எகிறி அடிப்போம்.. எச்சரித்த சேகர் பாபு.. தல எல்லோரும் பாருங்க.. "அந்த" போட்டோவை கிளறிய எச். ராஜா!
சென்னை: மதுரை ஆதீனத்திற்கு எதிராக பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு பாஜக நிர்வாகி எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆளும் திமுக அரசுக்கு எதிராக மதுரை ஆதீனம் பேசி வருகிறார். கடுமையான விமர்சனங்களை அரசுக்கு எதிராக மதுரை ஆதீனம் அரிகர தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியர் வைத்து வருகிறார்.
முக்கியமாக கோவில்களை அரசு நிர்வகிக்க கூடாது. இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை நிர்வகிக்க கூடாது என்று அவர் கூறி வருகிறார்.

கோவில்
அதோடு, கோவில்களில் அரசுக்கு என்ன வேலை? கோவில் அரசியல் புகுந்துவிட்டது. ஆதீனம் அரசியல் பேச கூடாது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் கோவில்களில் ஏன் அரசியல் இருக்கிறது. இந்து கோவில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்த விடுவிக்க வேண்டும். இதற்காக மடாதிபதிகள், ஆதீனங்கள் கொண்ட தனி வாரியம் அமைக்க வேண்டும். அரசு கோவிலைகளில் இருந்து வெளியேற வேண்டும்.

ஆதீனம்
கருவூலங்களைப் பார்வையிட அவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் ஆதீனம் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார். அதில், நாங்கள் அடங்கி போகிறோம் என்று திமிர கூடாது. முதல்வரின் வழிகாட்டுதலால் நாங்கள் அடக்கி வாசித்துக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் நினைத்தால் எகிறி அடிக்க முடியும். ஆனால் அது நன்றாக இருக்காது.

சேகர் பாபு
அதனால் சற்று பின்னால் வருகிறோம். இதை பயமாக கருத கூடாது. மதுரை ஆதீனம் அரசியல்வாதி போல பேசிக்கொண்டு இருக்கிறார். ஆதீனங்கள் உரிமையில் நாங்கள் தலையிடவில்லை. எங்களிடம் அவர்கள் மோத கூடாது. எங்களின் பதுங்கலை அவர் பார்த்து நாங்கள் பயப்படுகிறோம் என்று கருத வேண்டாம், என்று சேகர் பாபு குறிப்பிட்டு இருந்தார். அதோடு, பழைய சேகர் பாபுவை பார்த்துவிட வேண்டாம் என்று அவர் கூறியதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகின.

எச். ராஜா
இந்த நிலையில் மதுரை ஆதீனத்திற்கு எதிராக பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு பாஜக நிர்வாகி எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், பழைய சேகர்பாபுவை பார்க்க வேண்டியிருக்கும் என்று நேற்று கூறியிருந்தார். இந்த தல எல்லோரும் பாத்துக் கோங்க, என்று சேகர் பாபுவை விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து எச். ராஜா இந்த விமர்சனங்களை வைத்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications