சென்னையில் 15 நாட்களுக்கு பேரணி, ஆர்பாட்டங்கள் நடத்த தடை.. மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு
சென்னை: சென்னை நகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை விதித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். அக்டோபர் 15ஆம் தேதி இரவு 11 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது .இதன் மூலம் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பெட்ரோல் குண்டு வீச்சு ஒருபுறம் இருக்க ஆர்எஸ்எஸ் பேரணி , விசிக மனித சங்கிலி அறிவிப்பு போன்றவை தமிழகத்தில் பதற்றமான சூழலை உண்டாக்கியது.
இதனையடுத்து தமிழக அரசு எந்த ஒரு பேரணி பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி கிடையாது என்று தெரிவித்த நிலையில் நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவம்பர் 6ஆம் தேதி அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில் சென்னை நகரில் பேரணிகள் , ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை நகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு செப்டம்பர் இரவு 11 மணிக்கு தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதி இரவு 11 மணி வரை அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications