பீகார் இளைஞர் கொல்லப்பட்டது தரமணியில்.. உடல் இருந்தது அடையாறு! கொலையாளிகளின் கொடூர திட்டம் அம்பலம்!
சென்னை: பீகாரைச் சேர்ந்த கவுரவ் குமாரின் குடும்பத்தை கொலை செய்த சம்பவத்தில், கொலையாளிகள் திட்டமிட்டு உடலை வேறு வேறு இடத்தில் வீசி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. தரமணியில் கொலை செய்துவிட்டு, அந்த உடலை சுமார் 5 கிமீ தூரம் பயணித்து அடையாறு ஆற்றங்கரையோரம் வீசி சென்றுள்ளனர்.
பீகாரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கவுரவ் குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களின் 2 வயது மகனுடன் சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளனர். இதில் கவுரவ் குமாருக்கு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் செக்யூரிட்டி வேலை கிடைத்திருக்கிறது. இதன்பின் மனைவி மற்றும் குழந்தையுடன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலேயே கவுரவ் குமார் வசித்து வந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குடியிருப்பில் தனியாக இருந்த பீகார் இளைஞரின் மனைவியிடம் மர்ம நபர்கள் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனைவி உடனடியாக அலறி இருக்கிறார். இந்த அலறல் சத்தம் கேட்டு உடனடியாக பீகார் இளைஞர் கவுரவ் குமார் அங்கு வந்திருக்கிறார். அப்படி வந்தவகள் மர்ம கும்பல் தாக்கி இருக்கிறது.
இதன்பின் கவுரவ் குமாரின் மனைவியை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனை தடுக்க வந்த கவுரவ் குமாரை அந்த கும்பல் அடித்தே கொலை செய்திருக்கின்றனர். இதன்பின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவரது மனைவியையும் கொடூரமாக கொலை செய்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அந்த நேரத்தில் கண்ணீர்விட்டு கதறி அழுத 2 வயது குழந்தையையும் அந்த குடும்பல் கொடூரமாக கொலை செய்திருக்கிறது. இந்த கொடூர கொலையை செய்துவிட்டு இளைஞரின் உடலை சாக்கு மூட்டையில் கட்டிக் கொண்டு அடையாறு இந்திரா நகர் ஆற்றங்கரையோரம் வீசியுள்ளனர். அதேபோல் குழந்தையின் உடலை அடையாறு ஆற்றங்கரையோரம் வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், கவுரவ் குமாரின் நண்பர்கள் உட்பட 9 பேரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அந்த விசாரணையில் அவரது நண்பர்களே கொடூரமாக கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன்பின் நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஷ், சிக்கந்தர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கொடூரமாக ஒரு குடும்பத்தை கொலை செய்துவிட்டு தப்பிப்பதற்காக அந்த கும்பல், உடலை வேறு இடத்தில் வீசி சென்றிருக்கின்றனர். அதாவது தரமணியில் கொலை செய்துவிட்டு, கவுரவ் குமார் மற்றும் குழந்தையின் உடலை அடையாறு ஆற்றங்கரையோரம் வீசி சென்றுள்ளனர். இதற்கு இடையில் மட்டும் சுமார் 5 கிமீ தூரம் உள்ளது.
இதனால் அந்த கும்பல் திட்டமிட்டே இப்படியான சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தகவல் கூறுகின்றனர். அதேபோல் மனைவியின் உடல் இதுவரை கிடைக்கவில்லை. அவரது உடலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 கோடியை ஏப்பம் விட்ட ஆபீசர்ஸ்! தூத்துக்குடி துறைமுகத்தில் ஷாக்! இறந்த ஊழியர்களின் பென்சனில் மோசடி! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications