மின்கட்டண உயர்வு! நீங்கள் செல்வ செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? கொந்தளித்த அண்ணாமலை!
சென்னை : தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ள நிலையில், நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் சுமார் 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயுத தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன, 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும், 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் மாற்றம்" இருக்கும் என்றார்.

கூடுதல் மின் கட்டணம்
மேலும், " மாதம் 301 - 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்த பரிசீலனை, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம், மேலும், கேஸ் இணைப்பை போல, 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம் எனவும், ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு என கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுப்பதாக கூறிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,"தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.1 உயர்த்த பரிசீலனை. வணிக மின் நுகர்வோருக்கு ரூ.50 உயர்த்த பரிசீலனை செய்யப்படுவதாகவும், விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினால் யூனிட் ஒன்றுக்கு 70 பைசா உயர்த்த பரிசீலனை நடக்கிறது என்றார்.

வேறு வழியில்லை
மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடர்பு கழகத்திற்கு 43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து தற்போது வரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடி ரூபாயாக உள்ளது எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உதைத்திட்டத்தில் இணைந்தாலும் தொடர்ந்து இழப்பையே சந்தித்துள்ளது. இதன் மூலம் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற அவர் எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டணத்தை 8 வருட இடைவெளிக்குப் பிறகு உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை" என கூறினார்.
Recommended Video

அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில், தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்திருப்பதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"பல சாக்குப் போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின்துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை இன்று உயர்த்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில், சிலரைப் பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா?" என பதிவிட்டுள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications