பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா அவசியம்.. மத்திய அரசு சூப்பர் திட்டம்.. கேஸ் சிலிண்டர் வீடு தேடி வருதே
சென்னை: வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் பற்றி தெரியுமா? பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் பலனை பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன? இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? அதேபோல, எல்பிஜி சமையல் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு சிலிண்டர் நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் வரையில் வழங்கப்படும் விபத்துக் காப்பீட்டினை பெறுவதற்கான முறைகள் என்னென்ன தெரியுமா பெண்கள் பெறக்கூடிய திட்டமான, உஜ்வாலா திட்டத்திற்கு, அளிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
இந்தியாவில் பெண்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், ஏராளமான நலத்திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. அதில் ஒன்றுதான், "பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா" திட்டமாகும்..

இதன்மூலம், பயனாளிகளுக்கு கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்குகிறது. மத்திய அரசு 2016ல் இந்த திட்டத்தை ஆரம்பித்ததுடன், இத்திட்டத்தை பெறுவதற்கான சில தகுதிகளையும், அளவுகோல்களையும் நிர்ணயித்து.. அதன்படி உஜ்வாலா திட்டத்தின் பலனை கோடானு கோடி பேர் பெற்று வருகிறார்கள்.
தகுதிகள், பலன்கள்
குறிப்பாக உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பலன்களை பெற்று வரும் பெண்கள், இலவச கேஸ் சிலிண்டரின் பலன்களையும் பெற முடியும், வறுமைக்கோட்டுக்கு கீழே குடும்ப அட்டை வைத்திருக்கும் பெண்கள், 18 வயது பூர்த்தியாகியிருந்தாலே இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், கேஸ் சிலிண்டர் இணைப்பு எதுவும் இதுவரை பெற்றிருக்கக்கூடாது.
இந்த திட்டத்தை பெற, E-KYC இணைப்பும் அவசியமாகும்.. ஆனால், அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.. மற்றவர்கள் அனைவருமே, ஆதார் அட்டை, முகவரி சான்றிதழ், ரேஷன் கார்டு, பயனாளி, வங்கிக் கணக்கு எண், வங்கியின் IFSC மற்றும் குடும்பத்தின் நிலையை உறுதிப்படுத்தும் துணை KYC, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஜாதி சான்றிதழ், விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், ஜன் தன் வங்கிக் கணக்கு அல்லது வங்கி பாஸ்புக் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
PM உஜ்வாலா யோஜனா திட்டத்தில் எப்படி விண்ணப்பிக்கலாம்
- https://pmuy.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் நுழைந்து, Apply For New Ujjwala 2.0 Connection என்ற ஆஷ்பனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு கேஸ் நிறுவனங்களிடமிருந்து சிலிண்டர் பெறுவதற்கான இணைப்பிற்குள் சென்று, உங்களது பெயர், முகவரி, செல்போன் நம்பரை செல்போனையும் எண்ணை நிரப்ப வேண்டும்.
பிறகு PIN நம்பரை பதிவிட்டுவிட்டு, கையிலுள்ள ஆவணங்களை அப்லோடு செய்து, 'Apply' பட்டனை கிளிக் செய்தால் போதும். உங்கள் விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு சிலிண்டர்களை வழங்குவார்கள்.
பட்டியல் வகுப்பு/பழங்குடி குடும்பங்கள், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம், அந்த்யோத்யா அன்ன யோஜனா, காட்டு வாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை மற்றும் முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், நதியோர தீவுகளில் வசிக்கும் மக்கள் என மொத்தம் 7 பிரிகளின் கீழுள்ளவர்கள் இதன் பலனை பெறலாம்.
சிலிண்டர் வெடிப்புகள்
கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு சிலிண்டர் நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் வரையில் விபத்து காப்பீடும் வழங்கப்படுகிறது.. கேஸ் லீக்கேஜ் , சிலிண்டர் வெடிப்புகள் நடந்துவிட்டால், கஸ்டமர்களுக்கு இந்த காப்பீடு கிடைக்கும்.. ஆனால், இதற்கு எந்த தொகையும் முன்னதாக கஸ்டமர்கள் செலுத்த தேவையில்லை.
இந்த காப்பீடு தொகையை பெறுவதற்கு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஐசிஐசிஐ லம்பார்டு போன்ற காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்திருக்கின்றன. உதாரணத்துக்கு எல்பிஜி சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் வாடிக்கையாளர் ரூ.50 லட்சம் வரை காப்பீட்டு தொகையை பெறலாம்.. காயமடைந்த ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கிடைக்கும்,.
இந்த காப்பீட்டை பெற, சிலிண்டர் வழங்கும் முன்பு டீலர் அதை முறையாக பரிசோதிக்க வேண்டும்.. விபத்து நடந்து 30 நாளைக்குள் கஸ்மர்கள் எல்பிஜி நிறுவனம் மற்றும் அருகிலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு விபத்து குறித்து தெரிவிக்க வேண்டும்.
சிலிண்டர் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு எப்ஐஆர் காப்பி, மருத்துவமனை ரசீதுகள், இறப்பு ஏற்பட்டால் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் போன்றவை ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும், கேஸ் நிறுவனங்களே காப்பீடு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு அனைத்தையும் செய்து தரும்..
ஆனால், சிலிண்டர் பைப், ஸ்டவ் மற்றும் ரெகுலேட்டர் போன்றவை அனைத்தும் ISI முத்திரை உள்ள நபர்களுக்கு மட்டுமே இழப்பீடு தொகை கிடைக்கும்.. அதிலும், சிலிண்டர் யாருடைய பெயரில் உள்ளதோ அவருக்கு மட்டுமே காப்பீடு தொகை கிடைக்கும் என்பது நினைவுகூரத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications