கருணாஸூம் சொல்லிட்டாரு.. பாஜகவை "சுருட்டி" போட்ட திமுக.. மலரவே முடியாத தாமரை.. அதுக்குனு இப்படியா?
சென்னை: "தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திமுக ஆட்சி எப்போதும் வழிகாட்டும் என்பதை இந்த இடைத்தேர்தலின் வழியாக எடைபோட்டுச் சொல்லியிருக்கிறார்கள் விக்கிரவாண்டி பெருமக்கள்" என்று மகிழ்ந்து சொல்லியிருக்கிறார் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ்.
அதிமுக கூட்டணியிலிருந்து அன்று வெளியேறிய நடிகர் கருணாஸ், கூவத்தூர் குறித்த பரபரப்பை அவ்வப்போது கிளப்பிக் கொண்டேயிருந்தார்.

திமுக: ஒருகட்டத்தில், கருணாஸை கைது செய்யும் அளவுக்கு முந்தைய எடப்பாடி பழனிசாமி அரசு சென்றது.. இதற்கு காரணம், திமுக தலைவராக ஸ்டாலினுடன் கருணாஸ் அப்போது "டச்'சில் இருந்தது எடப்பாடியை சீண்டியதாக சொன்னார்கள்..
அதுமட்டுமல்ல, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோதுகூட, செய்தியாளர்களிடம் கருணாஸ் பேசியபோது, "தமிழக அரசினை விரைவில் கலைத்துவிட்டு ஸ்டாலின் தலைமையில் புதிய அரசை உருவாக்க வேண்டும். தமிழகத்துக்கு விடிவு காலம் கிடைக்கும் என்றால் கூவத்தூர் ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன். காரணம், கூவத்தூர் சம்பவங்களுக்கு நான் ஒருவன் தான் ஆதாரம்" என்று பகிரங்கமாகவே கூறியிருந்தார்.
கருணாஸ்: இதற்கு பிறகு நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது பிரபல நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் பக்கம் திமுகவின் கவனம் விழுந்தது.. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தன்னுடைய ஆதரவை கருணாஸ் வழங்கியிருந்த நிலையில், கருணாஸை பிரச்சாரத்தில் பயன்படுத்தவும் திமுக முடிவு செய்து அறிவித்தது.
பிரச்சாரத்தின்போதெல்லாம் அதிமுகவை கடுமையாக சாடிவந்தார் கருணாஸ்.. குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக விமர்சித்து கேள்விகளை எழுப்பியிருந்தார். அதுமட்டுமல்ல, "படர்தாமரை உடலுக்கு கேடு.. ஆகாயத் தாமரை குளத்திற்கு கேடு.. பிஜேபியின் தாமரை நாட்டுக்கே கேடு" என கருணாஸ் பிரச்சாரத்தில் கூறியிருந்தார்.
அதிக வாக்குகள்: இந்நிலையில், தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், பாமக படுதோல்வி அடைந்துள்ளது. எனினும், வாக்குக்கு பணம், பொருள் என எதுவுமே தராமல் அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக கூறி, பாமகவினரே கொண்டாடி பட்டாசு வெடித்தார்கள். பாமகவுக்கே நிஜமான வெற்றி என்று பூரித்து உள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில், திமுகவின் அசுர வெற்றிக்கு கருணாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து ஒரு அறிக்கை ஒன்றையும் கருணாஸ் வெளியிட்டிருக்கிறார். அதில், மக்கள் எப்போதும் திமுக பக்கம் என்பதை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி காட்டுகிறது என்று கருணாஸ் கூறியிருக்கிறார்.
அந்த அறிக்கையில், "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றியடைந்திருப்பது, மக்கள் நலத்திட்டங்களை அன்றாடம் வரவேற்கும் மக்களின் வெற்றி! நாற்பதுக்கு நாற்பது வெற்றியை எட்டிய சில நாள்களில் அடுத்த வெற்றியை அள்ளிக்கொடுத்த விக்கிரவாண்டி மக்களுக்கு எனது முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நன்றியையும்.. தி.மு.க தலைவர் சகோதரர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாசிச பாஜக: இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது.. மக்கள் எப்போதும் திமுக பக்கம் என்பதை உணர்த்துகிறது. அதே சமயம்.. பாசிச பாஜகவின் தொடர் தோல்வியின் சரிவையும் காட்டுகிறது. இனியாவது பாசிச பாஜக தமிழக மக்களின் உணர்வை புரிந்து கொள்ளட்டும்.
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பெரும் தோல்வி முகத்தை கண்டுள்ளது.. இனியாவது மக்கள் ஜனநாயகத்தின் உணர்வை பாஜக புரிந்துகொள்ளட்டும்.
வாழ்த்துக்கள்: தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திமுக ஆட்சி எப்போதும் வழிகாட்டும் என்பதை இந்த இடைத்தேர்தலின் வழியாக எடைபோட்டுச் சொல்லியிருக்கிறார்கள் விக்கிரவாண்டி பெருமக்கள். வெற்றிபெற்ற வேட்பாளருக்கும், தி.முக. தலைவர் சகோதரர் முக ஸ்டாலின் அவர்களுக்கும் எனது மனமார்ந்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்திருக்கிறார் கருணாஸ்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications