Bison Review: பரியேறும் பெருமாளுக்கு கீழே.. வாழைக்கு மேலே.. பைசன் விமர்சனம்!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இன்று, வெளியாகியுள்ள திரைப்படம் "பைசன் காளைமாடன்." படம் எப்படி இருக்கிறது, இதோ விமர்சனம் (Bison Review).
ஜாதிய பாகுபாடுகள் கொண்ட மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், ஒடுக்கப்பட்ட ஜாதி குடும்பத்தில் பிறந்த கிட்டான் (துருவ் விக்ரம்) எப்படி பல தடைகளை தாண்டி மிகப்பெரிய கபடி வீரராக மாறினார் என்பதுதான் படத்தின் ஒன்லைன். கதை யூகிக்கப்பட்டதுதான் என்றாலும், ஜாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கான காட்சிகள் வலிந்து திணிக்கப்படவில்லை.

பாகுபாடுகளும், மோதல்களும் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருக்கின்றன, கிட்டான் முயற்சிகள் மறுபக்கம் போய்க்கொண்டே உள்ளன. இந்த ஏற்றத்தாழ்வுள்ள மற்றும் பாகுபாடு கொண்ட மண்ணில் இருந்து, எந்த வேலிகளுக்குள்ளும், அடைபடாமல் வானத்தை நோக்கி பறக்க வேண்டியதுதான் உங்கள் வேலை என்பதுதான் படத்தின் அடிநாதம்.
சர்ச்சை இல்லை
டிரைலரை பார்த்து பலரும் கணித்ததை போலவே, இரு ஜாதிகளைச் சேர்ந்த, மக்கள் ஆதரவுள்ள இரு முக்கிய புள்ளிகளை ரெஃபரன்ஸ் வைத்து படம் நகர்கிறது. ஆனால், எந்த தரப்பும் அதிருப்தியடைந்துவிடக் கூடாது என்பதில் இயக்குநர் முடிந்த அளவுக்கு கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்.
கந்தசாமியாக வரும் லால், பாண்டியராஜனாக வரும் அமீர் ஆகியோர் இடையேயான சொந்த சண்டை, ஜாதிய சண்டையாக மாறி தொடர்ந்து மோதல்கள் நடப்பதாகவே காட்சியமைப்பு வைக்கப்பட்டிருப்பதும், மாற்று ஜாதியைச் சேர்ந்த பி.டி. வாத்தியார் துருவுக்கு பக்க பலமாக இருப்பதாக காட்சியிருப்பதும், இயக்குநரின் மெச்சூரிட்டியை காட்டுகிறது.

தனது தீவிர ஆதரவாளராக இருந்தாலும் ஆதிக்க மனப்பாங்கோடு பேசும் நபரை அமீர் கண்டிப்பதும், லால், ஜாதி பாகுபாடு பார்க்காமல் பழகுவதும் இவ்விரு கதாப்பாத்திரங்கள் ஏற்படுத்திவிடுமோ என்று அச்சப்பட்ட சர்ச்சை அக்னியை ஊதி அணைத்துள்ளது.
துருவ் விக்ரம்
முதல் பாதியில் துருவ் விக்ரம் நடிப்பு இன்னும் மெருகேறியிருக்கலாம். அப்பாவை பிறர் தாக்கும் காட்சிகளில் மட்டும் வெளிப்படும் வேகம் பிற காட்சிகளின்போது வரவில்லை. இன்னும் முகத்தில் பல பாவனைகளை கொண்டுவர பழகுவார் என்று நம்புகிறோம். ஆனால் துருவை மட்டுமே சொல்லியும் தப்பில்லை, நடிப்பு அரக்கன் பசுபதியுடன் அதிக காட்சிகளில் திரையை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை அவருக்கு. அதனால்தானோ என்னவோ, வித்தியாசம் பளிச்சென தெரிகிறது. படத்தின் ஹீரோ பசுபதி என்ற எண்ணம் பல இடங்களில் வருகிறது. ஜப்பான் காட்சிகளில் துருவ் நடிப்பு மேம்பட்டு உள்ளது.

அனுபமா பரமேஸ்வரன்
இந்த கதையில் ஹீரோயின் போர்ஷன் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் வேகம் பிடித்திருக்கும். அனுபவமாவிற்கு இதில் அழுத்தமான பாத்திரம் இல்லை. அவரைவிடவும், துருவ் அக்காவாக வரும் ரஜிஷாவுக்குதான் அதிக காட்சிகள் உள்ளன.
கிளைமேக்ஸ் நெருங்கும்போது வரும் லிப் கிஸ் காட்சிக்காகவும், வயது முதிர்ந்த பெண்ணுடன் வயது குறைந்த ஆணுக்கு வரும் காதல் என்ற மாரி செல்வராஜின் டெம்ப்ளெட்டுக்காகவும், அனுபமா பயன்பட்டுள்ளார். ஆழமான அக்கா கேரக்டருக்கு மண் மணத்தோடு ஒரு நடிகையை களமிறக்கியிருக்கலாம். ரஜிஷா என்னதான் உருக்கமாக நடித்தாலும், முகத்தில் மலையாள தேசம் அப்படியே பிரதிபலித்துவிடுகிறது.
கத்தரி போட்டிருக்கலாம்
கதைக்குள் இருக்கும் பரபரப்பை விட, கதையை சுற்றியுள்ள கதாப்பாத்திரங்கள் பரபரப்பாக இயங்கியபடியே உள்ளனர். அந்த பாத்திரங்கள்தான் நாயகனையும் உந்தி தள்ளி கொண்டே போகின்றன. இதில், ரஜிஷா உட்பட பல கதாப்பாத்திரங்களுக்கான, கிளைக் கதைகளை கட் செய்திருந்தாலும் படம் இன்னும் வேகமாக ஓட்டம் பிடித்திருக்கும். இரண்டாம் பாதி நீளத்தை குறைப்பதையும் மாரி செல்வராஜ் யோசித்திருக்கலாம்.

பைசன் படம் எப்படி இருக்கிறது?
ஆரம்பத்திலேயே ஜப்பானை காட்டாமல் கதை களத்திற்குள் காட்சி வந்திருந்தால், யாருக்கு என்ன நடந்திருக்குமோ என்ற பதைபதைப்பு பார்ப்பவர்களுக்கு இருந்திருக்கும். அந்த சான்சை மாரி செல்வராஜ் தவறவிட்டுள்ளார். அதேநேரம், கர்ணன் போல கழுதை குறியீடுகளை காட்டுவதிலோ, வாழை போல காதலை காட்டுவதிலோ அதிக நேரத்தை செலவிடாமல் மைய கதைக்குள் பெரும்பகுதி நிற்பது பெரும் ஆறுதல். இதிலும் புத்தர் சிலை வருகிறது, ஆனால் ஒரு இடத்தில் மட்டுமே. பசுபதி, அமீர் பாத்திரங்கள் பேசும் சில வசனங்கள் ஷார்ப்பான யதார்த்தம். மொத்தத்தில்.. பைசன் படம், பரியேறும் பெருமாளுக்கு கொஞ்சம் கீழே, வாழை-க்கு மேலே..
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல்












Click it and Unblock the Notifications