சென்னையில் ஐஎஸ் பயங்கரவாதிகளை தேடும் என்ஐஏ! ராமேஸ்வரம் கபே கேஸ் முடிச்சு அவிழ்கிறது?
சென்னை: பெங்களூர் ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகளின் தேடுதல் வேட்டை சென்னையில் தொடர்ந்து வருகிறது. இந்த வழக்கில் கைதான 2 பேர் சென்னையில் தங்கி இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி,வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளித்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் கைதான 2 பேருக்கு உதவியவர்களை சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெங்களூரில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி திடீரென்று குண்டு வெடித்தது. சம்பவத்தன்று மதியம் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் வழக்கம்போல் உணவுகள் பரிமாறப்பட்டன.

அப்போது திடீரென்று மர்மபொருள் வெடித்தது. ஓட்டலில் கைகழுவும் இடத்தின் அருகே இருந்து மர்மபொருள் வெடித்தது. அந்த பொருளை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது அது வெடிகுண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என மொத்தம் 9 பேர் காயமடைந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் மற்றும் தடயவியல் துறையினர், என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் உணவகத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுபற்றி பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு இந்த வழக்கு என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில்தான் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில், பயங்கரவாதிகள் முசாவிர் ஹுசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மதீன் அகமது ஆகியோருக்கும், குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
30 வயதான அப்துல் மதீன் முகமது தாஹா, மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பதுங்கியிருந்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு 10 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் விசாரணையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளன. அப்துல் மதீன் முகமது தாஹாவின் வாக்குமூலத்தின்படி, 2020 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு முக்கிய இந்து தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்படாமல் தப்பித்தார். தேடப்பட்ட நபராக இருந்த அப்துல் மதீன் அகமது தாஹா, கோவை, மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் நீண்ட காலம் தங்கியிருந்தார்.
மேலும் இளைஞர்களுக்கு ஆயுதம் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி அளித்ததும், அவர்களை பயங்கரவாதிகளாக்கி ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பதில் ஈடுபட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் விசாரணையில், சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த 33 வயது நபர், ஷாகிப் மற்றும் தாஹா ஆகியோரின் முக்கிய கூட்டாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதோடு வடடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒருவரும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். குண்டுவெடிப்புக்குப் பிறகு குற்றவாளிகள் இருவரும், கொல்கத்தாவுக்கு தப்பிச் செல்ல உதவியதில் இவர் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது இவர் தப்பி ஓடிவிட்டார். அவரை என்ஐஏ அதிகாரிகள் சென்னை உள்பட பல இடங்களில் தேடிவருகின்றனர்.
-
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications