2026ல் பூமிக்கு வரும் ஏலியன்..உலகத் தலைவராகும் புதின்! தங்கத்தின் விலை தாறுமாறு.. பாபா வங்கா கணிப்பு
சென்னை: உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை சரிவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு உலகம் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் என முன்கூட்டியே கூறியிருக்கிறார் திர்க்கதரிசனம் சொல்லும் பாபா வங்கா. இந்த உலகளாவிய பொருளாதாரா நெருக்கடி காரணமாக "கேஷ் கிரஷ்" ஏற்படும் பணத்தின் மதிப்பு சரியும் எனவும், அதன் பின்னர் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துவிடும் என அவரது தீர்க்கதரிசனம் கூறுகிறது.
இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து, 10 கிராம் தங்கம் ரூ.1.23 லட்சம் வரை சென்றுள்ள நிலையில், பாபா வங்காவின் கணிப்பு மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. சர்வதேச சந்தை மாற்றங்கள், பணவீக்கம், மந்தநிலை அச்சம் ஆகியவை தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மாற்றியுள்ளன.
இதனால் விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் தங்கம் வாங்க துடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாபா வங்காவின் தீர்க்கதரிசனத்தின் படி, 2026ல் உலக நிதி சந்தையில் பெரும் அதிர்வு ஏற்பட்டு, பாரம்பரிய முதலீட்டு வழிகள் அபாயத்துக்கு உள்ளாகும்.

பாபா வங்கா தீர்க்கதரிசனம்
இதன் காரணமாக தங்கத்தின் தேவை வெகுவாக அதிகரித்து, விலை 25% முதல் 40% வரை கூடும் என கருதப்படுகிறது. அதன்படி இந்தியாவில் தங்க விலை, 10 கிராம் தங்கம் ₹1.62 லட்சம் முதல் ₹1.82 லட்சம் வரை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. வரும் 2026ஆம் ஆண்டு மிகப்பெரிய பணத்தட்டுப்பாடு, நிதி நெருக்கடி ஏற்படும், வங்கி அமைப்புகள், பங்குச் சந்தைகள் சரிவது, நிதி அமைப்பையே ஆட்டங்காண வைக்கும். இதுபோன்ற நேரங்களில் பொதுவாக தங்கம் அதிகமாக இருக்கும்.
தங்க விலை உயர்வு
கடந்த காலங்களில் இதுபோன்ற நெருக்கடி காலங்களில் 20 - 50 சதவிகிதம் தங்கம் விலை உயர்ந்தது. இதுவே 2026லும் நிகழலாம். 25 முதல் 40 சதவிகிதம் விலை உயரலாம். இந்தியாவில் அதிலும் குறிப்பாக அடுத்த தீபாவளி நேரத்தில் 10 கிராம் தங்கம் விலை ரூ.1,62,500 முதல் 1,82,000க்கு விற்பனையாகலாம் என கணித்துள்ளார் பாபா வங்கா.
ரஷ்ய தலைவர் புடின்
மேலும், 2026ல் ரஷ்யா-மேற்கு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டு, அதில் ரஷ்ய தலைவர் புடின் உலக அளவில் ஆதிக்கத்துடன் பெரிய தலைவராக எழுவார் என்றும் பாபா வங்கா கூறியதாக அவரை பின் தொடர்பவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று 2026 நவம்பரில் மனிதர்களுக்கு முதல் முறையாக வெளி கிரக வாசிகளுடன் தொடர்பு ஏற்படும் எனவும் அவரது தீர்க்கதரிசனத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாபா வங்கா யார்?
உலக அளவில் தீர்க்கதரிசனங்களுக்கு பெயர் போனவர் பாபா வங்கா. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பாபா வாங்க இருபதாம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவர். சிறு வயதிலேயே பார்வையை இழந்த அவருக்கு எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஆற்றல் இருந்ததாக சொல்லப்படுகிறது. உலக அளவில் சீனாவின் வளர்ச்சி, இங்கிலாந்து இளவரசி டயானாவின் மரணம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் என பல விஷயங்களை துல்லியமாக கணித்தவர் பாபா வங்கா என கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பெரிய பின் தொடர்பாளர் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications