"மோடி செய்தது ஸ்டண்ட்.. அனுதாபம் பெறும் முயற்சி.." பஞ்சாப் சம்பவம் பற்றி ராகேஷ் திகாயத் கருத்து
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட மீறல் குறித்து, 'பொது அனுதாபத்தைப் பெறுவதற்கான ஸ்டண்ட்' என்று வர்ணித்திருக்கிறார் பாரதீய கிசான் யூனியன் (BKU) தலைவர் ராகேஷ் திகாயத்,.
பஞ்சாபில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று பஞ்சாப் சென்றார். பிரதமர் மோடி பஞ்சாபில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. பஞ்சாப் அரசு சரியான ஏற்பாடுகளை செய்யவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் வாயிலாக செல்ல இருந்தார் பிரதமர் மோடி. ஆனால், மோசமான வானிலை கரணமாக மோடியின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு, சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் போரட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டிருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகன கன்வாய் 15 நிமிடங்களுக்கு அதிகமாக அப்படியே நின்றது. இந்த குளறுபடியால் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

பஞ்சாப் அரசு மீது விமர்சனம்
இந்த சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்கள் பஞ்சாப் அரசையும், காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்தனர். இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பிரதமர் மோடி ஹெலிக்காப்டரில் செல்வதாகதான் திட்டம் இருந்தது. கடைசி நேரத்தில் சாலை வழியில் செல்ல தீர்மானித்தார். இருப்பினும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருந்தது என கூறினார்.

விசாரணை
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை பஞ்சாப் அரசு அமைத்துள்ளது. மேலும் மூன்று நாட்களில் இந்த உயர்மட்ட குழு, தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங், பிரதமர் பயணம் செய்த பாதை மறிக்கப்பட்ட விவகாரத்தை விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகம்
''தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்த பிரதமர் பதிண்டாவில் விமான நிலையத்தில் இறங்கினார். மழை மற்றும் மோசமான தெரிவுநிலை காரணமாக, வானிலை தெளிவடைவதற்கு பிரதமர் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தார். வானிலை சீரடையாததால், அவர் சாலை வழியாக நினைவிடத்தைப் பார்வையிட முடிவு செய்ததார். பஞ்சாப் காவல்துறை தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பிறகு பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பயணிக்கத் தொடங்கினார்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை
ஆனால், பஞ்சாப் அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த குறைபாடு காரணமாக பதிண்டா விமான நிலையத்திற்கே பிரதமரின் வாகனம் மீண்டும் செல்ல முடிவு செய்யப்பட்டது. பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக விளக்கம் கேட்டுள்ளோம். பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய குளறுபடியை கவனத்தில் எடுத்துள்ளோம். இவ்விவகாரம் குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான விளக்கம் கேட்கப்படும். மாற்று பயண திட்டமாக சாலை வழியாக செல்ல நேரும் போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்'' என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராகேஷ் திகாத் கருத்து
இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பாரதீய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட மீறல் குறித்து, ''பொது அனுதாபத்தைப் பெறுவதற்கான ஸ்டண்ட்' என்று கருத்து தெரிவித்திருக்கிறார். ''இது ஒரு ஸ்டண்ட் போல் தெரிகிறது. பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்கான மலிவான வழியைத் தவிர வேறில்லை'' என்றும் பேட்டி கொடுத்திருக்கிறார் ராகேஷ் திகாயத்.

காலியான நாற்காலி
"பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது, அதே நேரத்தில் பஞ்சாப் அரசோ, பேரணியில் நாற்காலிகள் காலியாக இருந்ததால் அங்கு பிரதமர் மோடி பேரணிக்கு செல்லவில்லை என்று கூறுகிறது. இருவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ள மட்டுமே முயற்சி செய்கிறார்கள். பிரதமர் அங்கு சாலை மார்கமாக சென்றிருக்கக் கூடாது," என்று ராகேஷ் திகாயத் தெரிவித்தார். டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களில்கூட பிரதமரின் வாகனம் தடைப்பட்டு பாதியிலேயே நின்றிருக்கிறது. அப்போதெல்லாம் பிரதமரின் உயிருக்கு ஆபத்து' என்று யாரும் சொல்லவில்லை. தேர்தல் நேரம் என்பதால், இப்படிச் சொல்கிறார்கள்'' என்று காங்கிரஸ் கட்சியும், பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கிறது பஞ்சாப். தீவிரவாதிகளின் அச்சுறுதல் இருப்பதால், பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்'' என பாஜகவினரும் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications