இட்லி விலை ஏறுதே.. அட்லி ஏன் பேசல? டெல்டாவில் தண்ணீர் இல்லை.. சினிமாக்காரர்கள் எங்கே போனாங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சினிமாவில் பெரிய பெரிய படங்களை எடுக்கிறீர்கள்.. ஆனால், மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் ஏன் பேசுவதில்லை? இயக்குநர் அட்லியை மையமாக வைத்து கோடீஸ்வரன் எழுப்பியிருக்கும் இந்தக் கேள்விதான் இப்போது சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்க்கிறது. இட்லி விலை உயர்வு, ஜிஎஸ்டி முதல் விவசாயிகள் பிரச்சினை வரை சினிமா பிரபலங்கள் பேச வேண்டிய விஷயங்களை லிஸ்ட் போட்ட கோடீஸ்வரன், விஜய் அரசியல், தனுஷின் அரசியல் வருகை எனப் பல விஷயங்களையும் தனது பாணியில் பேசியுள்ளார்.

அரசியல் களம் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளரும், வழக்கறிஞருமான கோடீஸ்வரன், விஜய்யின் அரசியல் செல்வாக்கு, தனுஷின் அரசியல் வருகை, சினிமா பிரபலங்களின் சமூக அக்கறை எனப் பல விஷயங்களைப் பற்றிப் பேசியுள்ளார். அதன் சுருக்கம் இதுதான்:

Atlee Tamil Cinema Celebrity Silence

18 வயசு பசங்க.. விசில்தான்

"18 வயசானதுமே விசில்தான்.. 18 முதல் 20 வயது வரையிலான பசங்க விஜய் சாரோட வைப்லயே வருவாங்க. அதில் சந்தேகமே கிடையாது. ஆனால், அடுத்த தலைமுறையில் வேறு நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் என்னவாகும்? தனுஷ் வருகிறார் என்று சொல்கிறீர்கள். அவரும் இளைஞர்களிடம் செல்வாக்கு கொண்டவர்தானே?

தனுஷ் அரசியலுக்கு வந்தால், விஜய்யின் செல்வாக்கில் கால் பங்கு வரை பாதிப்பு ஏற்படலாம். ஆனால், அதற்குள் ஏதாவது செய்து அதை சமாளித்துவிடுவார்கள்.. அதனால் பிரச்சினை இல்லை. தனுஷ் தனியாகக் கட்சி தொடங்குகிறாரா, அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்கிறாரா என்பதுதான் முக்கியம்.

தனுஷ் கட்சி ஆரம்பித்து ஏதாவது ஒரு கூட்டணிக்குப் போய்விட்டால், தவெக திரும்பி வருவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகலாம். அடுத்த பொதுத் தேர்தலில் தவெகவுக்கு விசில் கிடையாது.. சங்கு தான் என்ற நிலைமைகூட வரலாம்.

தனுஷ் வேட்டி கட்டிக்கொண்டு, அசுரன் படத்தில் வருவதை போல, கசங்கிய வேட்டியுடன் கிராமம் கிராமமாக சென்றால்கூட அவருக்கு ஆதரவு கிடைக்கலாம். தனுஷுக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனும் அரசியலுக்கு வந்தால், இது எங்கே போய் நிற்கும் என்றே தெரியவில்லை. சீமானின் வாக்கு வங்கியும் தொடர்ந்து சரிந்து வருகிறது. அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பாகக்கூட இருக்கலாம். ரஜினிகாந்த் திடீரென ஏதாவது முடிவெடுத்தால்கூட அரசியல் கணக்கு மாறிவிடும்.

அட்லி மாதிரி.. இட்லி விலை ஏறுது

சினிமாவில் இருக்கிறவர்கள் அரசியலுக்கு வருவது ஒருபுறம் இருக்கட்டும். மக்களுடைய பிரச்சினைகளுக்காக அவர்கள் என்ன பேசுகிறார்கள்? அட்லி மாதிரி இயக்குநர்கள் பெரிய படங்களை எடுக்கிறார்கள். ஆனால், இட்லி விலை ஏறுகிறது.. இட்லிக்கு ஜிஎஸ்டி வந்தபோதுகூட அட்லி எதுவும் பேசவில்லை. அவரும் இட்லிதானே சாப்பிடுகிறார்?

உங்கள் அண்ணனுக்கு ஒன்று என்றால் மட்டும் உடனே ஓடிவருகிறீர்களே? ஏதாவது பொதுமக்கள் பிரச்சினையைப் பற்றிப் பேசியிருக்க வேண்டாமா?

நீங்கள் இருட்டில் படம் எடுக்கிறீர்கள்.. எடிட்டிங் செய்து உங்கள் பிழைப்பைப் பார்த்துக்கொள்கிறீர்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் மக்களைப் பாதிக்கும் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசியிருக்கிறீர்களா? படம் எடுத்தோம், நம்முடைய வேலையைப் பார்த்தோம் என்று மட்டும் இருந்தால் எப்படி?

பாரதிராஜா, அமீர்

எங்கள் ஐயா பாரதிராஜா இருந்தார். அவரைப் பற்றி நான் இப்படிப் பேசுவேனா? அமீர் இருக்கிறார்.. அவரைப் பற்றி இப்படிப் பேச முடியுமா? பாக்யராஜ் இருந்தார். அவர்களுக்கெல்லாம் சமுதாயத்தின் மீது அக்கறை இருந்தது. தனிப்பட்ட நடிகர்களுக்கு அவர்கள் துதி பாடவில்லை.. சமுதாயத்துக்காக பேசினார்கள்.

பாக்யராஜுக்கு அரசியல் புரிதல் இருந்தது. எம்ஜிஆர் மீது அவருக்கு ஈர்ப்பும் இருந்தது. சத்யராஜும் நடிகர்தான்.. பிரகாஷ் ராஜும் நடிகர்தான். அவர்களைப் பற்றி இப்படி பேச வேண்டிய அவசியம் இல்லை. எம்.ஆர்.ராதாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய பேச்சில் இருந்த டைமிங், அறிவுப்பூர்வமான சிந்தனைகள் எல்லாமே தனித்துவமானவை.

டெல்டாவில் தண்ணீர் இல்லை

இப்போது பிரதமர் வந்துவிட்டுப் போய்விட்டார்... ஆனால், டெல்டாவில் தண்ணீர் இல்லை.. அரிசி விலை ஏறிப்போயிருக்கிறது. விவசாயிகளுக்கான இழப்பீடும் கிடைக்கவில்லை. இவற்றைப் பற்றியெல்லாம் சினிமா பிரபலங்கள் பேச வேண்டாமா?

அரசியலில் இருப்பவர்கள் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். சினிமா துறையில் இருப்பவர்களும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பேச வேண்டும்... எதை பற்றியும் பேசாத இவர்கள், யாராவது பணக்காரர்கள் கல்யாணத்தில் ஜிகுஜிகு உடையுடன் கலந்து கொள்ளத்தான் இவர்களுக்கு தெரியும்" என்றெல்லாம் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+