விட்டா, திருவள்ளுவருக்கே விபூதி அடிப்பாங்க போல பாஜக.. கே.எஸ்.அழகிரி கொந்தளிப்பு!
சென்னை: திருவள்ளுவர் சிலை மீது காவியை அடித்து திருவள்ளுவரை சமய துறவியாக ஆக்க பாஜகவினர் முயற்சி மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
விருதுநகரில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்த போது பேசியவதாவது: கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது குறித்த கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியில் குறை இருப்பது என்பது உண்மையாக கூட இருக்கலாம். ஒரு அமைப்பு என்பது குறையின்றி இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது அதன் பலன்களை அனுபவித்து விட்டு, தற்போது காங்கிரஸ் கட்சியில் அனுபவிக்க ஒன்றும் இல்லாததால் அவர் கட்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். கட்சியுடன் அவருக்கு கருத்து வேறுபாடு இருந்தால் அமைதியாக விலகிக் கொள்ள வேண்டும். அல்லது அதனை ஏற்றுக் கொண்டு கட்சியில் இருந்து கொண்டே அதனை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்.

திருக்குறள் - ஆளுநர் ரவி பேச்சு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவதை விட, உளறல் தான் அதிகமாக உள்ளது. எனவே, மிகச் சிறந்த முறையில் செயல் பட வேண்டும் என்பதற்காக ஆளுநர் ரவி செயல்படுகிறார் என்றார். மேலும் ஆளுநர் ரவி, ஆர்.எஸ் எஸ் பேச்சாளர் போல் செயல்படுகிறார். திருக்குறளை மொழி பெயர்த்தவர்கள், அதில் இருந்த ஆன்மீகத்தை எடுத்து விட்டு, வேண்டு மென்றே திருக்குறளை வேறு விதமாக மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் என்று, தமிழ் மொழியே தெரியாத ஆளுநர் பேசியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டை பாஜகவின் பேச்சாளர் சொல்லியிருந்தால், அது வேறு விதமாக இருக்கும். ஆனால் அதிகாரம் மையத்தில் இருப்பவர் பேசி இருக்கிறார் என்றால், அந்த பொய்யை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.

திருவள்ளுவரை துறவியாக்க பாஜக முயற்சி
இலக்கியங்கள் அனைத்திலும் ஏதாவது ஒன்றை மையப்படுத்தி பேசுவார்கள். ஆனால் திருக்குறள் மட்டும் தான் இதை எதையுமே மையப்படுத்தாமல் மனிதநேயத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட நூல். திருக்குறள் மட்டும்தான் ஒரு தமிழர் தமிழில் எழுதி, அதில் ஒரு இடத்தில் கூட தமிழ் குறித்து பயன்படுத்தவில்லை. ஜி.யு.போப் என்ற கிறிஸ்தவர் மொழிபெயர்த்தார் என்பதால், திருக்குறளை ஒரு சமய நூலாக பாஜகவினர் கருதுகிறார்கள். திருக்குறள் ஒரு சமய நூல் அல்ல. மேலும் திருவள்ளுவர் சிலை மீது காவியை அடித்து திருவள்ளுவரை சமய துறவியாக ஆக்க பாஜகவினர் முயற்சித்தார்கள்.

பரந்தூரில் விமான நிலையம் வேண்டும்
பரந்தூரில் விமான நிலையம் அமைய வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சி நிலைப்பாடு. எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் ஒரு நிலத்தில் மீது தான் அமைக்கப்படும். அதேசமயம், நிலம் கொடுத்தவர்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது தமிழக அரசு மூன்று புள்ளி 50 சதவீதம் இழப்பீடு தருவதாக அறிவித்திருக்கிறது. அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறோம். அதே போல் திட்டத்தையும், திட்டத்திற்கு நிலம் கொடுத்தவர்களை ஆதரிக்க வேண்டும். விமான நிலையம் அமைக்க நிலம் கொடுத்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சும்மா பேருக்கு இழப்பீடு வழங்கக் கூடாது.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வெற்றி
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற போவதில்லை. எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும். மக்களை ஜாதியின் பெயரால், மொழியின் பெயரால், மதத்தின் பெயரால் பாஜக பிரிப்பதை, தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் தமிழகத்தில் பாஜக வளரவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்தார்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications