ஸாரி.. இங்கே இடமில்லை.. ஓபிஎஸ், தினகரன், சசிகலாவிற்கு மொத்தமாக ஜெயக்குமார் சொன்ன மெசேஜ்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மட்டுமே கூட்டணி இருக்கும் என்றும், ஓ.பன்னீர் செல்வம், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுக கூட்டணியில் இடம்பெற மாட்டார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அதிமுகவின் அனைத்து அணிகளையும் இணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக சசிகலா கூறியுள்ள கருத்து நகைப்புக்குரியது என்றும் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.

ஜெயக்குமார் பேட்டி
இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் நினைவிட நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டிருக்கக்கூடிய மேடையிலே நினைவு நாளின் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஜெயக்குமார் கூறுகையில், அரசியல் மற்றும் சினிமாவில் துருவ நட்சத்திரத்தை தொட்டவர் எம்ஜிஆர். அவருக்கு அதிமுகவின் எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள், நிர்வாகிகள் அனைவரும் மரியாதை செலுத்தி இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

சசிகலா கருத்து
தொடர்ந்து அதிமுக பற்றி சசிகலா பேசிய கருத்து குறித்த கேள்விக்கு, ஆடு நனைகிறது என்று ஓணான் அழுக கூடாது. அதிமுகவுக்கும், சசிகலாவுக்கு என்ன சம்மந்தம் இருக்கிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரனை ஒன்றிணைப்பதற்காக பணியை வேண்டுமானால், சசிகலா செய்யலாம். அதிமுகவில் எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் ஐநா சபைத் தலைவர் போல் பேசியுள்ள சசிகலாவின் கருத்து நகைப்புக்குரியது. அதிமுகவில் இருந்து சிலர் சென்றார்கள். அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவரின் கருத்து தேவையில்லாதது என்று தெரிவித்தார்.

அதிமுக தலைமையில் கூட்டணி
பின்னர் பாஜக சார்பில் அனைவரையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைக்க முயற்சி செய்தால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு, அதிமுக தலைமையில் தான் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக கூறியுள்ளார். அதனால் அதிமுக ஒதுக்கும் இடங்கள் தான் மற்ற கட்சிகளுக்கு கிடைக்கும்.

மூவருக்கும் இடமில்லை
கடந்த தேர்தல் சுமூக உடன்பாடு ஏற்பட்டு, அதிமுக ஒதுக்கிய இடங்களில் மற்ற கட்சிகள் போட்டியிட்டன. அதிமுகவை யாரும் வற்புறுத்த முடியாது. அதுமட்டுமல்லாமல் அதிமுக கூட்டணியில் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை சேர்க்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார் என்று தெரிவித்தார்.

பொங்கல் பரிசு விவகாரம்
அதேபோல் திமுக ஆட்சி மீது மக்களிடையே கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதனை மக்களிடம் கொண்டு செல்கிறோம். எதிர்க்கட்சியாக இருக்கும் போது, பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் கொடுக்கலாம் என்றார்கள். ஆனால் பொங்கல் பரிசாக ரூ.1,000 மட்டுமே கொடுக்கிறார்கள். அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது என்பதால் மட்டுமே திமுக அரசு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரும்பு விவசாயிகளுக்கும், கைத்தறி நெசவாளர்களுக்கும் திமுக அரசு துரோகம் செய்துள்ளது என்று தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications