மொத்தமாக காலியாகிடும்.. உஷார்.. அலறும் அதிமுக மா.செக்கள்.. எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் புதிய பிரச்சனை ஒன்று எழுந்துள்ளதாம்.
லோக்சபா தேர்தலுக்கான பணிகளை கடந்த சில நாட்களாகவே திமுக தீவிரமாக செய்து வருகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 38 இடங்களில் வென்றது. புதுச்சேரியில் 1 இடத்தில் வென்றது. இதே வெற்றியை இந்த முறை தமிழ்நாட்டில் பதிவு செய்வதற்கான தீவிரமான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது,.

40க்கு 40 இடங்களில் வெல்ல வேண்டும் என்று டார்கெட் வைத்து திமுக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தல் பணிகள் திமுகவிற்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் மொத்தம் 20 புதிய தலைகள் களமிறக்கப்படலாம் என்கிறார்கள். அதாவது திமுகவில் இருந்து 10 புதிய தலைகள், மற்ற கூட்டணி கட்சிகளில் இருந்து 10 புதிய தலைகள் என்று மொத்தம் 20 பேர் களமிறக்கப்படுவார்கள். திமுகவில் எம்பியாக இருக்கும் 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே திமுக தொடங்கி தீவிரமாக நடத்தி வருகிறது.
பிரஷர்: திமுக ஒரு பக்கம் பணிகளை செய்ய இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பிரஷர் ஒன்று வந்துள்ளதாக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி முக்கிய கண்டிஷன் போட்டுள்ளாராம். திமுக இந்த தேர்தலில் வலுவாக உள்ளது. அவர்களை எதிர்க்க ஒரே வழி அதிக காசு இறக்க வேண்டும். 20 கோடிக்கு மேல் பணம் இறக்க முடிந்தவர்கள் மட்டும் தேர்தலில் நிற்கலாம் என்று ஆர்டர் போட்டுள்ளாராம்.
இதன் அடிப்படையில் அவர் வேட்பாளர் லிஸ்டை தயார் செய்ய ரெடியாகிவிட்டாராம். ஆனால் மாவட்ட செயலாளர்களோ மாஜி அமைச்சர்கள் எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இரண்டு தொகுதி வீதம் ஒவ்வொரு மாஜி அமைச்சரும் செலவு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனராம்.
ஆனால் மாஜிக்களோ.. இப்போது எம்பி தேர்தலில் வென்று என்ன செய்ய போகிறோம். பெரிதாக பலன் இல்லாத தேர்தலுக்கு ஏன் செலவு செய்ய வேண்டும் என்று விட்டேத்தியாக இருக்கிறார்களாம். இரண்டு தரப்பிற்கும் நடுவில் சிக்கிக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரஷர் ஏறிவிட்டதாக கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
மோதல்; அதிலும் சில மாவட்ட செயலாளர்கள் தேர்தல் பணிகளை செய்வதிலேயே ஆர்வம் காட்டவில்லையாம். பாஜக கூட்டணி இல்லாமல் தனியாக நின்றால் கண்டிப்பாக வாக்கு பிரியும். இதனால் தோல்வியே மிஞ்சும். திமுக மீது விமர்சனங்கள் இருந்தாலும் இப்போதும் அந்த கட்சி வலுவாகவே இருக்கிறது.
எனவே இதை சரி செய்ய ஒரே தீர்வு.. பாஜக கூட்டணியை மீண்டும் கொண்டு வருவது. இல்லையென்றால்.. நமக்குத்தான் தேவையில்லாத செலவு. பல கோடி ரூபாய் இதனால் வேஸ்ட் ஆகிவிடும். சரியாக லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் புதிய பிரச்சனை ஒன்று எழுந்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும் இதனால் டென்ஷன் ஏற்பட்டு உள்ளதாம்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications