இந்தியன் பேங்க்கில் அக்கவுண்ட் இருக்கா? கலங்கடிக்கும் குற்றங்கள்.. இதை உடனே செய்யுங்க.. வேற வழியில்லை
சென்னை: மொபைல் வங்கி சேவையை பிரபலப்படுத்த வேண்டும் என்றும் வாடிக்கையாளருடன் நல்லுறவை வளர்க்க வேண்டும் என்றும் இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் சாந்திலால் ஜெயின் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் பொதுமக்களின் நலன்கருதி முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
சமீபகாலமாகவே, வங்கிகளின் பெயர்களை சொல்லி, ஆன்லைன் மோசடிகள் அரங்கேறி வருகின்றன.. இதனால் லட்சக்கணக்கில் அப்பாவி மக்கள் ஏமாறுகிறார்கள்.. அதனால்தான் சம்பந்தப்பட்ட வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தியும், எச்சரித்தும் வருகிறது.

வாடிக்கையாளர்கள்: குறிப்பாக, வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் ரகசியமாக வைக்க வேண்டும், யாரிடமும் பகிர வேண்டாம். மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் அணுகலாம் என்று வங்கிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
அதுமட்டுமல்ல, "பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை யாருக்குமே தெரிவிக்கவும் வேண்டாம். வங்கி மேலாளர்கள் ஒருபோதும் ஓடிபி கேட்கவும் மாட்டார்கள்.. ஒருவேளை, உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால் எக்காரணம் கொண்டும் சொல்லக்கூடாது. அவர்களது இணைப்பையும் துண்டித்துவிடுங்கள்" என்று சைபர் கிரைம் போலீசாரும் அறிவுறுத்தியபடியே இருக்கிறார்கள்.
சைபர் குற்றங்கள்: இந்நிலையில், வங்கிகளின் பெயரை சொல்லி, சைபர் குற்றங்களும் அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்து வாடிக்கையாளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநர் சாந்திலால் ஜெயின் கேட்டுக் கொண்டுள்ளார்.
அகில இந்திய இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்க மாநாடு சென்னையில் நேற்று நடந்தது.. இந்த மாநாட்டில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரூபம் ராய், இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர்கள் அஷுதோஷ் சவுத்ரி, மகேஷ் குமார் பஜாஜ், சிவ் பஜ்ரங் சிங், பிரஜேஷ் குமார் சிங் உள்ளிட்டோரும் பேசினார்கள்.
சிறப்பு விருந்தினர்கள்: வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்திலால் ஜெயின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
"இந்தியன் வங்கியை பொறுத்தவரை, கடந்த 2020-21-ல் ரூ.3 ஆயிரம் கோடியும், 2021-22-ல் ரூ.4 ஆயிரம் கோடியும் என படிப்படியாக உயர்ந்த லாபம், இப்போது ரூ.8 ஆயிரம் கோடியாக உயர்ந்துவிட்டது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.2,400 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது.. அதேபோல, சிறுசேமிப்பு டெபாசிட் வளர்ச்சியிலும் முதலிடத்தை பெற்றுள்ளது. எனவே, நம்முடைய வங்கியின் 40 ஆயிரம் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
கஸ்டமர்கள்: வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள், தேவைகளுக்குகேற்றபடி, அவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சேவையும் வழங்க வேண்டும்.. மியூச்சுவல் ஃபண்ட், பங்குசந்தைகளில் நல்ல லாபம் கிடைப்பதால் இளம் தலைமுறையினர் அவற்றில் அதிகம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. இதனால், வங்கி டெபாசிட்துறை கடும் சவாலை சந்திக்கும் வகையில் உள்ளது.
இதுபோலவே, கடன் சந்தையிலும் பல சவால்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, வங்கி சேவைகள் அனைத்தும்மின்னணுமயம் ஆக்கப்பட்டுவிட்டன. ஆனால், சைபர் குற்றங்கள் மலிந்து வருகின்றன. இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க வேண்டுமானால், வாடிக்கையாளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
செல்போன்: மொபைல் வங்கி சேவையை பிரபலப்படுத்த வேண்டும். வாடிக்கையாளருடன் நல்லுறவை வளர்க்க வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பாக இருதரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு 17 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதேபோல, ஓய்வு பெற்ற ஊழியர்கள் தாங்கள் எடுத்துள்ள காப்பீடுகளுக்கு அதிக பணம் பிரீமியமாக செலுத்த வேண்டியிருப்பாக கூறுகிறார்கள்.. எனவே, இதுகுறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
முன்னதாக, சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.சேகரன் அறிமுகஉரையின்போது, "இந்தியன் வங்கியுடன் சில வங்கிகள் இணைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல்மாநாடு இது. வங்கிகள் இணைப்புக்கு பிறகு, உறுப்பினர்களின் சலுகைகள், பணி நியமனம் உள்ளிட்டவற்றில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு, அதற்கெல்லாம் தீர்வு காணப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பு: வங்கி பரிவர்த்தனைகள் மின்னணுமயம் ஆக்கப்பட்ட பிறகும்கூட வேலைச்சுமை குறையவில்லை. விடுமுறை நாட்களில்கூட பணியாற்ற வேண்டி உள்ளது. அதிகாரிகள், ஊழியர்களுக்கு சரியான பணிச் சூழலை ஏற்படுத்தி தருவது அவசியம். பொதுத் துறை வங்கிகளை வலுப்படுத்தவும், தனியார்மயமாக்கலை தடுக்கவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications