிமுகவில் மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கியுள்ளனர். இதில் சிலர் தொகுதி மாறியுள்ளனர். அதிமுக முக்கிய தலைவர்கள் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது என்ன ஆனது தெரியுமா. இதோ பிளாஷ்பேக்.
2011, 2016 ஆகிய 2 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்ற நிலையில், 2021 தேர்தலில் அங்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக களமிறங்கினார். அங்கு வன்னிய சமுதாயத்தினர் பரவலாக இருப்பதால் பாமகவை கூட்டணியில் தக்க வைத்து, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தது விமர்சனமானது. அந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சுமார் 93,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற சீனியர்கள்
திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்ததால் அப்போதைய அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக, கார்த்திகேய சிவனேபாதியை திமுக தொண்டாமுத்தூர் வேட்பாளராக களமிறக்கியது. வேலுமணி தொண்டாமுத்தூருக்கு கூடுதல் கவனம் செலுத்தி சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கே.பி. முனுசாமி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, சி. விஜயபாஸ்கர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான சி.வி. சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். 2011 சட்டமன்ற தேர்தலில் விழுப்புரத்தில் முதல்முறையாக போட்டியிட்ட சி.வி. சண்முகம், அப்போதைய சிட்டிங் அமைச்சர் பொன்முடியை 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் விழுப்புரத்தில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அமீர் அபாஸை 22,291 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சி.வி சண்முகம், ஜெயகுமார் தோல்வி
அதே நம்பிக்கையுடன் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் லட்சுமணன் போட்டியிட்டார். லட்சுமணன் 14,868 வாக்குகள் வித்தியாசத்தில் சண்முகத்தை தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால் அதிருப்தியான சண்முகம் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் தோல்வியடைந்தோம் என்று புலம்பினார். இதனால் அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கி அதிமுக தலைமை கூலாக்கியது.
இதேபோல ராயபுரம் தொகுதியில் தொடர்ந்து எட்டாவது முறையாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் களம் காண்கிறார். 1991 தேர்தலில் முதல்முறையாக ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயகுமார் திமுக வேட்பாளர் மதிவாணனை எதிர்த்து வெற்றி பெற்றார். 1996 தேர்தலில் திமுக மதிவாணனிடம் ஜெயக்குமார் தோல்வியடைந்தார். 2001, 2006, 2011, 2016 ஆகிய 4 தேர்தல்களில் ஜெயகுமார் தொடர்ந்து வெற்றி பெற்றார்.
11 சிட்டிங் அமைச்சர்களுக்கு ஷாக்
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஐ டிரீம்ஸ் மூர்த்தி, ஜெயகுமாரை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் தோல்வியடைந்தேன் என ஜெயகுமார் குமுறி தள்ளினார். இதேபோல கரூர் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், அப்போதைய சிட்டிங் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தோல்வியடைந்தார். கடலூர் தொகுதியில் அப்போது அமைச்சராக இருந்த எம்.சி சம்பத் தோல்வியடைந்தார். இதேபோல ராஜேந்திரபாலாஜி, கே.சி வீரமணி, வெல்லமண்டி நடராஜன், பெஞ்சமின் உள்ளிட்ட 11 அமைச்சர்கள் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications