Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவதாரிணியின் கடைசி நேரத்தில் நடந்தது? கூடவே இருந்தது கணவர் தான்! தப்பா பேசாதீங்க.. உறவினர் பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரிணி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் காலமானார். புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருந்த பவதாரிணிக்கு நான்காவது ஸ்டேஜில் தான் அது தெரிய வந்திருந்த நிலையில் மருத்துவர்கள் தங்களால் ஒன்றும் இனி செய்ய முடியாது என்று சொன்ன பிறகு இலங்கைக்கு மருத்துவம் பார்க்க போன இடத்தில் பவதாரணி சிகிச்சை பலனின்றி காலமானார்.

ஆனால் பவதாரிணி அவருடைய கணவரோடு பிரிந்து இருந்த நிலையில் மிகுந்த வருத்தத்தில் இருந்த நிலையில் தான் அவர் இறந்து போனார் என்ற செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் அது உண்மை இல்லை என்று பவதாரிணியின் கணவரின் அண்ணன் பேட்டி ஒன்றில் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

Bhavatharinis husbands brother has shared a lot of information in an interview

பொதுவாக பிரபலங்கள் என்றாலே அவர்கள் பற்றிய வதந்திகள் இணையத்தில் பரவி வருவது வாடிக்கைதான். அந்த மாதிரி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமான பவதாரிணி குறித்த செய்திகளும் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது பவதாரிணிக்கு சபரி ராஜ் என்பவரோடு 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு பிறகு சில வருடங்களிலே பவதாரிணி அவருடைய கணவரை பிரிந்து விட்டார்.

தன்னுடைய அப்பாவான இளையராஜா வீட்டில் தான் பவதாரிணி இருந்து வந்தார் என்ற செய்திகள் இணையத்தில் பரவி வந்தது. இந்த நிலையில் அதை மறுத்து பவதாரிணியின் கணவரின் அண்ணன் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில், இணையத்தில் இப்போ எல்லாம் இஷ்டத்துக்கு செய்திகள் பரவி வருகிறது. பவதாரிணியின் கடைசி நேரத்தில் கூட அவருடைய கணவர் வந்து பார்க்கவில்லை என்று சிலர் சொல்றாங்க.

Bhavatharinis husbands brother has shared a lot of information in an interview

ஆனால் அது உண்மை இல்லை. என்னுடைய தம்பியான சபரி தான் பவதாரிணியை இலங்கைக்கு கூட்டிட்டு போனது. பவதாரிணிக்கு புற்றுநோய் இருப்பது கடைசி கட்டத்தில் தான் தெரிய வந்தது. கடந்த டிசம்பர் மாதத்தில் அது தெரிய வந்ததும் முதலில் சபரி நம்பவே இல்லை இந்த சின்ன வயசில் இவளுக்கு இப்படி எல்லாம் ஆகவே செய்யாது என்று சொல்லிக் கொண்டிருந்தான். பிறகு யுவன் தான் ஒரு மருத்துவரை அழைத்து அவரிடம் செக் பண்ணி பார்த்தார்.

அவரும் அதையே சொன்னார். அதோடு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள் எல்லாம் முடிந்து விடும் அதற்கு மேலே தாங்க மாட்டார் என்றும் சொல்லிவிட்டார். பிறகு அந்த டாக்டர் சொல்படி தான் இலங்கைக்கு சபரி பவதாரிணியை கூட்டிட்டு போனான். கடந்த 10 நாட்களுக்கு முன்பே என்னுடைய தம்பி சபரி பவதாரணியை கூட்டிக்கொண்டு இலங்கைக்கு போய்விட்டார். ஆரம்பத்தில் அந்த மருத்துவமனையில் நோயாளி போல இல்லாமல் பவதாரிணி சிரித்த முகமாகத்தான் இருந்தார்.

அங்கிருந்து என்னுடைய அம்மாவிடமும் என்னுடைய உறவினர்கள் எல்லோரிடமும் கூட பவதாரிணி பேசிக் கொண்டிருந்தார். பவதாரிணி ரொம்பவே அமைதியான பொண்ணு. அதிர்ந்து கூட பேச மாட்டார். ஆனால் அங்கிருக்கும் போது உறவினர்கள் யாரையும் கூட இருக்க அனுமதிக்க மாட்டார்களாம். அது குறித்து கூட வேடிக்கையாக பேசிக் கொண்டிருப்பார். அதோடு மருத்துவமனையில் பலர் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்றெல்லாம் பாவப்பட்டு பேசிக் கொண்டிருந்தார்.

கடைசியில் அவருடைய நிலைமை இப்படி ஆகும் என்று நாங்கள் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கல. எப்படியும் இதிலிருந்து மீண்டு வந்து விடுவார் என்று தான் நினைத்தோம். அந்த நேரத்தில் என்னுடைய தம்பி பவதாரிணியோடு தான் முழுக்க இருந்தார். ஒரு குழந்தை போல பவதாரிணியை பார்த்துக் கொண்டார் என்று எல்லோருமே சொன்னார்கள்.

அதைத்தான் இளையராஜா கூட விரும்பினார். என்னுடைய தம்பியும் பவதாரிணையும் மருத்துவமனைக்கு போன பிறகுதான் யுவன் அங்கு வந்து சேர்ந்தார். இளையராஜா குடும்பத்திற்கும் எங்கள் குடும்பத்திற்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. திருமணமான புதுசில் தான் பவதாரிணிக்கும் சபரிக்கும் சின்ன சின்ன பிரச்சனை வந்தது. அது கணவன் மனைவிக்குள் எல்லா வீட்டில் வருகிற மாதிரி தான் பிரச்சனை இவர்களுக்குள் வந்தது.

ஆனால் பவதாரிணி இழப்பை சபரியால் தாங்கிக் கொள்ள முடியாமல் வேதனையில் தான் இருந்து கொண்டு இருக்கிறான். பவதாரணி இறந்த பிறகு அவருடைய உடலை தேனிக்கு கொண்டு வந்த சமயத்தில் கூட இளையராஜாவோடு தான் சபரி அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். இளையராஜா தான் நீ என்னோடு வா நாம இருவரும் சேர்ந்து போகலாம் என்று அவரை கூட்டிக் கொண்டு வந்தது. அந்த இடத்திலும் சபரி முழுக்க அழுது கொண்டுதான் இருந்தார் என்று கண் கலங்க சபரியின் அண்ணன் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+