Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாதிய வன்மத்தோடு மோசமாக பேசினார்.. டிஆர் பாலு மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக புகார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்.முருகன் குறித்து சாதி ரீதியாக விமர்சித்ததாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பரில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டு சென்னை தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்க தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. மத்திய அரசு சார்பாக குழுவும், மத்திய அமைச்சர்களும் நேரடியாக வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். எனினும் இரண்டு மாத காலம் ஆகியும் தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது.

BJP filed a complaint against DMK MP TR Baalu in National Commission for Scheduled Castes

இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு புயல் பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. என விமர்சித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தேவையான உதவிகள் செய்ய முன்வரவில்லை என குற்றம்சாட்டி பேசினார். அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டு பேச முயன்றார். இதனால் கோபமடைந்த டி.ஆர்.பாலு அவரை அமரும்படி கூறினார். இதில் திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நீங்கள் இந்த பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவர் என டி.ஆர்.பாலு, எல்.முருகனைப் பார்த்து ஆவேசமாக பேச, பாஜகவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து டிஆர் பாலு, தகாத வார்த்தையை சொல்லியிருப்பதாக பாஜக உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். எங்கள் அமைச்சரை தகுதியற்றவர் என சொல்லக்கூடாது என மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர்.

நீங்கள் ஒரு தலித் அமைச்சரை தகுதியற்றவர் எனக் கூறி ஒட்டுமொத்த பட்டியல் சாதியினரையும் அவமதித்து விட்டீர்கள் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறினார். டிஆர் பாலு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக.வினர் முழக்கம் எழுப்பினர். மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஒரு தலித் அமைச்சரை அமைச்சராக பார்ப்பதில் திமுகவுக்கு விருப்பமில்லை. டிஆர் பாலு நாடாளுமன்றத்தில் உபயோகிக்ககூடாத வார்த்தையை உபயோகித்துவிட்டார் எனத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் டிஅர் பாலுவை கடுமையாக விமர்சித்தார்.

இந்தநிலையில் திமுக எம்.பி டிஆர்பாலு பேச்சை கண்டித்து தமிழக பாஜக பட்டியலின அணியின் மாநில பொதுச் செயலாளர் நாகராஜ் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் அமைந்துள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் டி.ஆர்.பாலு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சாதிய உள்நோக்கத்தோடும் மிக மோசமாக சாதிய வன்மத்தோடும் சாதிய அதிகார அடக்குமுறை ஆணவத்தோடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை இழிவுபடுத்தும் விதமாக பேசியதற்கு டி.ஆர் பாலு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+