Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லெஃப்ட் ஹேண்ட் டீலிங்..பாஜகவின் 50-50 கணக்கு! கொங்கில் ஓபிஎஸ்க்கு செல்வாக்கு! ’சீனியர்’ சொன்ன கணக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாஜகவை பொறுத்தவரை ஓபிஎஸ் இபிஎஸ் தான். அதிமுக இருவருக்கும் 50 -50 என்ற அடிப்படையில் தான் செயல்படுகிறது எனவும், கொங்கு மண்டலத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக மூத்த அரசியல் விமர்சகரான ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி இருக்கிறது.

அதில் அதிமுக சார்பில் கலந்து கொள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள ஓபிஎஸ் தரப்பு மீண்டும் எடப்பாடியை அவ்வாறு அழைக்கக்கூடாது என கடிதம் அனுப்பி இருக்கிறது.

மாறி மாறி ஆதரவு

மாறி மாறி ஆதரவு

தமிழக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு எழுதப்பட்டிருப்பது எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அதிமுகவுக்கு எழுதிய கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு எழுதியுள்ளார். மத்திய பொதுச்செயலாளர் என்றே அழைப்பு அனுப்பிய நிலையில், மாநில தேர்தல் ஆணையம் இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிடவில்லை என்பதால் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக மூத்த அரசியல் விமர்சகரான ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிலும் பேசியுள்ள ரவீந்திரன் துரைசாமி," பாஜகவை பொறுத்தவரை ஓபிஎஸ் இபிஎஸ் தான். அதிமுக இருவருக்கும் 50 -50 என்ற அடிப்படையில் தான் செயல்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் பாஜக ஆதரவாளராகவே இருக்கிறார். அவரைக் கட்சியிலிருந்து எடப்பாடி நீக்கியதே அதற்கு அடுத்ததாக பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்கி வைக்க தான். 15 சதவீத பலம் உள்ள எடப்பாடி பழனிச்சாமி திமுகவை எதிர்க்க தேவை என நினைக்கிறது. அதன் காரணமாகவே அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என கருதுகிறது.

 பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி மதுரை வந்தபோது கூட 50-50 என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஐந்து பேர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் என இரு தரப்புக்கும் சமமாக வாய்ப்பளிக்கப்பட்டது. என்னைப் பொருத்தவரை பாஜக எடப்பாடியை லெஃப்ட் ஹேண்ட் டீலிங் செய்கிறது. அதே நேரத்தில் ஜி 20 மாநாட்டுக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் இடைக்கால பொதுச்செயலாளர் என பாஜக அழைத்திருந்தது என எடப்பாடி தரப்பினர் துள்ளிக் குதித்தனர்.

பாஜக கணக்கு

பாஜக கணக்கு

ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை வைத்து அதிக அளவில் தொகுதிகளை வெல்ல முடியாது என்பது பாஜகவுக்கு தெரியும். அதே நேரத்தில் இருவரும் ஒன்றாக இருந்திருந்தால் ஏற்கனவே கிடைத்தது போல மரியாதை கிடைக்கும். ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடியும் ஓ பன்னீர்செல்வம் என்ற போதெல்லாம் பாஜகவும் துணை நின்று இருக்கிறது ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் பாஜக ஆதரவில் தெளிவாக இருக்கின்றனர். ஆனால் எடப்பாடி அப்படி இல்லை. இதனால் எடப்பாடி மீது எப்போதுமே பாஜக ஒரு கண் வைத்திருக்கிறது. பாஜகவுக்கு எதிராக எடப்பாடி செயல்பட்டாலும் சிவி சண்முகம் தவிர மற்றவர்கள் அவருக்கு எதிராகவே திரும்புவார்கள்.

அதிக ஆதரவு

அதிக ஆதரவு

ஒரு பிரபல தொலைக்காட்சியில் கூட எடப்பாடியை விட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் அதிக ஆதரவு இருக்கிறது என வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. இதனால் அனைவரையும் ஒன்று சேர்த்து தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என பாஜக விரும்புகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி கூட்டு தலைமையாக இருக்க விரும்பாமல் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்கு நேர் எதிராக நின்று போட்டியிடும் ஒரே தலைவராக தான் இருக்க வேண்டும் என நினைக்கிறார். இதன் காரணமாகவே அவ்வப்போது ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது பாஜக.

கொங்கில் செல்வாக்கு

கொங்கில் செல்வாக்கு

பிரதமர் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் எடப்பாடி பழனிச்சாமியால் மக்கள் ஓட்டுகளை சீட்டுகளாக மாற்ற முடியாது என்பது தெரிந்ததால் தான் அவரை எப்போதும் ஓரம் கட்டியே வைத்திருக்கின்றனர். அதன் காரணமாகத்தான் தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என அமித்ஷா கூறியிருக்கிறார். எடப்பாடிக்கு நிகரான தலைவராகவே ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். அவரும் கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத் தகுந்த செல்வாக்கை வைத்திருக்கிறார். சொல்லப்போனால் அவரது செல்வாக்கு கூடுகிறது. கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாளர்களை தவிர கொங்கு நாடார்கள், செங்குந்த முதலியார், வேட்டுவ கவுண்டர்கள், அருந்ததியர்கள், நாயுடு உள்ளிட்டவர்களை நிர்வாகிகளாக நியமித்து கொங்கு அல்லாத ஆதரவு வட்டத்தை பெருக்கி இருக்கிறார். இந்த தகவல் உளவுத்துறை மூலம் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் தெரிந்திருக்கிறது" என பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+