கவனமாக இருங்க.. போன் செய்யும் மக்களுக்கு.. காலர் டோன் மூலம் எச்சரிக்கும் அரசு.. என்ன நடந்தது?
சென்னை: சமீபத்தில் மக்கள் இடையே தீவிரமாக பரவி வரும் டிஜிட்டல் அரஸ்ட் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரஸ்ட் தொடர்பாக போன் கால்களில் வரும் காலர் டோன் மூலம் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மத்திய அரசு விடுத்துள்ளது.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) 'டிஜிட்டல் அரஸ்ட்' மோசடிகள் அதிகரித்து வருவதாக எச்சரித்து உள்ளது. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் குடிமக்களை மோசடியில் இருந்து பாதுகாக்க முடியும் என்று எச்சரித்து உள்ளது.

டிஜிட்டல் பேமெண்ட் முறைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதும், ஆன்லைன் மோசடிகளில் இருந்து விலகி இருப்பதும் அவசியம். சாத்தியமான மோசடிகளை முன்கூட்டியே கண்டறிந்து விலகி இருப்பது.. பாதுகாப்பாக இருப்பது அவசியம். உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) 'டிஜிட்டல் அரஸ்ட்' மோசடிகள் குறித்து எச்சரித்து உள்ளது. டிஜிட்டல் அரஸ்ட் சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
காலர் டோன் எச்சரிக்கை:
அதன்படி மக்களிடம் இதற்காக டிஜிட்டல் அரஸ்ட் தொடர்பாக போன் கால்களில் வரும் காலர் டோன் மூலம் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை மத்திய அரசு விடுத்துள்ளது. அதில், உங்களிடம் நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், சுங்க அதிகாரிகள், அல்லது உயர் தலைவர்கள் என்ற பெயரில் யாராவது பேசினாலோ.. வீடியோ காலில் பேசினாலோ அதை நம்ப வேண்டாம். அவர்கள் சைபர் குற்றவாளிகளாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.
அது போன்ற போன் கால்கள் வந்தால் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சைபர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கவும் என்று காலர் டோன் மூலம் மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
பிக்பாஸ் சவுந்தர்யாவிற்கு நேர்ந்த சம்பவம்:
பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் சவுந்தர்யா சமீபத்தில் 17 லட்சம் ரூபாயை இழந்துவிட்டதாகவும்.. ஒரு கும்பல் தனது பணத்தை மோசடி செய்து பறித்துவிட்டதாகவும் கூறி இருந்தார். இந்த மோசடி எப்படி நடந்தது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
போலீசாரிடம் பதியப்பட்ட எப் ஐ ஆர் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியாகி உள்ளன. சவுந்தர்யா சூளைமேட்டில் உள்ள தனது வீட்டில் இருக்கும் போது இந்த முறைகேடு நடந்து உள்ளது. அப்போது அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது.
மும்பையில் இருந்து ஈரானுக்கு உங்கள் பெயரில் ஒரு பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் பணம் இருந்துள்ளது. போதைப்பொருள் இருந்துள்ளது. ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன. அதேபோல்.. உள்ளே தங்க கட்டிகள்.. உங்களின் பாஸ்போர்ட் விவரங்கள் இருந்துள்ளன. இதனால் உங்களை கைது செய்ய போகிறோம்.
சிபிஐ வழக்கு பதிவு செய்து உள்ளோம். விசாரணை செய்து வருகிறோம். நான் ராகேஷ் சர்மா. உங்களுக்கு ஸ்கைப் கால் செய்கிறேன் என்று கூறி போன் செய்துள்ளார். அதன்பின் அந்த போன் காலிலேயே உங்களை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளேன். உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளதால் நீங்கள் எதுவும் செய்ய கூடாது.
நீங்கள் யாரிடமும் பேச கூடாது. உங்கள் பெயரில் போதை பொருள் பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் பணம் இருந்துள்ளது. போதைப்பொருள் இருந்துள்ளது. ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன. நீங்க;ள் எத்தனை நாட்களாக போதை பொருள் கடத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதை அடுத்து சிபிஐ தொடர்பான ஆவணங்கள், ஆர்பிஐ தொடர்பான ஆவணங்களை அனுப்பி உள்ளார். அதில் சவுந்தர்யா பெயரும் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்து பயந்த சவுந்தர்யா அந்த நபருக்கு பணம் அனுப்பி உள்ளார்.மொத்தமாக 12 பணபரிவர்த்தனைகள் மூலம் பணம் அனுப்பி உள்ளார்.
வழக்கு நடத்த, ஜாமீன் வழங்க, விசாரணையை சென்னைக்கு மாற்ற என்று பல காரணங்களுக்காக பணம் அனுப்பி உள்ளார். மொத்தமாக இப்படி ஒன்றல்ல இரண்டல்ல 17 லட்சம் அனுப்பி உள்ளார். இப்படித்தான் அவர் பணத்தை இழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஓராண்டில், FedEx, DHL, BlueDart, DTDC போன்ற கூரியர் நிறுவனங்களின் பெயரில் நடந்த இந்த மோசடிகளில் பலர் லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளனர். இதுபோன்ற மோசடிகளில், மோசடி செய்பவர்கள் குறிவைக்கப்பட்ட நபர்களை போனில் அழைத்து, உங்கள் பெயரில் ஒரு கூரியர் வந்துள்ளது. அந்த கூரியர் போதைப்பொருள் அல்லது பிற சட்டவிரோத பொருட்களுடன் பிடிபட்டதாக கூறி மிரட்டுவதை வழக்கமாய் வைத்துள்ளனர்..
உதாரணமாக சென்னையில் இருந்து ரஷ்யாவிற்கு உங்கள் பெயரில் ஒரு பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் பணம் இருந்துள்ளது. போதைப்பொருள் இருந்துள்ளது. ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன. அதேபோல்.. உள்ளே தங்க கட்டிகள்.. உங்களின் பாஸ்போர்ட் விவரங்கள் இருந்துள்ளன. இதனால் உங்களை கைது செய்ய போகிறோம் என்று மிரட்டுவார்கள். அதன்பின் வழக்கு நடத்த.. ஜாமீன் வழங்க, விசாரணையை அவர்களின் ஊருக்கு மாற்ற என்று பல காரணங்களை சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக பணம் கறந்து பல லட்சம் பணத்தை ஏமாற்றுவார்கள். இது போன்ற கால்கள் வந்தால் நம்ப கூடாது.. அதை நம்ப ஏமாற கூடாது என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications