Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எமோஷனல்" ஆகாதீங்க.. பொறுமையாக பதில் சொல்லணும்.. தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்..!!

தமிழக அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் விரிவான ஆலோசனையை மேற்கொண்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றும், யாரும் உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் 17-ம் தேதி தொடங்குகிறது... எனவே, சட்டப்பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலர் முருகானந்தம், தொழில்துறை செயலர் ச.கிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் சிவ்தாஸ் மீனா, வேளாண் துறை செயலர் சி.சமயமூர்த்தி மற்றும் த.உதயச்சந்திரன் உள்ளிட்ட முதல்வரின் செயலர்கள் இதில் பங்கேற்றனர்.

 ஆளுநர் ரவி

ஆளுநர் ரவி

இந்த கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.. குறிப்பாக, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளுக்கு தடை விதிப்பதற்கான அவசரச் சட்டம், ஆளுநர் ரவி ஒப்புதலுடன் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்தது.. இந்த சட்டத்துக்கு நிரந்தர அந்தஸ்து வழங்க, இதற்கான மசோதா சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கலும் செய்யப்படுகிறது... அதனால், இந்த சட்ட மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி அனுமதியளிக்கப்பட்டது.

 தொழில் முதலீடுகள்

தொழில் முதலீடுகள்

அடுத்ததாக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், பிடிஆர் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு பயணித்து, பல்வேறு தொழில் முதலீடுகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்துள்ள நிலையில், நிறைய முதலீடுகள் தமிழகம் வரஉள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. அதனால், தமிழகத்துக்கு வரும் புதிய தொழில்முதலீடுகள், தொழில் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு அனுமதி, சலுகைகள் அளிப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 ஈரப்பதம்

ஈரப்பதம்

இதற்கடுத்தப்படியாக, தமிழகத்தில் குறுவையைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ள நிலையில், நெல் கொள்முதலுக்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன... விரைவில் பருவமழைக்காலமும் தொடங்க உள்ளதால், 22 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல் வரும்போது, அதனை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.. இதற்காக மத்திய குழு தமிழகம் வருகிறது... மத்திய அரசு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கொள்முதல் செய்யப்படும் நெல்லை மழையில் நனையாத வகையில் பாதுகாப்பது, கிடங்குகள், அரவைக்கு அனுப்புவது குறித்தும் இக்கூட்டத்தில், விவாதிக்கப்பட்டது.

 அட்வைஸ்

அட்வைஸ்

அடுத்தாக, வடகிழக்குப் பருவமழை கூடிய சீக்கிரம் தொடங்க உள்ளதால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்களுடன் விவாதிக்கப்பட்டது... வருவாய், உணவு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் செய்துள்ள முன்னேற்பாட்டு பணிகளை முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார்.. இறுதியாக, அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில், அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சில அறிவுறுரைகளையும் கூறினார்..

எமோஷனல்

எமோஷனல்

சட்டப்பேரவையில் செயல்படுவது குறித்த அறிவுரைகளை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களுக்கு வழங்கியுள்ளார். குறிப்பாக, எதிர்தரப்பில் ஆத்திரமூட்டும்வகையில் யாராவது பேசினாலும், அமைச்சர்கள் யாரும் உணர்ச்சிவசப்படக்கூடாது, அவர்களுக்கு பொறுமையாக, அமைதியாக பதிலளிக்க வேண்டும்.. பொது இடங்களில் பேச்சு தொடர்பான குற்றச்சாட்டுகள் வருவதால், சர்ச்சைக்குரிய வகையில் பேச வேண்டாம்.. அமைச்சரவையில் மாற்றம் செய்ய நிர்ப்பந்தம் வரும் அளவுக்கு, யாரும் நடந்து கொள்ள வேண்டாம்" என்று முதல்வர் ஸ்டாலின், மாநில அமைச்சர்களை கேட்டுக் கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+