"உள்ளே வெளியே".. பெரிய பிளானை கையில் எடுத்த ரயில்வே.. மின்சார ரயில்களில் வருகிறது மாற்றம்.. அசத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பயணிகளின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், பல்வேறு அதிரடிகளை ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், இப்போதும் ஒரு புதிய வசதியை பொதுமக்களுக்கு செய்து தர போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் சென்னை மின்சார ரயில்கள் குறித்து, சில செய்திகள் வந்தன.. அதாவது, சென்னை ரயில்வே கோட்டத்தில் தினமும் சுமார் 630 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன..

Big Target and Indian Railways is planning to advertise inside the Electric Train coaches

மின்சார ரயில்: இந்த மின்சார ரயிலில் பெண்களுக்கு பிரதயேக பெட்டிகள், முதல் வகுப்பு பெட்டிகள் உள்ளது போலவே, ஏசி பெட்டிகளையும் இணைத்து இயக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே, பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படியே, மின்சார ரயில்களில் குளிர்சாதன பெட்டிகளை இணைத்து சோதனை முறையில் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது..

பெரம்பூரில் ஐசிஎப்பில், இந்த தயாரிப்பு வேலைகள் நடப்பதாகவும், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ஏசி பெட்டிகளை மின்சார ரயிலில் இயக்க உள்ளது. அடுத்த 6 மாதங்களில் இதற்கான சோதனை ஓட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான கட்டணமும் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

விளம்பரங்கள்: இந்நிலையில், இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி, விரைவு மற்றும் மின்சார ரயில் பெட்டிகளில், வெளிப்பகுதியில் உள்ளதை போலவே, உட்பகுதியிலும் விளம்பரங்கள் செய்து, வருவாயை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

கட்டண உயர்வு மட்டுமல்லாமல், இதர வழிகளிலும், வருமானத்தை பெருக்க ரயில்வே முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.. அந்த வகையில், ரயில்வேக்கு சொந்தமான இடங்களிலும், ரயில் என்ஜின்களிலும், டிக்கெட்டுகளிலும், தனியார், பொதுத்துறை நிறுவனங்களின் விளம்பரங்களை இடம் பெற செய்து வருகிறது. மேலும், காலி இடங்களை பெரிய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவது போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன..

கட்டண சலுகை: அதுபோலவே, ரயில்களின் பெட்டிகளின் உட்பகுதியில் காலியாக உள்ள இடங்களில், விளம்பரங்களும் செய்ய போகிறதாம். அதிலும், நீண்ட காலத்துக்கு விளம்பரம் செய்வோருக்கு, கட்டண சலுகையும் தரப்போகிறதாம். ரயில்களின் பெட்டிகளின் உட்பகுதியில் அதாவது, ஜன்னலின் மேல் பகுதியில், சீட்கள், கதவுகள் போன்ற இடங்களில் தனியார் விளம்பரங்களை செய்து, வருவாயை பெருக்க முடிவாகி உள்ளதாம்.

பொதுத்துறை அல்லது தனியார் வங்கிகள், ஐடி கம்பெனிகள், ஜவுளி, நகைக்கடைகள், உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் போன்றவற்றின் விளம்பரங்களை, நிபந்தனைக்குட்பட்டு இடம் பெற செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு வருதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வகையில் விளம்பரங்களை செய்யும்பட்சத்தில், ரயில்வேக்கு கணிசமாக வருவாய் கிடைக்கும் என்றம் நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+