சென்னை ஐஐடியில் ஷாக்.. நள்ளிரவில் மாணவிக்கு பாலியல் தொல்லை.! ஜூஸ் கடை நடத்திய பீகார் இளைஞர் கைது
சென்னை: சென்னை ஐஐடி கல்லூரியில் இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் திடீர் திருப்பம் நடந்துள்ளது.
சென்னை: சென்னை ஐஐடி கல்லூரியில் இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் திடீர் திருப்பம் நடந்துள்ளது.
நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி கல்லூரியில் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏன் வெளிநாடுகளில் இருந்தும் கூட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அவர்கள் எளிதாகத் தங்கி கல்வி கற்க ஐஐடி கல்லூரி வளாகத்திலேயே விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடி சென்று இருப்போருக்குத் தெரியும். அது மரங்கள் அதிகம் இருக்கும் ஒரு பகுதியாகும்.

பாலியல் தொல்லை
அங்கு விடுதி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சை ஆனது. அந்த மாணவி ஜூலை 24ஆம் தேதி இரவில் ஐஐடி வளாகத்தில் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அந்த சமயம் தனியாக சைக்கிளில் சென்று கொண்டு இருந்த அந்த மாணவியிடம், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அத்துமீற முயன்றுள்ளார். இருப்பினும், அவனிடம் இருந்து அந்த பெண் எப்படியோ தப்பித்துவிட்டார்.

புகார்
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் நண்பர் புகார் கொடுத்துள்ளார். அந்த மாணவி புகார் கொடுக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. முதலில் கல்லூரி நிர்வாகம் சிசிடிவி கேமராக்களை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காண முயன்று உள்ளனர். இருப்பினும், இரவு நேரம் என்பதால் அடையாளம் காண முடியவில்லை. சுமார் 300 பேரின் புகைப்படங்களைக் காட்டி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காட்டிய அடையாளம் காண முயன்றது கல்லூரி நிர்வாகம்.

விசாரணை
இதில் வடமாநிலத்தவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையில் அன்று பணியில் இருந்த 35 ஊழியர்களையும் அழைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. முதலில் குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் இருந்தது. இருப்பினும், விசாரணையில் கல்லூரி நிர்வாகம் அந்த நபரை அடையாளம் கண்டுவிட்டது. இதையடுத்து உடனடியாக அவர்கள் கோட்டூர்புரம் போலீசாரிடம் இது தொடர்பாகத் தெரிவித்து உள்ளனர்.

பீகார் இளைஞர்
இதையடுத்து சென்னை ஐஐடிக்கு விரைந்து சென்ற போலீசார், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் சந்திரன் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஐஐடி வளாகத்தில் உள்ள ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மீது ஐபிசி 354, பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சை
முன்னதாக சுமார் 600 ஏக்கர் பரப்பிலான இடத்தில் பாதுகாப்பு அளிப்பது என்பது சவாலான விஷயம் என்பதால் இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது, buddy sytem என்ற அடிப்படையில் நண்பர்களை உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டியது ஐஐடி நிர்வாகத்தின் கடமை என்றும் உடன் படிக்கும் மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற பதிலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications