“திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்து சமூகத்திற்கு சொந்தமானது” - அண்ணாமலை
சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் தீப தூணில் தீபம் ஏற்றும் வழக்கில், சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். அதில், மலையின் 3 இடங்களை தவிர, மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தம் என்று கூறியுள்ளார்.
"திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் தர்கா, நெல்லித்தோப்பு மற்றும் படிக்கட்டு மசூதிக்கு சொந்தமானது. ஆனால், மற்ற அனைத்து இடங்களும் இந்துக்களுக்கு சொந்தமானது. அதேபோல, கடந்த 2014ம் ஆண்டு வந்த தீர்ப்புக்கும், தற்போது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உண்மையை திரித்து கூறியிருக்கிறார்.

2014ம் ஆண்டு தீர்ப்பு என்பது வேறு. அது மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், தற்போதைய வழக்கு தீப தூணில், தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறுகிறது. தர்காவில் இருந்து சுமார் 50 மீ தள்ளி இருக்கும் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் தற்போதைய வழக்கு. தர்காவும், தீப தூணும் வேறு வேறு மலையில் இருக்கிறது. எனவே இரண்டு வழக்குகளும் வெவ்வேறு. சட்டத்துறை அமைச்சர் கூறியது தவறு.
கடந்த 1996ம் ஆண்டு வந்த தீர்ப்பில் கூட, தர்காவில் இருந்து 15 மீ தள்ளி தீபம் ஏற்றலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் 2014ல் இந்த வழக்கை முடித்துவிட்டனர் என்று அமைச்சர் ரகுபதி பேசியிருக்கிறார். இல்லை, இந்த வழக்கு குறித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறிப்பிட்டிருக்கிறார்" என்று தெரிவித்திருக்கிறார்.
-
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான்












Click it and Unblock the Notifications