அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வருகைப்பதிவேடு ஆப்.. ஆக.1 முதல் அமல் - சம்பளப்பிடித்தம் உண்மையா?
சென்னை: செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்யப்படும் என்றும் காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
குறிப்பாக சில அரசுப் பள்ளிகளில் நேரத்திற்கு ஆசிரியர்கள் வராமல் இருப்பதால் மாணவர்கள் வீடு திரும்பி செல்வது, சுவர் ஏறி குதிப்பது போன்ற செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற தகவலும் வெளியானது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழிகாட்டு நெறிமுறைகள்
பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் 77 வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது. தற்போது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு உத்தரவு
தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்கும் முன்னே வந்து விட வேண்டும். பள்ளியில் மாணவர்களின் சண்டை,சாலை விபத்து, பாலியல் வன்முறை உள்ளிட்ட எது நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும். பேருந்துகளில் வரும் மாணவர்கள் மேற்கூரையில் அமர்ந்து பயணிப்பதை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறைவிட்டால் அது குறித்தும் முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பள்ளிகளில் தரமான கட்டிடங்கள்
பழுதான கட்டிடத்திலோ , மரத்தடியிலோ வகுப்பு நடத்தக் கூடாது. தனியார் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியான முறையில் உள்ளதா?விடுதிக் கட்டடங்கள்,தீ தடுப்பு ஏற்பாடுகள் உரிய அனுமதி பெற்று உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

சத்துணவு
மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை தலைமை ஆசிரியர் ஆய்வு செய்து தரத்தையும், சுகாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கட்டாயம் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பாடு பயிற்சி அளிக்க வேண்டும். ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் கைபேசி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

தண்டனை தரக்கூடாது
மாணவர்களை எந்த காரணம் கொண்டும் ஆசிரியர்கள் சொந்த வேலைக்கு பயன்படுத்தக் கூடாது. மாணவர்களுக்கு அவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது. பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்பதுடன் மாணவர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை விளக்கம் தருமா?
இதனிடையே பள்ளி ஆசிரியர்களுக்கு வருகைப்பதிவேடு ஆப் குறித்தும் சம்பளப்பிடித்தம் செய்யப்படும் என்பது குறித்தும் வெளியான செய்தி பொய்யானது என்று கூறப்பட்டது. வெளியான தகவல் உண்மைதான் என்றும் அது குறித்து பள்ளிக்கல்வித்துறை வாய்மொழியான அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். பல ஊர்களில் மலை கிராமங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இன்டர் நெட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்தால் மட்டும் உண்மை நிலை தெரியவரும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications