நகர்ப்புற வாழ்விடங்களில் பெரிய மாற்றம்! TNUHDB குடியிருப்புவாசிகளுக்கு ரூ.72.73 கோடி டபுள் சர்ப்ரைஸ்
சென்னை: சென்னை நகர்ப்புற வாழ்விடங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த ரூ.72.73 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு மற்றும் தூய்மை பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன... இதுகுறித்த சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது.. அதில் உள்ள அம்சங்கள் என்னென்ன தெரியுமா?
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் செயல்படுகிறது.

இந்த வாரியமானது, நகர்ப்புறங்களில் வாழும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு மானிய விலையில் வீடுகளை வழங்குவதிலும் செயல்படுகிறது..
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
குறிப்பாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) போன்ற மத்திய அரசுத் திட்டங்களுடன் இணைந்து, வீடில்லா மக்களுக்கு சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற உதவுகிறது. அதேபோல், மறுவாழ்வு திட்டங்கள் மூலம் குடிசைப் பகுதிகளில் இருந்து இடம்பெயர வேண்டிய மக்களுக்கு மாற்று வீடுகள் மற்றும் புதிய வாழ்வாதார சூழல் உருவாக்கப்படுகிறது.
குடிநீர், மின்சாரம், கழிப்பறை, கழிவுநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் உருவாக்கப்படுகின்றன,.. குடிசை அகற்றம் காரணமாக இடம்பெயரும் மக்களுக்கு மறுவாழ்வு குடியிருப்புகள் வழங்கப்படுகின்றன. நகர்ப்புற பகுதிகளில் சாலை, தெருவிளக்கு, மழைநீர் வடிகால் போன்ற உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன.
பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள்
பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சமுதாயக் கூடங்கள் போன்ற சமூக வசதிகளும் உருவாக்கப்படுகின்றன. பாதுகாப்பான வீடுகள் கிடைப்பதால் மக்களின் உடல்நலம் மற்றும் சமூக பாதுகாப்பு மேம்படுகிறது. இதன் மூலம் நகர்ப்புறங்களில் சமநிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது.
பெண்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பு அதிகரிக்கிறது.... சட்டபூர்வமான வீட்டு உரிமை கிடைப்பதால் குடும்பங்களுக்கு சமூக பாதுகாப்பும், பொருளாதார நிலைத்தன்மையும் கிடைக்கிறது...
சென்னை மாநகராட்சி
இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 127 திட்டப் பகுதிகளில் ரூ.72.73 கோடியில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி தற்போது தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது..
அதில், "மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதிகளில் தூய்மையாகப் பராமரிக்கும் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 74 குடியிருப்புப் பகுதிகளில் ரூ.15.11 கோடியில் 15,039 மீட்டர் நீளமுள்ள 37 தார்ச் சாலைகள், 11 பேவர் பிளாக் சாலைகள், 56 சிமென்ட் கான்கிரீட் சாலைகள் என மொத்தம் 104 சாலைகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சமூக உள்கட்டமைப்பை வலுப்படுத்த 37 குழந்தைகள் மையங்கள், 15 நியாய விலைக் கடைகள், 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஓர் அம்மா உணவகம் மற்றும் சுற்றுச்சுவர்கள் ஆகியவற்றில் ரூ.13.33 கோடியில் புதுப்பித்தல், பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குடியிருப்புவாசிகளுக்கு டபுள் சர்ப்ரைஸ்
ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு வாய்ப்புகளை மேம்படுத்த 9 பூங்காக்கள் மற்றும் 2 விளையாட்டு மைதானங்கள் ரூ.98.99 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ரூ.10.85 கோடியில் 123 குடியிருப்புப் பகுதிகளில் மொத்தம் 1,476 விளக்கு கம்பங்கள், 9 உயர் கோபுர மின்விளக்குகள், 2,782 எல்இடி விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
மேலும் ரூ.32.45 கோடியில் 173 குடியிருப்புப் பகுதிகளில் 1,22,014 குடியிருப்புகள் பயனடையும் வகையில் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1,325 தூய்மைப் பணியாளர்கள் இப்பணியில் உள்ளனர். 406 குப்பைத் தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன" என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications