2 தொகுதிகளிலும் போட்டி.. பாஜகவுக்கு ஏமாற்றத்தைத் தந்த அதிமுக
Recommended Video
சென்னை: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் வேட்பாளர்களை அறிவித்து பாஜகவுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது பாஜக.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் அக்டோபர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24-ல் எண்ணப்படுகின்றன.
நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியும் விக்கிரவாண்டியில் திமுகவின் நா. புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். இதனிடையே 2 தொகுதிகளிலும் போட்டியிட அதிமுக விருப்ப மனுக்களைப் பெற்று வந்தது.

பொன்னார், நயினார்
ஆனால் நாங்குநேரியில் போட்டியிட பாஜகவும் விரும்பியதாக தகவல்கள் வெளியாகின. நாங்குநேரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அல்லது நயினார் நாகேந்திரனை போட்டியிட வைக்க பாஜக விரும்பியதாகவும் கூறப்பட்டது.

அதிமுக வேட்பாளர்கள்
இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாத போதும் பாஜக தலைவர்கள் பூடகமாகவே கருத்துகளை கூறிவந்தனர். தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி இரு தொகுதிகளிலுமே அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கை கொடுக்காத கூட்டணி
நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன், விக்கிரவாண்டியில் முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அதிமுக அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது அதிமுக. ஆனால் பெரும் தோல்வியைத்தான் சந்தித்தது அக்கட்சி.

பாஜகவுக்கு ஏமாற்றம்
அதனால் அண்மையில் வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலின் போது பாஜகவை கண்டுகொள்ளவில்லை அதிமுக. தற்போதும் 2 தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவின் கோரிக்கையை அதிமுக சட்டை செய்யாமல் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இது பாஜகவுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications