உயில் எழுத போறீங்களா? இதை மட்டும் மிஸ் பண்ணாதீங்க.. வாரிசு இல்லாத சொத்துக்கள் யாருக்கு சேரும்? ஓஹோ
சென்னை: உயில் எழுதும்போது, விவாகரத்தாகி, மறுமணம் செய்து கொள்ளாத பெண்ணின் மகனுக்கு, கணவரின் பூர்வீக சொத்தில் பங்கு இருக்கிறதா? வாரிசு இல்லாத சொத்து யாருக்கு போகும்? என்ற சந்தேகங்கள் பரவலாக உள்ளது.
உயில் எழுதுவதென்பது, ஒருவரின் அடிப்படை உரிமையாகவும், அவரது கடைசி ஆசையாகவும் கருதப்படுகிறது. உயில் எழுதியதுமே, நம்பிக்கைக்குரிய 2 பேரிடம் தெரிவித்து வைப்பது நல்லது. இதனால், உயிலானது உரியவர்களிடம் உரிய நேரத்தில் வந்து சேரும்.

உரிமை கோர முடியுமா: 18 வயது நிரம்பிய யாரும் தங்களுடைய சொத்துகளை உயிலாக எழுத முடியும். சில காரணங்களின்போது மட்டும் 21 வயது நிரம்பியவர்தான் உயில் எழுத முடியும். உயில் எழுதியவர் இறந்த பிறகு, உயிலில் குறிப்பிட்ட சொத்து விற்கப்பட்டிருந்தால் சொத்து வாங்கியவரிடம் உயிலின் பேரில் கோர முடியாது.
உயிலை எழுதியதுமே, அதை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாலும், நாளடைவில் உறவுகளுக்குள் தேவையில்லாமல் சிக்கல்கள், குழப்பங்கள் எழுவதை இது தடுக்க உதவும். அதேபோல, உயிலின் நகலை பதிவு அலுவலகத்தில் கொடுத்துவிடுவது இன்னும் சிறந்தது. உயிலுக்குரிய சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் வருகிறதோ, அங்கு மட்டுமே பதிவு செய்ய வேண்டும்..
ஆண் வாரிசுகள்: ஒருவர் தன்னுடைய சொத்துக்களை, உயில் எதுவும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், அந்த சொத்துக்கள் அவருடைய ஆண் வாரிசுகளுக்குதான் நேடியாக போய் சேரும். ஒருவேளை அவருக்கு வாரிசுகள் யாரும் இல்லாவிட்டால், அம்மா வழி அல்லது அப்பா வழி சொந்தங்களுக்கு சொத்துக்கள் போய் சேரும்... அந்தவகையில் இறந்த நபரின் அம்மாவிற்கும் இந்த சொத்தில் பங்கு உண்டு.. இறந்தவரின் மனைவிக்கும் சொத்தில் பங்கு இருக்கிறது.
அதேபோல, வாரிசுக்கு உயில் எழுதி வைக்கும்போது, மனைவியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து உயில் எழுதினால் நல்லது. அல்லது வாரிசுதாரரையே நாமினியாக நியமித்துவிட்டால், எதிர்காலத்தில் தேவையில்லாத சிக்கல்கள் எழ வாய்ப்பிருக்காது.
கணவனின் சொத்து: உயில் எழுதும்போது, விவாகரத்தாகி, மறுமணம் செய்து கொள்ளாத பெண்ணின் மகனுக்கு, கணவரின் பூர்வீக சொத்தில் பங்கு இருக்கிறதா? என்ற சந்தேகம் பலருக்கும் எழும்.
வாரிசுரிமை சட்டத்தின்படி பூர்வீக சொத்தில் அனைத்து நேரடி வாரிசுகளுக்குமே பங்கிருக்கிறது.. இதில் விவாகரத்து ஆகி இருந்தாலும், முன்னாள் கணவர் மறுமணம் புரிந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலுமே, இந்த பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறது.
வாரிசு இல்லாதோரின் சொத்து: அதேபோல வாரிசு இல்லாத சொத்து யாருக்கு போகும்? என்ற சந்தேகமும் உள்ளது. வாரிசு இல்லாத ஒருவர் சுயவிருப்பத்தின்பேரில், தன்னுடைய சொத்துக்களை உயில் மூலம், தான் விரும்பும் நபர் யாருக்கு வேண்டுமானாலும் வாரிசு இல்லாதவர்களுக்கு தத்துப்பிள்ளைகளும் இல்லாதபோது, உயில் எழுதிய நபரையே மொத்த சொத்துக்களும் சேரும்.
எனவே, கணவன் மனைவி இறந்தபிறகு வாரிசு இல்லாதவர்களின் சொத்துக்கள், அவர்களின் 2ம் நிலை வாரிசுதாரர்களுக்கே சொந்தம்.. அதாவது, கணவருடன் பிறந்த சகோதரர், மற்றும் சகோதரிகள், மற்றும் மனைவியுடன் பிறந்த சகோதரர், சகோதரிகளுக்கு சொந்தமாகும்.
பங்காளி வாரிசுகள்: அதேசமயம், இறுதி காரியம் செய்யும் நபருக்கும் சொத்தை பயன்படுத்தும் உரிமை இருக்கிறது. அதனால்தான் சிலர், பங்காளி வாரிசுகளை இறுதி காரியம் செய்ய விடுவதில்லையாம்.
வாரிசுகள்: அதேபோல, தனக்குரிய சொத்துக்களை மட்டுமே உயிலாக எழுதி வைக்க முடியும்.. பூர்வீக சொத்தாக இருந்தாலும் அதை யாருக்கும் உயிலாக எழுத முடியாது.. பிரித்து தரவும் முடியாது..
வாரிசு இருந்தாலும்கூட, அவர்களுக்கு சொத்து எழுதி வைக்காமல், பிறருக்கும் எழுதி வைக்கலாம். . அல்லது டிரஸ்ட்களுக்கும் சொத்துக்களை எழுதி வைக்கலாம்.. அப்படி எழுதி வைத்தால், வாரிசுகளால் அதை எதிர்க்க முடியாது.. வாரிசுகளுக்கு எழுதி வைத்தால், அந்த சொத்து மனைவிக்கு கிடைக்கும் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. இவ்வளவு செய்தாலும், அவரது மரணத்துக்கு பிறகே இது உயிலாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications